செய்திகள் :

DPDP: `பத்திரிகை சுதந்திரம் கேள்விக்குறியாகும்'- வழக்கு தொடர்ந்த 21 செய்தி நிறுவனங்கள்; விவரம் என்ன?

post image

டிஜிட்டல் செய்தி இணையதளங்களின் செயல்பாடுகளுக்கும் பத்திரிகைச் சுதந்திரத்துக்கும் மத்திய அரசின் தனிநபர் தரவுப் பாதுகாப்புச் சட்டம் (DPDP Act) அச்சுறுத்தலாக இருப்பதாகக் கூறி, இந்தியாவின் 21 முன்னணி செய்தி நிறுவனங்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

இந்தியாவின் டிஜிட்டல் தனிநபர் தரவுப் பாதுகாப்புச் சட்டம், 2023 ஆம் ஆண்டு குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்று சட்டமாக்கப்பட்டது. இருப்பினும், இந்தச் சட்டம் மற்றும் அதற்கான விதிமுறைகள் (DPDP Rules, 2025) 2025 நவம்பர் 13 முதல் படிப்படியாக அமல்படுத்தப்பட்டு வருகின்றன.

Journalism
Journalism

குடிமக்களின் டிஜிட்டல் தனிப்பட்ட தரவுகளைப் பாதுகாப்பதும், தரவுகளைச் சேகரிக்கும் நிறுவனங்களின் பொறுப்புகளை வரையறுப்பதும் இந்தச் சட்டத்தின் முக்கியமான நோக்கமாகும்.

ஆனால் தனிநபர்களின் தகவல்களைப் பாதுகாப்பதற்காக மத்திய அரசு கொண்டுவந்த இந்த டிஜிட்டல் தனிநபர் தரவுப் பாதுகாப்புச் சட்டம் (DPDP Act), பத்திரிகைச் சுதந்திரத்துக்கே அச்சுறுத்தலாக மாறுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்நிலையில்தான் இந்தச் சட்டத்தின் முக்கியப் பிரிவுகளை எதிர்த்து இந்தியாவின் 21 முன்னணி செய்தி நிறுவனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் டிஜிட்டல் செய்தி வெளியீட்டாளர்கள் சங்கம் (Digital News Publishers Association – DNPA) உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளது.

இச்சட்டம் புலனாய்வுப் பணிகளை நசுக்கும் என்றும், பத்திரிகையாளர்களின் தகவலாளர்களை அடையாளம் காண வழிவகுக்கும் என்றும் அக்குழு சார்பில் வாதிட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

டிஜிட்டல் தனிநபர் தரவுப் பாதுகாப்புச் சட்டம், ஒருவரின் தனிப்பட்ட தகவல்களைச் சேகரிப்பதற்கும் பயன்படுத்துவதற்கும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்கிறது. ஆனால், செய்திகளைச் சேகரித்து மக்களுக்கு உண்மைகளைத் தெரிவிக்கும் பத்திரிகையாளர்களுக்கும் இதே கட்டுப்பாடுகளை விதிப்பது சரியல்ல என்று DNPA தரப்பு தெரிவித்துள்ளது.

உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

மேலும், தகவல்களைக் கோருவதற்குச் சட்டம் வழங்கும் அதிகாரங்கள், செய்தியாளர்களின் தகவலாளர்களை அம்பலப்படுத்தக்கூடும் என்றும் அவர்கள் கூறியிருக்கின்றனர்.

இந்தச் செயல் ஒரு செய்தி நிறுவனத்தை மூடும் நிலைக்குத் தள்ளும் மற்றும் பத்திரிகைச் சுதந்திரத்தை முடக்கும் என்று எச்சரித்துள்ளனர். இந்த மனுவை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு, மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கமளிக்குமாறு உத்தரவிட்டுள்ளது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb

``ஒரே நாளில் 17 கைதிகள் சிறையிலிருந்து தப்பிச் செல்லும் அவலநிலை நிலவுகிறது” - கனிமொழி சாடல்!

தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த தூத்துக்குடி மக்களவைத் தொகுதி உறுப்பினர் கனிமொழி, ”தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிப் பொறுப்பேற்றுக் கொண்டதிலிருந்து தமிழ்நாடு முழுவதும் கிட்டத்தட்ட ... மேலும் பார்க்க

`எட்டு தலித் அமைச்சர்கள் வந்துவிட்டால் எல்லாம் மாறிவிடுமா..?’ - அமைச்சர் வன்னி அரசு

கோவையில் சாதியப் பாகுபாடு காரணமாக தற்கொலை செய்துகொண்ட மாணவர் அகிலனின் இல்லத்திற்கு நேரில் சென்ற அமைச்சர் வன்னி அரசு, மாணவரின் உடலுக்கு மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து மாணவரின் பெற்றோ... மேலும் பார்க்க

``மக்களுக்கு 'வெற்றி தீபாவளி' பரிசாக ஆவின் பொருட்களின் விலை உயர்த்தப்பட்டிருக்கிறது"- இபிஎஸ்

தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் வேளையில் ஆவின் பால் பொருள்களின் விலை உயர்த்தப்பட்டிருப்பது, பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. பலரும் இதற்கு கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். இ... மேலும் பார்க்க

`சிலையும் இல்லை நினைவு மண்டபமும் இல்லை!'- மருது சகோதரர்கள் பிறந்த என்.முக்குளம் கிராமத்தினர் ஆதங்கம்

ஆங்கிலேய ஏகாதிபத்திய அதிகாரத்தை எதிர்த்து வரலாற்றுச் சிறப்புமிக்க ‘ஜம்புத்தீவு பிரகடனத்தை’ வெளியிட்டு, இந்த மண்ணின் சுதந்திரத்துக்காகத் தங்கள் கடைசி மூச்சு வரை போராடி உயிர் நீத்தவர்கள் மன்னர்கள் மருது... மேலும் பார்க்க

விழுப்புரம்: செஞ்சி சிறுமி மாயமான விவகாரம் - மீண்டும் ஆரம்பித்த இடத்திலேயே நிற்கும் காவல்துறை!

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி ஆலம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த வடிவேலு - பவானி தம்பதிக்கு விஜயலட்சுமி, ஹேமலதா என இரண்டு மகள்கள். மூத்த மகள் சென்னையில் தங்கி டிப்ளமோ நர்சிங் படித்து வரும் நிலையில், ஹேமலதா... மேலும் பார்க்க

இந்தியா - சீனா எல்லை பிரச்னை: "எல்லை ரோந்து மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை..!" - சீனா நிலைப்பாடு

2019-ம் ஆண்டு தொடங்கிய இந்தியா-சீனா எல்லைப் பிரச்னையில் தொடங்கிய விரிசல் கடந்த இரு ஆண்டுகளாகத்தான் ஓரளவு சரியாகி வருகிறது.2025-ம் ஆண்டு சீனா சென்று ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) மாநாட்டில் பங்கேற... மேலும் பார்க்க