செய்திகள் :

Flydubai-ல் இந்திய விமானிக்கு கத்திக்குத்து; ஈரானுக்குத் தொடர்பா? - ட்ரம்ப், நெதன்யாகு பதில் என்ன?

post image

துபாயிலிருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் சென்ற விமானத்தில் விமானியைச் சக விமானி கத்தியால் குத்தினார்.

இந்தத் தாக்குதல் விமானத்தைத் தகர்க்க முயற்சித்ததில் நடந்தது என்று கூறப்படுகிறது.

இந்தச் சம்பவத்தில் தாக்கப்பட்ட விமானி இந்தியாவைச் சேர்ந்த ஸ்மித் மச்சார்.

தாக்கிய விமானி ஓமன் நாட்டைச் சேர்ந்தவர் என்று இஸ்ரேல் தரப்பு கூறிவருகிறது.

நேற்று முன்தினம் இந்தச் சம்பவம் குறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவிடம் பேசியிருந்தார்.

ஃபிளைதுபாய் விமானம்
ஃபிளைதுபாய் விமானம்

அதன்பின், செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், குற்றம் சாட்டப்படும் விமானி தீவிரவாதி என்பதுபோல தெரிகிறது என்று கூறியிருந்தார்.

நேற்று, ஃபாக்ஸ் செய்தி நிறுவனத்திற்குத் தந்த பேட்டியில் ட்ரம்ப், “ஈரானுக்கும், இந்தச் சம்பவத்திற்கும் தொடர்பிருக்கிறதா என்பதைப் பார்த்து வருகிறோம்.

ஆனால், இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

ஒருவேளை, தொடர்பிருந்தால் ஈரான் மீது கடுமையான தாக்குதல் நடத்தப்படும்” என்று பேசியிருக்கிறார்.

முன்பு இதே கேள்வி நெதன்யாகுவிடமும் கேட்கப்பட்டது...

“ஈரானுக்கும், இந்தச் சம்பவத்திற்கும் தொடர்பிருக்கிறதா என்பதை இப்போதே சொல்லிவிட முடியாது.

விமானிக்கும் ஈரானுக்கும், வேறு யாருக்காவதும் தொடர்பிருக்கிறதா என்பதை இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை” என்று பதில் சொல்லியிருக்கிறார் நெதன்யாகு.

"2009 இல் நான் மத்திய அமைச்சராவது தடுக்கப்பட்டது" - என்ன சொல்கிறார் திருமாவளவன்?

மதுராந்தகம் தொகுதியின் இடைத்தேர்தலுக்காக தவெக சார்பில் மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணியின் பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்தக் கூட்டத்தில் பேசிய விசிக தலைவர் திருமாவளவன், தி... மேலும் பார்க்க

தாக்கப்பட்ட இந்திய விமானி Smit Machchhar இப்போது எங்கு இருக்கிறார்? - வெளியுறவுத் துறை விளக்கம்

ஃபிளைதுபாய் விமானம் ஒன்றில் இந்திய விமானி ஸ்மித் மச்சாரைச் சக விமானி கத்தியால் குத்தியிருந்தார்.இதில் ஸ்மித் மச்சாருக்குக் கடுமையான ரத்தப்போக்கு ஏற்பட்டு, சவூதி அரேபியாவில் விமானம் தரையிறங்கியபோது, அவ... மேலும் பார்க்க

"வி.டி.சதீசன் கூட்டணித் தலைவர்களிடம் ஆலோசிப்பதில்லை" - UDF ஒருங்கிணைப்பாளர் பகிரங்க குற்றச்சாட்டு

கேரளாவில் காங்கிரஸ் தலைமையிலான யு.டி.எஃப் கூட்டணி ஆட்சி நடந்துவருகிறது. ஆட்சி அமைத்து சில மாதங்களே ஆன நிலையில் கட்சிக்குள் அதிருப்தி வெளிப்படையாக வெடிக்கத் தொடங்கியுள்ளது. காங்கிரஸ் தலைமையிலான யு.டி.எ... மேலும் பார்க்க

புதுச்சேரி இடைத்தேர்தல்: வாக்காளர்களுக்கு வழங்க இருந்த 2,500 கிராம் தங்கம் நாணயங்கள் பறிமுதல்

புதுச்சேரி சட்டப்பேரவைப் பொதுத் தேர்தலில் மங்கலம், தட்டாஞ்சாவடி என இரண்டு தொகுதிகளில் போட்டியிட்ட முதல்வர் ரங்கசாமி, தட்டாஞ்சாவடி தொகுதி எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்ததால் அங்கு வரும் அக்டோபர் 6-ம் த... மேலும் பார்க்க

`தவெக அரசு வழக்கறிஞர் நியமனத்தில் ஊழல்; பல கோடி ரூபாய் Party Fundக்கு வாங்கப்பட்டதா?' ஆர்.எஸ்.பாரதி

கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு வழக்கறிஞர்கள் நியமனங்களுக்கு 15 லட்சம் ரூபாய் வரை லஞ்ச பேரம் நடத்திய தவெக நிர்வாகி அனீஸ் என்பவரது அதிர்ச்சி ஆடியோ வெளியானது. அது தொடர்பாக ஜெகன் ராஜ் என்பவர் தொடர்ந்த வழக... மேலும் பார்க்க

'புள்ளையைத்தான் இழந்துட்டோம்; நீதியையாச்சு கொடுங்களேன்...' - கண்ணீருடன் கவினின் தாய்!

கவினின் ஆணவப்படுகொலை வழக்கில் கொலை செய்த சுர்ஜித்தின் பெற்றோர்களின் பெயரை குற்றப்பத்திரிகையில் இருந்து நீக்கச் சொல்லி உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டிருக்கிறது.காத்திருப்புப் போராட்டத்தில் கவினி... மேலும் பார்க்க