செய்திகள் :

'FQL மோசடி : 'தாலி செயின், நகைகளை அடகுவைத்து காசு கட்டுனோம்; எல்லாம் போச்சு' - பொதுமக்கள் கண்ணீர்!

post image

FQL மற்றும் VG டிரேடிங் என்ற மொபைல் App மூலமாக முதலீடு செய்தால் இரட்டை லாபம் கிடைக்கும் என கூறி மதுரை மாவட்டம் மேலூர், அலங்காநல்லூர், திண்டுக்கல், சிவகங்கை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த கிராம ஏழை எளிய விவசாயிகள், நடுத்தர குடும்பத்தினர், பெண்கள் என பல்லயிரக்கணக்கான பொதுமக்களிடம் பிட்காயின் ஷேர் மார்க்கெட் என்ற அடிப்படையில் பல கோடி ரூபாய் முதலீடு செய்யவைத்து ஏமாற்றியுள்ளனர்.

இந்நிலையில் கடந்த சில மாதங்களாக முதலீடு  செலுத்தியவர்களுக்கான பணம் கிடைக்காத நிலையில் மொபைல் ஆப்களும் முடங்கியது. இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் பணத்தை ஏமாற்றி மோசடியில் ஈடுபட்டவர்களிடம் பணத்தை மீட்டுதர கோரி புகார்மனு அளித்து மறியலில் ஈடுபட்டனர். இந்த மோசடி விவகாரம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனால் பணம் வசூலில் ஈடுபட்ட முக்கிய நபர் ரஞ்சித் தலைமறைவான நிலையில், ஏஜெண்டுகளான அவரது தங்கை அனிதா உள்ளிட்ட 6 பேர் வரை இதுவரையில் கைது செய்யப்பட்டு்ள்ளனர். இதனை தொடர்ந்து பொதுமக்கள் பல்வேறு காவல் நிலையங்களில் புகார் மனு அளித்து வருகின்றனர்.

FQL மோசடி

இந்நிலையில் FQL APP மற்றும் VG TRADING முதலீட்டில் முதலீடு செய்து ஏமாற்றமடைந்த பொதுமக்கள் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் குறைதீர் கூட்டத்தில் நேற்று புகாரளிக்க மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வருகை தந்தனர். 

இதன் காரணமாக மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்பு வளையங்கள் அமைக்கப்பட்டு காவல்துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நிறுத்திவைக்கப்பட்டனர்.

இதையடுத்து FQL நிறுவனத்தில் முதலீடு செய்து ஏமாற்றமடைந்த பொதுமக்கள் புகார் அளிப்பதற்கு  தனி அலுவலர்கள் நியமிக்கப்பட்டு மனுக்களை பெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்ட நிலையில் 100க்கும் மேற்பட்டோர் மனுக்களை அளித்தனர்.

FQL மோசடி

இது குறித்து பேசிய பெண்கள் மற்றும் இளைஞர்கள், "கோவிலுக்கு கட்ட வைத்திருந்த பணத்தை இழந்துட்டோம், தாலி செயின் , நகைகளை அடகுவைத்து காசு கட்டுனோம். லட்சக்கணக்குல இழந்து தவிக்கிறோம், போலீஸுக்கு இது தெரியும். முன்னவே நடவடிக்கை எடுத்திருந்தால் ஏமாந்திருக்கமாட்டோம்., உறவினர்கள் சொல்லியதை கேட்டு நம்பி பணம் செலுத்தினோம், ரிச்சர்ட் என்பவர் அடிக்கடி வீடியோகாலில் பேசினார் அது உண்மையாவே வெளிநாட்டுகாரரா? AI வீடியோவாக என தெரியவில்லை நம்பி ஏமாற்றமடைந்து நிற்கிறோம்" என்றனர்.

திடீர் விசிட்; கண்ணாடி வழங்கிய முதல்வர் விஜய்; இறுகப் பற்றி நெகிழ்ந்த மூதாட்டி! | Photo Album

Vijay: ```கண்ணு உன்ன ரொம்ப பிடிக்கும்'னு சொன்னேன்!" - முதல்வர் சர்ப்ரைஸ் விசிட்; மூதாட்டி நெகிழ்ச்சி மேலும் பார்க்க

Vijay: ```கண்ணு உன்ன ரொம்ப பிடிக்கும்'னு சொன்னேன்!" - முதல்வர் சர்ப்ரைஸ் விசிட்; மூதாட்டி நெகிழ்ச்சி

ஒவ்வோர் ஆண்டும் குறுவை சாகுபடிக்காக ஜூன் 12 ஆம் தேதி மேட்டூர் அணையில் இருந்து நீர் திறக்கப்படுவது வழக்கம். ஆனால் தமிழ்நாட்டிற்கான காவிரி நீரை கர்நாடகா அரசு திறந்துவிட மறுத்ததால் மேட்டூர் அணையில் போதும... மேலும் பார்க்க

கிண்டி கலைஞர் பல்நோக்கு மருத்துவமனை மருத்துவமனை: ஆய்வுக்கு வந்த குரங்குகள் - கண்டுகொள்ளுமா அரசு?

சென்னை கிண்டியில் உலகத்தரம் வாய்ந்த கட்டமைப்புடன் உருவாக்கப்பட்டது கலைஞர் பல்நோக்கு மருத்துவமனை.தமிழ்நாட்டின் பல மாவட்டங்களிலிருந்து தினமும் ஆயிரக்கணக்கான ஏழை எளிய நோயாளிகள் தங்களின் உயிரைக் காப்பாற்ற... மேலும் பார்க்க

FQL மோசடி: இளைஞர் தற்கொலை; 'தடுக்கத் தவறிய காவல்துறை பொறுப்பேற்க வேண்டும்' - அன்புமணி ராமதாஸ்

எப்.க்யூ.எல் (FQL) நிதி நிறுவனத்தில் முதலீடு செய்து ஏமாற்றம் அடைந்த திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் இராசு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில் இந்த சம்பவம... மேலும் பார்க்க

`சரியும் ராகுல் பிம்பம்; திக்குமுக்காடும் காங்கிரஸ்?' மாணிக்கம் தாகூர், விஜய் சந்திப்பு; பின்னணி!

பிரதமர் வேட்பாளர் - விஜய்நடிகராக இருந்து அரசியல் தலைவராக உருவெடுத்த த.வெ.க தலைவர் சி.ஜோசப் விஜய், தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றார். இந்த நிலையில், சமீபத்தி... மேலும் பார்க்க

கழிவுகள் கொட்டும் இடமாக மாறிய வாழவாய்க்கால்: கேள்விக்குறியான சுகாதாரம்; முகம்சுளிக்கும் மக்கள்!

திருவாரூரில் இருந்து திருத்துறைப்பூண்டி செல்லும் பிரதான சாலையையொட்டி அமைந்துள்ள வாழவாய்க்கால் பகுதியில் பல்வேறு வகையான கழிவுகள் கொட்டப்படுவதால், அப்பகுதியில் சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டு வருவதாக பொதுமக... மேலும் பார்க்க