செய்திகள் :

Doctor Vikatan: Post Diwali Weight gain... இதையெல்லாம் செய்தால் பழைய எடைக்குத் திரும்பலாம்!

post image

Doctor Vikatan: என்னதான் உணவுக்கட்டுப்பாடு, உடற்பயிற்சி என இருப்பவர்களுக்கும், தீபாவளியை ஒட்டி, சில கிலோ எடை  ஏறுவதைத் தவிர்க்க முடியாது.  அப்படி அதிகரிக்கும் எடையானது சிலருக்கு அப்படியே தங்கிவிடுகிறது.  தற்காலிகமாக அதிகரிக்கும் இந்த எடையைக் குறைத்து, மீண்டும் பழைய உடல்வாகுக்குத் திரும்ப என்ன செய்ய வேண்டும்?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த உணவியல் ஆலோசகர் அம்பிகா சேகர்.

அம்பிகா சேகர்
உணவியல் ஆலோசகர் அம்பிகா சேகர்

என்னதான் உணவுப்பழக்கத்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர்கள் என்றாலும், இப்படி விதம்விதமான, வித்தியாசமான இனிப்புகளைப் பார்க்கும்போது, அந்தக் கட்டுப்பாடு தளரவே செய்யும். அப்படிப்பட்ட சூழல்களில், பிடித்த ஸ்வீட்ஸை சிறிய அளவில் மட்டும் எடுத்துக்கொள்ள வேண்டும். அந்த வகையில் மனதை முதலிலேயே தயார்படுத்தி, கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள வேண்டும்.

தீபாவளி உள்ளிட்ட பண்டிகை நேரத்தில் அதிக கலோரி கொண்ட உணவுகளைச் சேர்த்துக்கொள்ளக் கூடாது என்பதில் கவனமாக இருக்க வேண்டும். புதிதாக ஏதேனும் இனிப்பு வகையை ருசிக்க விரும்புபவர்கள், அதை மிகவும் குறைந்த அளவில் மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதை ஒரு விதியாகவே பின்பற்ற வேண்டும்.

உணவைப் பொறுத்தவரை, சத்தான உணவுகளாகவும் காய்கறிகளாகவும் அதிகளவில் எடுத்துக்கொள்வது நல்லது. முதலில் காய்கறிகளைச் சாப்பிட்டுவிட்டு, அதற்குப் பிறகு வடை, அப்பளம், பாயசம் போன்றவற்றை அன்றைய நாளுக்காக மட்டும் சிறிதளவு எடுத்துக்கொள்ளலாம். எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் இருப்பதற்கு பதிலாக, இந்த முறையைப் பின்பற்றலாம். அல்லது, மாவுச்சத்து (கார்போஹைட்ரேட்) நிறைந்த உணவுகளை அறவே  தவிர்த்துவிட்டு, அன்றைய தினத்தில்  கொஞ்சம் ஸ்வீட்ஸ்  சாப்பிட்டுக் கொள்ளலாம்.

புதிதாக ஏதேனும் இனிப்பு வகையை ருசிக்க விரும்புபவர்கள், அதை மிகவும் குறைந்த அளவில் மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதை ஒரு விதியாகவே பின்பற்ற வேண்டும்.

எப்படி இருந்தாலும், ஸ்வீட்ஸ் என்பவை உடலில் அதிக கலோரிகளைச் சேர்த்துவிடும். எனவே, ஸ்வீட்ஸ் சாப்பிடும்போது  உடலுக்கு எக்ஸ்ட்ரா வேலைகள் கொடுத்து ஆக்டிவ்வாக வைத்திருக்க வேண்டும். குறிப்பாக, பண்டிகை நாள்களில் இனிப்பு சாப்பிட்டு ரெஸ்ட் எடுப்பதைத் தவிர்த்து உறவினர்கள், நண்பர்களைச் சென்று பார்ப்பது போன்ற செயல்களில் ஈடுபடலாம்.

தீபாவளி முடிந்த பிறகு வரும் அடுத்த 9 அல்லது 10 மணி நேரங்களில் அல்லது அடுத்த நாளில் இருந்து, நாம் சேர்த்த கூடுதல் கலோரிகளை உடலில் இருந்து வெளியேற்ற (டீடாக்ஸ்) நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு ஒரு நாள் முழுவதும் பழங்கள் மற்றும் திரவ உணவுகளை மட்டும் உட்கொள்ளும் முறையைப் பின்பற்றலாம். எலுமிச்சை நீர், மோர், இளநீர் மற்றும் பழங்கள் போன்றவற்றை எடுத்துக்கொள்ளலாம். இளைஞர்கள் 48 மணி நேரம் வரைகூட இந்தத் திரவ உணவு முறையைத்  திட்டமிடலாம். பெரியவர்களால் அது முடியாது என்றால், குறைந்தபட்சம் 24 மணி நேரமாவது திட்டமிடலாம்.

பழங்கள், டிரை ஃப்ரூட்ஸ், பச்சைக் காய்கறி சாலட்டுகள், தக்காளி ஜூஸ் போன்றவற்றை ஒன்றிரண்டு நாள்களுக்குப் பின்பற்றுவதன் மூலம் கூடுதல் கலோரிகளைக் குறைத்துவிட முடியும். அத்துடன் உடற்பயிற்சி செய்வதும் மிகவும் அவசியம். மற்ற நாள்களில் உடற்பயிற்சி செய்கிறோமோ இல்லையோ, இந்த நாள்களில் நிச்சயமாகச் செய்ய வேண்டும். அப்போதுதான் கொழுப்பு உடலில் சேராமல் இருக்கும்.

மற்றபடி மனக்கட்டுப்பாடுதான் மிக முக்கியம். பண்டிகை என்றால்  எல்லாரையும் சந்திக்கிறோம், மகிழ்ச்சியாக இருக்கிறோம், இதை மட்டும்தான் மனதில் கொள்ள வேண்டும். சாப்பிடுவதற்காக மட்டுமே செல்கிறோம் என்ற எண்ணம் இருக்கக்கூடாது. ஒரு திருமணத்திற்குச் சென்றாலும் நாம் மனதை அப்படித்தான் பழகிக்கொள்ள வேண்டும். 

மற்ற நாள்களில் உடற்பயிற்சி செய்கிறோமோ இல்லையோ, இந்த நாள்களில் நிச்சயமாகச் செய்ய வேண்டும். அப்போதுதான் கொழுப்பு உடலில் சேராமல் இருக்கும்.

அதேபோல, இனிப்பு வகைகளை நம் வீட்டிலேயே செய்து கொஞ்சம் கொஞ்சமாகச் சாப்பிட்டால் அன்றைக்கே அது காலியாகிவிடும். ஆனால், இப்போது பலர் உபசரிப்பதற்காக  அதிகளவில் இனிப்புகளைக் கொடுக்கிறார்கள். அவர்கள் நமக்குக் கொடுத்துவிட்டார்கள் என்பதற்காக, நாமே முழுமையாகச் சாப்பிட்டு முடிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. எனவே, அந்த இனிப்புகளை  பிறருக்குப் பகிர்ந்தளியுங்கள்.

தீபாவளி நாளன்று உங்களுக்கு வரும் இனிப்புகளை, பண்டிகையைக் கொண்டாட இயலாத வசதியற்ற மக்களுக்குப் பகிர்ந்தளித்து விடுங்கள். இனிப்புகள் வீட்டிலேயே இருந்தால், அவற்றைச் சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் வந்துகொண்டே இருக்கும்.  அவற்றை வீட்டில் சேர்த்து வைக்காமல் உடனுக்குடன் பகிர்ந்து கொடுத்துவிடுவது தான் உங்களுக்கும் நல்லது, இல்லாதவர்களுக்கும் மகிழ்ச்சி!


டயட்டீஷியன் அம்பிகா சேகர்:

உணவு மற்றும் ஊட்டச்சத்து ஆலோசகராக 30 ஆண்டுக்கால அனுபவம் உள்ளவர். தற்போது சென்னையில் ஆக்ஸிமெட் மருத்துவமனையில் டயட்டீஷியனாகப் பணிபுரிகிறார்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

Doctor Vikatan: குளிர்காலத்தில் படுத்தும் மூட்டுவலி: சேர்க்க, தவிர்க்க வேண்டிய உணவுகள் தெரியுமா?

Doctor Vikatan: என் அம்மாவுக்கு 65 வயது. அவருக்கு லேசான குளிர், மழை என வானிலை மாறினாலே மூட்டு வலி வந்து அவதிப்படுவது வழக்கம். இந்த வலிக்கு சிகிச்சைகள் எடுத்துக்கொண்டிருக்கிறார். ஆனாலும், உணவுமுறையில் ... மேலும் பார்க்க

Doctor Vikatan: மழைக்காலம் வந்தாலே வயிறு பிரச்னை பண்ணுதா... உணவு விஷயத்துல தப்பு பண்ணாதீங்க!

Doctor Vikatan: மழைக்காலம் வந்தாலே,வயிறு தொடர்பான பிரச்னைகள் வருகின்றன. அஜீரணம், வயிற்றுப்போக்கு, பசியின்மை... இப்படி ஏதேனும் ஒன்று மாற்றி மாற்றிப் படுத்துகிறது. மழைக்காலத்துக்கும் செரிமான பிரச்னைக்கு... மேலும் பார்க்க

Doctor Vikatan: விந்தணு ஆரோக்கியத்தை மேம்படுத்த... இந்த உணவுகளை அவசியம் சேர்த்துக்கொள்ளுங்கள்!

Doctor Vikatan:ஆண்களின் விந்தணு ஆரோக்கியம் மற்றும் இனப்பெருக்க திறனை மேம்படுத்துவதற்குத் தேவையான சத்துகள், சாப்பிட வேண்டிய உணவுகள், தவிர்க்க வேண்டியவை என ஏதேனும் உள்ளனவா... விந்தணுக்களின் தரத்தை மேம்ப... மேலும் பார்க்க

Doctor Vikatan: கால் ஆணி தெரியும்... கைகளிலும் ஆணி பாதிப்பு வரும், தெரியுமா?

Doctor Vikatan:எனக்கு 45 வயதாகிறது. எனக்கு கை விரல்களில் ஆணி ஏற்பட்டுள்ளது. பொதுவாக பாதங்களில் தான் ஆணி வரும் என்று கேள்விப்பட்டிருக்கிறோம், ஆனால், கைகளில், குறிப்பாக விரல்களில் ஆணி வருமா... இது மற்ற ... மேலும் பார்க்க

Doctor Vikatan: மழை, குளிர் காற்று... சட்டென சளி பிடிக்காமலிருக்க இந்த உணவுகளைச் சாப்பிடுங்கள்!

Doctor Vikatan: எங்கள் வீட்டில்யாருக்குமே மழையும் குளிரும் ஒத்துக்கொள்வதில்லை. லேசான தூறலோ, குளிர் காற்றோ பட்டாலே உடனே தும்மல், மூக்கடைப்பு, சளி என சைனஸ் தொடர்பான பிரச்னைகள் படுத்த ஆரம்பித்து விடும். ... மேலும் பார்க்க

Doctor Vikatan: கிட்னி ஸ்டோன் பிரச்னையா... இந்த உணவுகளை மிஸ் பண்ணாம சாப்பிடுங்க!

Doctor Vikatan: என் வயது 42. எனக்கு கடந்த ஒரு வருடமாக கிட்னி ஸ்டோன் பிரச்னை இருக்கிறது. அவ்வப்போது வலி அதிகரித்தால் மருத்துவரைப் பார்த்து மாத்திரைகள் எடுத்துக்கொள்கிறேன். மாத்திரைகள் தவிர்த்து, இந்தப்... மேலும் பார்க்க