செய்திகள் :

Doctor Vikatan: 26 வயதுப் பெண்... கரகரப்பான, ஆண் தன்மையுடன் குரல்... மென்மையாக மாற்ற முடியுமா?

post image

Doctor Vikatan: நான் 26 வயதுப் பெண். என் குரல் கரகரவென இருக்கிறது. ஆண் குரல் போல உள்ளதாகப் பலரும் கிண்டல் செய்கிறார்கள். குரலை மென்மையாக மாற்ற ஏதேனும் சிகிச்சைகள் உள்ளனவா?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த, குழந்தைகளுக்கான இ.என்.டி சிகிச்சை மருத்துவர் பிரவீன் பாஸ்கர்.

இ.என்.டி சிகிச்சை மருத்துவர் பிரவீன் பாஸ்கர்
இ.என்.டி சிகிச்சை மருத்துவர் பிரவீன் பாஸ்கர்

ஒரு பெண்ணின் குரல் இயற்கையிலேயே கம்பீரமாகவோ அல்லது சற்று கரகரப்பாகவோ இருக்கலாம். இதை ஒரு மருத்துவப் பிரச்னை என்று சொல்ல முடியாது. இருப்பினும், உங்கள் குரல் எப்போதும் கரகரப்பாகவோ அல்லது வழக்கத்தைவிட மிகவும் கரகரப்பாகவோ இருந்தால், சிகிச்சை பெறுவதற்கு முன் அதற்கான காரணத்தைக் கண்டறிவது முக்கியம்.

ஹார்மோன் மாற்றங்கள், குரல் நாண்களில் (vocal cords) ஏற்படும் வீக்கம், நெஞ்செரிச்சல் (acid reflux), தைராய்டு கோளாறுகள் மற்றும் குரல் நாண் தடிப்புகள் (vocal cord nodules) ஆகியவை ஒரு பெண்ணின் குரலைப் பாதிக்கலாம். சில நேரங்களில் குரல் நாண்களின் அமைப்பைப் பொறுத்தும் குரல் இயற்கையிலேயே கரகரப்பாக இருக்கலாம்.

எனவே, முதலில் காது-மூக்கு-தொண்டை பிரச்னைகளுக்குச் சிகிச்சை அளிக்கும் இ.என்.டி மருத்துவரை அணுகி, உங்கள் குரல் நாண்களைப் பரிசோதித்து குரல் கரகரப்பிற்கான காரணத்தைக் கண்டறிய வேண்டும்.

எந்தவொரு மருத்துவப் பிரச்னையும் இல்லை என்றால், 'வாய்ஸ் தெரபி' (Voice therapy) உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும். பேச்சு மற்றும் மொழிப் பயிற்சியாளர் (speech-language pathologist) அல்லது குரல் பயிற்சியாளர், உங்கள் குரலின் தரம், அதிர்வு, குரல் ஸ்ருதி (pitch) மற்றும் குரல் கட்டுப்பாட்டை மேம்படுத்துவதற்கான பயிற்சிகளை உங்களுக்குக் கற்றுக்கொடுப்பார்கள். இந்தப் பயிற்சிகள் உங்கள் குரல் நாண்களைப் பாதிக்காமல், இயல்பான  குரலை வளர்த்துக்கொள்ள உதவும்.

கரகரப்பான குரல் இருப்பதால் உங்களிடம் ஏதோ குறைபாடு இருப்பதாக நினைக்கக் கூடாது.

முதலில், கரகரப்பான குரல் இருப்பதால் உங்களிடம் ஏதோ குறைபாடு இருப்பதாக நினைக்கக் கூடாது. சிகிச்சையின் நோக்கம் குரல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதும் மருத்துவப் பிரச்னைகளைச் சரிசெய்வதும்தானே தவிர, ஒரு பெண் இப்படித்தான் பேச வேண்டும் என்ற சமூகத்தின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்வது அல்ல.

உங்கள் குரலை வலுக்கட்டாயமாக உயர்த்த முயற்சி செய்யாதீர்கள். இது உங்கள் குரல் நாண்களுக்கு அதிக அழுத்தத்தைத் தரும். தொண்டையை எப்போதும் ஈரப்பதத்துடன் (hydrated) வைத்துக்கொள்ளுங்கள், புகைபிடித்தல் மற்றும் தொண்டைக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் பிற பழக்கங்களைத் தவிர்க்கவும்.

உங்கள் குரல் கரகரப்பு மூன்று வாரங்களுக்கு மேலாக நீடித்தால், குறிப்பாக, அது புதிதாக வந்திருந்தாலோ அல்லது நாளுக்கு நாள் அதிகமானாலோ உடனடியாக மருத்துவரை அணுகவும். ஆரம்பத்திலேயே பரிசோதிப்பது சரியான சிகிச்சையைப் பெறவும் சீக்கிரமே குணமாகவும் உதவும். முறையான பரிசோதனை மற்றும் வழிகாட்டுதலுடன், குரலின் தரத்தைப் பாதுகாப்பான முறையில் மேம்படுத்துவது முற்றிலும் சாத்தியமே.

டாக்டர் பிரவீன் பாஸ்கர்:

சென்னை, வானகரம் அப்போலோ மருத்துவமனையில் இ.என்.டி சிகிச்சைப் பிரிவின் மூத்த மருத்துவ ஆலோசகர் மற்றும் குழந்தைகளுக்கான இ.என்.டி சிகிச்சை சிறப்பு மருத்துவர்.


உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.  

Doctor Vikatan: மனிதர்களுக்கும் வரும் Tailbone Pain... உட்கார்ந்து இருப்பவர்களுக்கான அலாரம்!

Doctor Vikatan: என்னுடைய நண்பர் ஒருவர் கடையில் வேலை பார்க்கிறார். பல மணி நேரம் உட்கார்ந்தபடியே வேலை பார்ப்பதால் அவருக்கு உட்காரும் இடத்தில் வலி வந்துள்ளது. மருத்துவரைப் பார்த்தபோது, அது டெயில்போன் வலி... மேலும் பார்க்க

Doctor Vikatan: தீவிரமான TB பாதிப்பு... 35 வருடங்கள் கடந்த நிலையில் கேன்சரை ஏற்படுத்துமா?

Doctor Vikatan:என் வயது 67. எனக்கு தீவிரமான டிபி பாதிப்பு ஏற்பட்டு அதிலிருந்து முற்றிலும் குணமாகி 35 வருடங்கள் ஆகிவிட்டன. இந்நிலையில் எனக்கு புற்றுநோய் வர வாய்ப்புகள் உண்டா?-Ravidaivanayagom Ravi, விக... மேலும் பார்க்க

Doctor Vikatan: பிறந்த குழந்தைக்கு மீசை... வைரல் போட்டோ... இப்படியும் நடக்குமா?

Doctor Vikatan:பிறந்த குழந்தை ஒன்றுக்கு அடர்த்தியான, கறுப்பான மீசை இருப்பது போன்ற போட்டோ சமூக வலைதளங்களில் கடந்த சில நாள்களாக வைரலாகி வருகிறது. அது உண்மைதான் எனச் சிலரும், ஏஐ-யில் உருவாக்கப்பட்டது எனச... மேலும் பார்க்க

Doctor Vikatan: மார்பகங்களின் அடியில் அரிப்பு... அடிக்கடி வரும் பிரச்னைக்குத் தீர்வு உண்டா?

Doctor Vikatan: என் வயது 36. எனக்கு மார்பகங்களின் அடியில் அடிக்கடி அரிப்பு வருகிறது. அது சில நாள்கள் நீடிக்கிறது. சொரிந்து சொரிந்து அந்தப் பகுதியே புண்ணாகிறது. சிவந்து போகிறது. இது ஏதேனும் தொற்றுநோயின... மேலும் பார்க்க

Doctor Vikatan: உயிரைப் பறிக்குமா மஞ்சள் காமாலை... உயிர் காக்கும் சிகிச்சைகள் இல்லையா?

Doctor Vikatan:என்னுடைய உறவினர்களில் இருவர் மஞ்சள் காமாலை பாதிப்பில் உயிரிழந்து விட்டனர். மருத்துவம் இவ்வளவு முன்னேறியுள்ள இந்தக் காலத்திலும் மஞ்சள் காமாலை பாதிப்புக்கு உயிர் காக்கும் சிகிச்சைகள் இல்ல... மேலும் பார்க்க

Doctor Vikatan: ஷர்மிளா தாகூருக்கு நுரையீரல் புற்றுநோய்! புகைப்பழக்கம் இல்லாமலும் வருமா?

Doctor Vikatan: பாலிவுட் நடிகை ஷர்மிளா தாகூருக்கு நுரையீரல் புற்றுநோய் பாதித்து அதிலிருந்து அவர் மீண்டதாக சமீபத்தில் ஒரு செய்தி படித்தேன். புகைப் பழக்கம் உள்ளவர்களுக்கு நுரையீரல் புற்றுநோய் வருவதாகக் ... மேலும் பார்க்க