செய்திகள் :

"Drishyam 3 படத்தைப் பார்த்து செய்தோம்" - நண்பனைக் கொன்ற மைனர் நண்பர்கள் சிக்கியது எப்படி?

post image

மும்பை அருகில் உள்ள தானேயைச் சேர்ந்த 17 வயது நண்பர்கள் மூன்று வெவ்வேறு கல்லூரிகளில் படித்து வந்தனர். அவர்களில் ஒருவர் தங்க செயின் அணிந்து இருந்தார். மூன்று பேரும் 10வது வகுப்பு படித்து வந்த நிலையில் தங்க செயின் அணிந்திருந்த நபரைத் திடீரென காணவில்லை.

இது குறித்து அவரது பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் கடத்தல் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர். இதையடுத்து காணாமல் போன நபரின் இரண்டு நண்பர்களைப் பிடித்து சென்று போலீஸார் விசாரித்தனர். விசாரணையில் போலீஸாரைத் திசை திருப்பும் வகையில் காணாமல் போன நபர் அடையாளம் தெரியாத ஒருவருடன் ஸ்கூட்டரில் சென்றதாக இரண்டு பேரில் ஒருவர் தெரிவித்தார்.

அந்த நபர் சொன்ன திசையில் ஸ்கூட்டர் சென்றதா என்பதைத் தெரிந்துகொள்ள 90க்கும் அதிகமான கண்காணிப்பு கேமரா பதிவுகளை போலீஸார் ஆய்வு செய்தனர்.

ஆனால் அந்த நபர் சொன்னது போன்று ஸ்கூட்டர் சென்றதற்கான எந்த வித அடையாளமும் தென்படவில்லை. இதையடுத்து மீண்டும் இரண்டு பேரிடம் தீவிர விசாரணை நடத்தியதில் கொலை செய்ததை உண்மையை ஒப்புக்கொண்டனர்.

பிடிபட்ட இரண்டு பேரில் ஒருவரின் பிறந்தநாளைச் சிறப்பாகக் கொண்டாடவும், ஒரு பைக் வாங்கவும் இருவரும் முடிவு செய்தனர். அதற்கு அவர்களது நண்பன் அணிந்திருந்த செயினைத் திருட முடிவு செய்தனர். இதற்கான அந்த நண்பரை ஆட்கள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு வைத்து கத்தியால் குத்தி நண்பரைக் கொலை செய்தனர்.

பின்னர் அவர் அணிந்திருந்த தங்க செயினைத் திருடிச்சென்றது விசாரணையில் தெரிய வந்தது. போலீஸாரின் விசாரணையைத் திசை திருப்பவும், பிடிபடாமல் இருக்கவும் கொலை செய்யப்பட்ட நபரின் மொபைல் போனைச் சேதப்படுத்தி அதனை ஒரு பஸ்சில் போட்டுவிட்டு சென்று இருந்தனர். இதன் மூலம் காணாமல் போன நபர் ஒவ்வொரு இடமாகச் சென்று கொண்டு இருப்பது போன்று காட்ட இந்த முறையைக் கையாண்டனர். வெப் சீரியஸ் மற்றும் ஆன்லைன் காணொலிகளைப் பார்த்து இது போன்று செய்ததாக அவர்கள் போலீஸாரிடம் தெரிவித்தனர்.

மேலும் சமீபத்தில் நடிகர் அஜய் தேவ்கனில் திரிஷம் 3 படத்தைப் பார்த்து அதில் வருவது போல் செய்ய முடிவு செய்ததாக போலீஸாரிடம் தெரிவித்தனர். அவர்களிடம் மேற்கொண்டு விசாரணை நடத்தியதில் உடலைப் புதைப்பதற்காக இரண்டு பேரில் ஒருவர் கொலை நடந்த இடத்திற்குச் சென்று உடலைப் புதைக்கவும் முயற்சி செய்ததும் தெரிய வந்துள்ளது.

போலீஸார் சம்பவ இடத்திற்குச் சென்று கொலை செய்யப்பட்ட மாணவர் உடலை மீட்டனர். திருடப்பட்ட செயின் 7 கிராம் கொண்டது ஆகும்.

ஈரோடு: பள்ளி மாணவர்களைக் குறிவைத்து போதை மாத்திரை விற்பனையா? 420 மாத்திரைகள் பறிமுதல்; 6 பேர் கைது

ஈரோடு மாநகர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் போதை மாத்திரை புழக்கம் அதிகரித்து வரும் நிலையில், குறிப்பிட்ட சில பகுதிகளில் விற்பனை நடைபெறுவதாக மக்கள் தகவல் தெரிவித்துள்ளனர். இதன் அடிப்படையில் ஈர... மேலும் பார்க்க

ஏழை பெண்களிடம் ரூ.25000 கொடுத்து கருமுட்டை எடுக்கும் கும்பல்; வெளிச்சந்தையில் அதிக விலைக்கு விற்பனை

மகாராஷ்டிரா பத்லாப்பூர் பகுதியில் பெண்களிடம் சட்டவிரோதமாக கருமுட்டை எடுத்து விற்பனை செய்யப்படுவதாக அமலாக்கப்பிரிவுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் சட்டவிரோதமாக கருமுட்டையை எ... மேலும் பார்க்க

17 வயது மாணவி கர்ப்பம்; இளைஞர் தலைமறைவு; கருவைக் கலைத்த மருத்துவர்கள் கைது; பகீர் பின்னணி

கன்னியாகுமரி பகுதியைச் சேர்ந்தவர் தனேஷ்(26). இவருக்கு திருமணம் ஆகி அனிதா ரோஸ் என்ற மனைவி உள்ளார். தனேஷின் வீட்டுக்கு அருகே வசிக்கும் 17 வயது சிறுமி நர்சிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.... மேலும் பார்க்க

திருச்சி: தாய், சேய்க்கு HIV ரத்தம்; ரூ. 40 லட்சம் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு

திருச்சியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், பிரசவத்துக்காக திருச்சி அரசு மகாத்மா காந்தி நினைவு மருத்துவமனையில் கடந்த 2022 - ம் வருடம் சேர்ந்தார். அவருக்கு ரத்தம் செலுத்தப்பட்டது. பின்னர், அவருக்கு ஆண் குழந்... மேலும் பார்க்க

பட்டியல் சாதியினரின் உடல் பொது சுடுகாட்டில் அடக்கம்; வாழ்வாதாரத்தை முடக்கி வஞ்சிக்கும் ஆதிக்கச்சாதி?

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகில் உள்ள பெரும்பாளி பகுதியில் பட்டியல் சமுதாய மக்கள் அதிக எண்ணிக்கையில் வாழ்ந்து வருகின்றனர். இந்த மக்களில் பலர் நிலமற்ற விவசாயக் கூலித் தொழிலாளர்களாக உள்ளனர். ஆதிக்கச் ச... மேலும் பார்க்க

தமிழக போலீசாரை மிரள வைத்த ஏடிஎம் கொள்ளை: `திருடர் பயிற்சிப் பள்ளி’ நடத்திய கும்பல் சிக்கியது எப்படி?

நள்ளிரவு நேரம்... ஆள் நடமாட்டமற்ற அமைதியான சாலைகள்... கண்ணிமைக்கும் சில நிமிடங்களில் ஏடிஎம் மையங்களுக்குள் நுழையும் மர்ம நபர்கள், அடுத்த பத்தாவது நிமிடத்தில் பல லட்சம் ரூபாய்களோடு மாயமாகி விடுகிறார்கள... மேலும் பார்க்க