செய்திகள் :

Dorothy: "15 வருடங்கள், ஆயிரம் கனவுகள், எண்ணற்ற போராட்டங்கள்!" - நெகிழும் சனந்த்

post image

திரையரங்கிலும், ஓடிடி வெளியீட்டிலும் கார்த்திக் சுப்புராஜின் 'டோரதி' படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது.

படத்தில் நடித்த நடிகர்கள் சனந்த், ரிஷிகாந்திற்கும் மக்கள் பாராட்டையும் அன்பையும் தந்திருக்கிறார்கள். 'டோரதி' படத்திற்கு கிடைத்திருக்கும் அளப்பரிய வரவேற்புக்கு நன்றி தெரிவித்துப் பதிவிட்டிருக்கிறார் சனந்த்.

சனந்த்
சனந்த்

அந்தப் பதிவில் சனந்த், "15 வருடங்கள். ஆயிரம் கனவுகள். எண்ணற்ற போராட்டங்கள். தொடக்கமாக, இந்தத் தருணம். என்னை உங்களில் ஒருவனாக ஏற்றுக்கொண்டதற்கு நன்றி. ஒரு நடிகனாக என்னை ஏற்றுக்கொண்டதற்கு நன்றி.

சமீபத்தில் ஒரு பதிவில் படித்த ஒரு வரி, "பல தசாப்தங்கள் எதுவுமே நடக்காமல் கடந்து போகலாம். ஆனால், சில வாரங்களில் பல தசாப்தங்களுக்கான மாற்றங்கள் நிகழ்ந்துவிடும்" என்பது. நீங்கள் அனைவரும் என் மீது பொழிந்த அன்பும், பாராட்டுகளும் இந்த வரிகளுக்கு அப்படியே பொருந்துகின்றன.

நீங்கள் தந்த ஆசீர்வாதங்கள், இதயப்பூர்வமான அரவணைப்புகள், கண்களில் கசியும் கண்ணீர் மற்றும் என்னுடைய நடிப்பைப் பற்றிப் பேசும்போது என் பயணத்தின் ஒரு பகுதி உங்கள் பயணத்தின் ஒரு பகுதியாகவே மாறிவிட்டதைப் போல நீங்கள் வெளிப்படுத்தும் அந்த உற்சாகம்தான் எனக்குக் கிடைத்த மிகப்பெரிய விருது.

TIFF வரை பயணித்து, உங்கள் இதயங்களுக்குள் இடம்பிடித்து, என் வாழ்நாள் முழுவதும் நன்றியுடன் நினைத்துக்கொண்டே இருக்கப்போகும் ஒரு உணர்வை இந்தத் திரைப்படம் எனக்குப் பரிசளித்திருக்கிறது. நான் ஏற்றுக்கொள்ளப்பட்டேன் என்ற அந்த உணர்வும், நீங்கள் அனுப்பிய ஒவ்வொரு குறுஞ்செய்தியும், கைப்பட எழுதிய கடிதமும், கட்டுரையும், எடிட்டும், தொலைபேசி அழைப்பும் என்னுள் வார்த்தைகளால் விவரிக்க முடியாத ஒரு பகுதியைத் தொட்டுச் சென்றிருக்கின்றன.

இது தானாக நிகழ்ந்தது, இது உண்மையானது, இது எந்த எதிர்பார்ப்பும் இல்லாத தூய்மையான, நிபந்தனையற்ற அன்பு. இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு உங்களிடமிருந்து கிடைக்கும் இந்த அன்பை நான் ஒருபோதும் சாதாரணமாக எடுத்துக்கொள்ள மாட்டேன்.

டோரதி பார்த்தவர்கள், அதைப் பற்றிப் பேசியவர்கள், தங்கள் நண்பர்களுக்குப் பரிந்துரைத்தவர்கள், அந்தத் திரைப்படத்தைக் கொண்டாடியவர்கள், அதற்காகக் குரல் கொடுத்தவர்கள், அதனுடன் சேர்ந்து அழுதவர்கள், சிரித்தவர்கள் அல்லது என் நடிப்பு தங்களுக்கு என்ன அர்த்தத்தைக் கொடுத்தது என்று ஒரு நிமிடம் ஒதுக்கி என்னிடம் பகிர்ந்துகொண்டவர்கள் என அனைவருக்கும் என் இதயத்தின் ஆழத்திலிருந்து நன்றி!

சனந்த்
சனந்த்

நீங்கள் அனைவரும் என் கதையின் ஒரு பகுதியாக மாறிவிட்டீர்கள். அதேபோல், டோரதியும் உங்கள் வாழ்வின் ஒரு பகுதியாக மாறியிருக்கும் என்று நம்புகிறேன். நீங்கள் ஒவ்வொருவரும் என் தேவதைகள். உங்கள் ஒவ்வொருவரையும் நேரில் சந்தித்து, இறுக்கமாக அணைத்து, உங்கள் அன்பு எனக்கு எவ்வளவு பெரிய அர்த்தத்தைக் கொடுத்திருக்கிறது என்பதைச் சொல்ல வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.

அதுவரை, இந்த வார்த்தைகளின் வழியாக என்னால் அனுப்ப முடிந்த மிகப்பெரிய அன்பான அரவணைப்பை உங்களுக்குத் தருகிறேன். இது வெறும் ஆரம்பம்தான்! இன்னும் இன்னும் பல சுவாரஸ்யமான, சிறப்பான சினிமா நோக்கி... Lets go! எல்லாருக்கும் வரலாறு சிறப்புமிக்க ஒரு முத்தம்! டோரதி என்பது அன்பு, டோரதி என்பது நம்பிக்கை, டோரதி என்பது நாம் அனைவருமே." எனக் குறிப்பிட்டுப் பதிவிட்டிருக்கிறார்.

Scene Audio Launch: "12 வருடங்களுக்குப் பிறகு தமிழ் சினிமாவுக்கு வர காரணம் அவர்தான்..!" - நஸ்ரியா

சூர்யாவின் 'சீன்' திரைப்படம் தீபாவளி வெளியீடாகத் திரைக்கு வருகிறது. மலையாள இயக்குநர் ஜித்து மாதவன் எழுதி இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் நஸ்ரியா, நஸ்லென் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திரு... மேலும் பார்க்க

Scene Audio Launch: "அதை பார்த்துட்டு எனக்கு விழுந்த அடியை வெளியே சொல்ல முடியாது!" - கார்த்தி கலகல

சூர்யாவின் 'சீன்' திரைப்படம் தீபாவளி வெளியீடாகத் திரைக்கு வருகிறது. மலையாள இயக்குநர் ஜித்து மாதவன் எழுதி இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் நஸ்ரியா, நஸ்லென் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திரு... மேலும் பார்க்க

Scene : "தனுஷ் அவர்களுக்கு என் சிறப்பு நன்றிகள்; ஏன்னா..!" - நெகிழும் சூர்யா

சூர்யாவின் 'சீன்' திரைப்படம் தீபாவளி வெளியீடாகத் திரைக்கு வருகிறது. மலையாள இயக்குநர் ஜித்து மாதவன் எழுதி இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் நஸ்ரியா, நஸ்லென் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திரு... மேலும் பார்க்க

What To Watch: 'பத்தா', 'சிக்மா', 'அக்கா' - இந்த வாரம் ஓடிடியில் என்ன பார்க்கலாம்?

இந்த வாரம் ஓடிடி-யில் வெளியாகியிருக்கும் படங்கள் மற்றும் சீரிஸ் லிஸ்ட். திரையரங்கிற்கு பிந்தைய ஓடிடி படங்கள் ரிலீஸ் :பத்தா (Baththa - Tamil) - Netflixசிக்மா (Sigma - Tamil) - Netflixஇம்மோர்ட்டல் (Immo... மேலும் பார்க்க

Diwali Releases: 'சீன்', 'ராமாயணா' மட்டுமல்ல... இன்னும் இருக்கு! - தீபாவளி ரிலீஸ்கள் என்னென்ன?

எப்போதும் தீபாவளிக்கு வெளியாகும் படங்களுக்கு மிகுந்த எதிர்பார்ப்பு நிலவும். அந்த வரிசையில் இந்த வருடம் வெளியாகும் படங்களுக்குப் பெரிய அளவிலான எதிர்பார்ப்பு இருக்கிறது. சூர்யாவின் 'சீன்', உலகமெங்கும் ப... மேலும் பார்க்க

நடிகை வத்சலா ராஜகோபால் காலமானார்! - திரையுலகினர் இரங்கல்!

தமிழ் சினிமாவில் ரிதம், வின்னர், சதி லீலாவதி என ஏகப்பட்ட படங்கள் மற்றும் சித்தி உள்ளிட்ட சீரியல்களில் நடிதிருந்த பழம்பெரும் நடிகை வத்சலா ராஜகோபால் சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 93.சிறு வயத... மேலும் பார்க்க