5 தொகுதி இடைத்தேர்தல் TVK, DMK, ADMK திட்டம் என்ன? | Political Lab
Gold: தீபாவளி தமாக்கா! பவுனுக்கு ரூ.1 லட்சத்தை நெருங்கும் தங்கம் விலை; சறுக்கலுக்கு காரணம் என்ன?
தீபாவளிக்கு இன்னும் சரியாக ஒரு வாரம்தான் உள்ளது.
இந்த நேரத்தில் நம் மக்களுக்கு சூப்பர் குட் நியூஸ்.
இன்று சென்னையில் தங்கம் விலை கிராமுக்கு ரூ.310-உம், பவுனுக்கு ரூ.2,480-உம் குறைந்துள்ளது. வெள்ளி கிராமுக்கு ரூ.10 குறைந்துள்ளது.
இன்று ஒரு கிராம் தங்கம் ரூ.12,730-க்கும், ஒரு பவுன் தங்கம் ரூ.1,01,840-க்கும் விற்பனை ஆகி வருகிறது.
கடந்த ஜனவரி மாதம், ஒரு பவுனுக்கு ரூ.1.24 லட்சத்தைத் தாண்டிய தங்கம் விலை இப்போது ரூ.1.01 லட்சத்திற்குச் சறுக்கியுள்ளது.

சர்வதேச சந்தையில்...
சர்வதேச சந்தையில் தங்கம் விலை குறைந்ததே இந்த இறங்குமுகத்துக்குக் காரணம்.
தற்போது சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கம் 4,000 டாலருக்குக் கீழ் சறுக்கி 3,884 டாலர் என வர்த்தகமாகி வருகிறது. வெள்ளி ஒரு அவுன்ஸுக்கு 49 டாலர் என வர்த்தகமாகி வருகிறது.
ஏன் இந்தச் சறுக்கல்?
> அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஈரான் மீதான தாக்குதல் வருகிற நவம்பர் 3-ம் தேதிக்குப் பின் தொடரும் என்று முன்பு அறிவித்திருந்தார். இப்போது அந்தத் தேதி நெருங்கிவிட்டது.
> ஈரான், அமெரிக்கா இடையே எந்தவொரு சமாதான முயற்சியும் தெரியவில்லை. ஹார்முஸ் நீர்ச்சந்தி இன்னும் மூடிய நிலையில்தான் உள்ளது. நேற்று ஹார்முஸில் பயணித்த கப்பல் மீது கண்ணிவெடித் தாக்குதல் நடத்தியுள்ளது ஈரான்.
இந்த நெருக்கடிகளால் கச்சா எண்ணெய் விலை அதிகரித்துக்கொண்டே வருகிறது.
> பணவீக்க எச்சரிக்கைகள் தொடர்ந்து இருந்து வருகின்றன.
> அமெரிக்காவின் மத்திய வங்கி ஃபெடரல் ரிசர்வ் உள்ளிட்ட உலகின் பல மத்திய வங்கிகள் தங்களது வட்டி விகிதத்தை ஏற்றி வருகின்றன.

















