செய்திகள் :

"File-ஐ திறப்பேன் என்று கூறிவிட்டு ஜெயிலைத் திறக்கிறார்" - முதல்வர் விஜய் மீது ஸ்டாலின் காட்டம்

post image

கோவை வ.உ.சி. மைதானத்தில் திராவிடர் கழகம் சார்பில் தந்தை பெரியாரின் 148 வது பிறந்தநாள் விழா மற்றும் பெரியார் அறிவுலகம் அமைத்தமைக்கான நன்றி பாராட்டு விழா நடைபெற்றது.

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், தி.மு.க தலைவர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், “இந்த விழா குழந்தைக்கு தாய் கொடுப்பது போல, தி.மு.க-விற்கு தாய் கழகமான திராவிடர் கழகம் அளித்த அன்பு முத்தம். திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகளுக்கான பாராட்டாக இதை எடுத்துக் கொள்வதைவிட, இன்னும் செய்ய வேண்டிய பணிகளுக்கான ஊக்கமாக எடுத்துக்கொள்கிறோம்.

மு.க.ஸ்டாலின்
மு.க.ஸ்டாலின்

அறிவுப் புரட்சியின் அடையாளமாக நூல்களையும், நூலகங்களையும் தி.மு.க ஆட்சியில் உருவாக்கியுள்ளோம். ஓராண்டு மிசா காலத்தில் கி.வீரமணி பாதுகாப்பில்தான் நான் இருந்தேன். என் மீதான விமர்சனத் தாக்குதல்களையும் முறியடிப்பவர் அவர்தான்.

பெரியார் அறிவுலகத்தை கோவையின் அடையாளமாக மட்டுமல்லாமல், தமிழகத்தின் அடையாளமாகவும் உருவாக்கியுள்ளோம். என்னால் மறக்க முடியாத சாதனையாக இந்தப் பெரியார் அறிவுலகம் அமைந்துள்ளது. நாம் இன்று பார்க்கும் தமிழகத்தைச் செதுக்கியவர் பெரியார், அவரது பெயரில் அறிவுலகம் அமைத்தது நமது கடமை, நன்றியை எதிர்பார்த்துச் செய்யவில்லை.

தற்போது தமிழகத்தில் அறிவிக்கப்படாமலேயே திட்டப் பணிகள் நிறுத்தப்படுகின்றன, சேலம், நெல்லை, கடலூர் நூலகங்களுக்கும் அத்தகைய நிலை வந்துவிடக்கூடாது.

மு.க.ஸ்டாலின்
மு.க.ஸ்டாலின்

முதல்வர் விஜய் ஜோசியர் சொன்ன தேதியில் வந்து பெரியார் அறிவுலகத்தைத் திறந்து வைத்திருக்கிறார். முதல்வர் என்ன உடை அணிய வேண்டும், என்ன பொட்டு வைக்க வேண்டும், முதல்வர் அலுவலகம் எந்தத் திசையில் இருக்க வேண்டும் என்பதைக்கூட ஜோசியர் சொல்வதைக் கேட்டு செய்கிறார்.

ஒரே பவர் சென்டர் என்று கூறினார்கள். ஆனால், அவருக்குப் பின்னால் இருக்கும் கார்ப்பரேட் பவர் சென்டர்தான், முதல்வரை வைத்துக்கொண்டு அனைத்தையும் செய்கிறது. யாரெல்லாம் இந்த ஆட்சி வரவேண்டும் என்று வாக்களித்தார்களோ, அவர்களே தற்போது புலம்பிக்கொண்டிருக்கிறார்கள்.

மு.க.ஸ்டாலின்
மு.க.ஸ்டாலின்

மின்வெட்டுப் பிரச்னையைக்கூட இந்த அரசால் சரிசெய்ய முடியவில்லை. துணை ஜனாதிபதி வருகையின் போது கூட மின் தட்டுப்பாடு ஏற்பட்டது. சுடுகாட்டில் கூட மின்சாரம் இல்லாமல் மக்கள் தவிக்கின்றனர். தி.மு.க ஆட்சியில் குறைந்த விலைக்கு மேற்கொள்ளப்பட்ட மின் ஒப்பந்தங்கள் ரத்து செய்துவிட்டு. வெளிச்சந்தையில் அதிக விலைக்கு மின்சாரம் வாங்குகின்றனர். இதற்காகவே செயற்கையாக மின்வெட்டு நாடகம் நடத்தப்படுகிறது.

ஒரு கட்சியில் இளைஞரணி உள்ளிட்ட பல அணிகள் இருப்பது போல த.வெ.க-வில் பாலியல் குற்றவாளிகளுக்கும், போதைப் பொருள் குற்றவாளிகளுக்கும் தனித்தனிப் பிரிவுகள் இருக்கும் போல. முதல்வர் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வேலைக்குச் செல்வதாகப் பாவனை காட்டுகிறார், அதற்கும் இரண்டு நாட்கள் விடுமுறை வேறு. அங்கிள் விஜய் அவர்களே, இது சினிமா சூட்டிங் இல்லை.

திருச்சி தேர்தலைக் காரணமாக வைத்து, முன்னாள் அமைச்சர் நேருவின் வீட்டில் திரும்பத் திரும்ப சோதனை நடத்துகிறார்கள். தி.மு.க எப்போதும் அச்சப்படாது, எங்களை அழுத்த அழுத்தத்தான் மேலே எழுவோம். இதுதான் தி.மு.க-வின் டி.என்.ஏ. முதல்வர் எந்தத் தவறுக்காவது பொறுப்பேற்கிறாரா? மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் வைத்திருந்த த.வெ.க நிர்வாகி பூபாலன் விவகாரத்தில் அங்கிள் விஜய் விளக்கம் அளிக்க வேண்டாமா? அவர் என்ன நடவடிக்கை எடுத்தார்? மாநில காவல்துறை ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?

மு.க.ஸ்டாலின்
மு.க.ஸ்டாலின்

பத்திரிகையாளர்களைச் சந்திக்காமல் ஓடிக்கொண்டிருக்கிறார். நடிகர் விஜய் அல்ல, முதல்வர் விஜய், மக்களுக்குப் பதில் சொல்ல வேண்டும், வேன் மீது ஏறி ஆடிக்கு ஒருமுறை, அமாவாசைக்கு ஒருமுறை பேசுகிறார், அவர் பேசுவதற்காக அடிக்கடி இடைத்தேர்தல் நடத்த முடியுமா?

30 ஆண்டுகளுக்குப் பிறகு 17 கைதிகள் தப்பிச்சென்ற வரலாற்றைப் படைத்திருக்கிறார்கள், ஃபைலைத் திறப்பேன் என்று கூறிவிட்டு ஜெயிலைத் திறக்கிறார். இவ்வளவு பலவீனமான முதல்வரை இதுவரை பார்த்ததே இல்லை. தி.மு.க ஆட்சியில் நாட்டின் முதன்மை பொருளாதார மாநிலமாக இருந்த தமிழகத்தின் நிலை தற்போது தலைகீழாக மாற்றப்பட்டுள்ளது.

மு.க.ஸ்டாலின்
மு.க.ஸ்டாலின்

அனைத்து தரப்பு மக்களும் மின் கட்டண உயர்வு, விலைவாசி உயர்வு ஆகியவற்றால் திண்டாடும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால் முதலமைச்சர் கோட் சூட் அணிந்து கொண்டு அண்டை மாநிலங்களுக்குப் பரிகாரம் செய்ய செல்கிறார்.

நடிகராக இருந்தபோது சக நடிகர்கள் மீது சமூக வலைத்தளங்களில் அவதூறுகளைப் பரப்பி ஜெயித்த பார்முலாவை அரசியலில் பயன்படுத்தி ஒருமுறை வெற்றி பெற்று விட்டார், ஆனால் தமிழ்நாட்டு மக்களை இரண்டாவது முறையாக விஜய் ஏமாற்ற முடியாது, மக்களின் கண்ணீர் இந்த ஆட்சியை மீண்டும் வரவிடாது.

த.வெ.க ஆட்சிக்கு இப்போது ரெட் அலர்ட், இந்த ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பதுதான் தமிழகத்திற்கு நல்லது. ஆளுங்கட்சி பரப்பும் போலி பிரசாரங்களையும் இன்புளுயன்சர் வீடியோக்களையும் கண் மூடித்தனமாக நம்பாமல், உண்மையை உணர வேண்டும்.

வெளிச்சத்தைக் கண்டால் இருள் பயப்படுவதைப் போல பகுத்தறிவு பாசறைகளையும் நூலகங்களையும் கண்டு பொய்கள் நடுங்கும். அதேபோலத்தான் த.வெ.க-வினர் நூலகத்தைப் பார்த்துப் பயப்படுகிறார்கள்” எனத் தெரிவித்தார்.

தீபாவளி பேருந்து: சென்னையில் எந்தப் பேருந்து நிலையத்திலிருந்து எந்த ஊருக்குச் செல்லலாம்? முழு விவரம்

தீபாவளி பண்டிகையையொட்டி சென்னையில் எந்தப் பேருந்து நிலையத்தில் இருந்து எந்தெந்த ஊர்களுக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன என்று போக்குவரத்து துறை அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது. எந்தப் பேருந்து... மேலும் பார்க்க

'ஹார்முஸ் நீர்ச்சந்தி வழியாக இந்தியக் கப்பல்கள் பயணிக்கலாம்' - ஈரான் அனுமதிக்க காரணம் என்ன?

போர் தொடங்கியதும் ஹார்முஸ் நீர்ச்சந்தியை மூடியது ஈரான். கடந்த பிப்ரவரி மாதத்தின் இறுதியில் அமெரிக்காவும், இஸ்ரேலும் ஈரான் மீது போரைத் தொடங்கியது. ஏற்கெனவே தடைகளால் பொருளாதாரப் பிரச்னையைச் சந்தித்து வந... மேலும் பார்க்க

ஈரோடு: துணிக்கடை விளம்பர ரீல்ஸ் சர்ச்சையில் TVK எம்எல்ஏ; கொந்தளிக்கும்அரசியல் கட்சிகள்

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் தொகுதி எம்.எல்.ஏ-வாக, த‌.வெ.க-வைச் சேர்ந்த தமிழ்செல்வி பதவி வகித்து வருகிறார். ரேஷன் கடையில் ஆய்வு மேற்கொள்வதில் தொடங்கி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்திற்கு வீட்டில் இருந்து க... மேலும் பார்க்க

'பிரஷர் ஏறி நொந்து போயிருக்கேன்!' - 20% கமிஷன் சர்ச்சை; கொதிக்கும் தவெக எம்.எல்.ஏ குழந்தைராணி!

சிவகங்கையில் VB-G RAM G வேலைவாய்ப்புத் திட்டத்தின் ஒப்பந்தத்தில் தவெக எம்.எல்.ஏ 20% கமிஷன் கேட்பதாக, பஞ்சாயத்தில் பணிகளை எடுத்து செய்யும் ஒப்பந்தத்தாரர்கள் குற்றஞ்சாட்டியிருக்கின்றனர். அந்தக் குற்றச்ச... மேலும் பார்க்க

அமெரிக்க செனட் வரலாற்றில் புதிய அத்தியாயம்; முதல் முஸ்லிம் உறுப்பினராக அப்துல் எல்-சயீத்!

அமெரிக்காவின் மிச்சிகன் மாகாண செனட் தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளர் மைக் ராஜர்ஸைத் (Mike Rogers) தோற்கடித்து வெற்றி பெற்றிருக்கிறார் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த அப்துல் எல்-சயீத் (Abdul El-Sayed).... மேலும் பார்க்க