செய்திகள் :

GuidanceTN விவகாரம்: "ஆந்திரா ஆளுங்கட்சிக்கு வேலை பார்த்த கீர்த்தனாதான் துரந்தரா?"- எடப்பாடி காட்டம்

post image

தமிழ்நாட்டிற்கு வரும் தொழில் முதலீடுகளை ஈர்ப்பது தொடர்பாக ஆலோசனைகள் வழங்கி வரும் கைடன்ஸ் தமிழ்நாடு நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வந்த 15 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

தமிழ்நாட்டிற்கு வரவிருந்த தொழில் முதலீடுகள் தொடர்பான ரகசியத் தகவல்கள் ஆந்திர அரசுக்கு கசிந்ததாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி "ஆந்திராவின் இன்றைய ஆளுங்கட்சிக்கு தேர்தல் வேலை பார்த்து இங்கே அமைச்சராக இருக்கும் கீர்த்தனாதான் தவெக அமைச்சரவையின் துரந்தரா?" என்று கேள்வி எழுப்பி தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார்.

கைடன்ஸ் தமிழ்நாடு
கைடன்ஸ் தமிழ்நாடு

அப்பதிவில், "தமிழ்நாட்டிற்கு புதிய தொழில்களை ஈர்க்கும் நோக்கில், மாண்புமிகு அம்மா அவர்களால் துவங்கப்பட்டது 'Guidance TN' அமைப்பு.

தமிழகத்தில் தொழில் தொடங்க பல Investors முன்வர முக்கிய பங்காற்றி வரும் இந்த நிறுவனம் குறித்து ஓரிரு நாட்களாக வரும் செய்திகள் எல்லாம் மிகுந்த வருத்தத்தை அளிக்கின்றன.

GuidanceTN நிறுவன ஊழியர்கள் மீது ஊடகங்கள் தெரிவிக்கும் குற்றச்சாட்டுகள் ஏற்கதக்கது அல்ல. அவர்களின் பெரும்பாலானோர், அதிமுக ஆட்சியில் நியமிக்கப்பட்டவர்கள்.

முதலமைச்சராக அவர்களோடு பணியாற்றி, தமிழகத்திற்கு பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகளை ஈட்டி வந்த வகையில், அஇஅதிமுக ஆட்சிக்கு பிறகும் தொடர்ந்து தமிழகத்தின் தொழில்வளம் பெருகப் பணியாற்றிய அவர்களின் உழைப்பையோ, அர்ப்பணிப்பையோ கொச்சைப்படுத்தக் கூடிய எந்த ஒரு விஷயத்தையும் ஏற்றுக்கொள்ள முடியாது.

2026 தேர்தலுக்கு பின் புதிய ஆட்சி பொறுப்பேற்றதும், தொழில் முதலீடுகள் தொடர்பான இந்த ஆட்சியின் அலட்சியமான அணுகுமுறைகளைப் பார்த்தும், தொழில் முதலீடுகள் பற்றி செய்தியாளர்கள் கேள்விக்கு “அதான் ரீல்ஸ் போட்டுட்டேனே” என்று அமைச்சர் சொன்னதைக் கேட்டும், இனி “Guidance-க்கே Guidance இல்லை” என்ற நிலை வந்துவிட்டதை உணர்ந்து தான், ஜூன் மாதமே GuidanceTN ஊழியர்களில் பெரும்பாலானோர் பணியில் இருந்து விலகினர்.

அவர்களுக்கு 29.06.2026 அன்று Relieving Letter கொடுத்து அனுப்பிவிட்டு, தற்போது அவர்கள் அனுபவத்தின் அடிப்படையில் வேறு மாநிலத்தில் பணிபுரிந்து வருவதை தவறாக சித்தரித்து பேசுவது என்பது தரம்தாழ்ந்த செயல்.

முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்

தமிழகத்திற்கு வரவேண்டிய தொழில் முதலீடுகள் எல்லாம் ஆந்திர மாநிலத்திற்கு செல்வதற்கு இந்த அரசின், தொழில்துறை அமைச்சரின் கையாலாகத்தனம் தான் காரணம். அதை ஏற்றுக்கொண்டு திருத்திக் கொள்ள வக்கில்லாமல், இப்படி பழிபோடும் படலத்தை சில ஊடக செய்திகள் வாயிலாக இந்த ஆச்சரியக்குறி அரசே செய்கிறதோ? என்று தான் கேட்கத் தோன்றுகிறது.

ஏற்கனவே சட்டம் ஒழுங்கு சீர்கேடு, மின்வெட்டு என தொழில் அமைக்க பாதகமான சூழலில் தமிழகத்தை தள்ளிவிட்ட இந்த (ஏ)மாற்று அரசு, தற்போது GuidanceTN மீது ஏற்பட்டுள்ள இந்த களங்கத்திற்கும் பொறுப்பாகி உள்ளது. இதற்கான உரிய விளக்கத்தை முறையான செய்தியாளர் சந்திப்பு நடத்தி தமிழக மக்களுக்கு இந்த அரசின் முதல்வரும், தொழில்துறை அமைச்சரும் விளக்க வேண்டும்.

நடிகரை திரையில் கண்டு ரசிகர் ஈர்த்துப் போவது போல் அல்ல தொழில் ஈர்ப்பு. நமக்கான வாய்ப்புகளைக் கண்டறிந்து, தொழில் நிறுவனங்களிடம் முறையாக பேசி, அவர்களுக்கான Facilitation-களை செய்து, Ease Of Doing Business தமிழகத்தில் இருப்பதற்கான நம்பிக்கையை விதைத்து, வரும் புதிய தொழில் நிறுவனங்களில் Local Employments அதிகம் வருவதை உறுதி செய்ய வேண்டும். இதையெல்லாம் பார்த்து செய்யக் கூடிய பொறுப்பை கொஞ்சமாவது வளர்த்துக் கொள்ள வேண்டுமென நம் மாநிலத்தின் மீதுள்ள உள்ளார்ந்த அக்கறையோடு இந்த அரசை வலியுறுத்துகிறேன்.

அமைச்சர் கீர்த்தனா
அமைச்சர் கீர்த்தனா

(பி.கு : இந்த OperationMole உருட்டை தான் இந்த “வெற்றி” மாடல் அரசு உருட்டப் போகிறது என்றால், ஆந்திராவின் இன்றைய ஆளுங்கட்சிக்கு தேர்தல் வேலை பார்த்துவிட்டு வந்து தற்போது அமைச்சராக இருக்கும் கீர்த்தனா அவர்கள் தான் உங்கள் அமைச்சரவையின் துரந்தரா? என்ற கேள்விக்கு பதில் சொல்லத் தயாராகிவிட்டு வாருங்கள்!)" என்று விமர்சித்திருக்கிறார் .

`குவாரிக்கு எனது நிலத்தை லீசுக்கு கொடுத்தேன்; மண் எடுத்திருப்பது எனக்கு தெரியாது" - மூர்த்தி பேட்டி

மதுரை மாவட்டம் சத்திர வெள்ளாளப்பட்டி பகுதியில் உள்ள சரளை குவாரியில் கடந்த 2019ஆம் ஆண்டு முதல் 2024 வரை அரசு அனுமதித்ததை விட அதிகளவில் கனிமவளங்களை வெட்டி எடுத்து ரூ. 5.39 கோடி அளவிற்கு அரசுக்கு வருவாய்... மேலும் பார்க்க

'யோசனை ஓகே, ஆனால் நடைமுறைப்படுத்துவது கடினம்' - அணு ஆயுதக் கட்டுப்பாடு குறித்து ட்ரம்ப் ஓப்பன் டாக்

சீன அதிபர் ஷி ஜின்பிங் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர், அணு ஆயுதங்களைக் கட்டுப்படுத்துவதற்கான ஒரு பரஸ்பர உடன்பாட்டை எட்டுவது கடினமான இலக்கு என்று அமெரிக... மேலும் பார்க்க

முன்னாள் அமைச்சர் மூர்த்தி: ``போதைப்பொருள் கடத்தல்கள்; திசைதிருப்பவே ரெய்டுகள்" - ஸ்டாலின்

மதுரை பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் பகுதிகளில் கிரஷர் மற்றும் செம்மண் மற்றும் கல் குவாரிகளில் விதிகளை மீறி அதிகளவிற்கு செம்மண் மற்றும் கல் வெட்டி எடுத்ததாக மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்கு ப... மேலும் பார்க்க

மதுரையில் ரூ.2.32 கோடி அளவிற்கு கல்குவாரி முறைகேடு: முன்னாள் அமைச்சர் மூர்த்தியின் வீட்டில் சோதனை

மதுரை பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் பகுதிகளில் கிரஷர் மற்றும் செம்மண் மற்றும் கல் குவாரிகளில் விதிகளை மீறி அதிகளவிற்கு செம்மண் மற்றும் கல் வெட்டி எடுத்ததாக மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்கு ப... மேலும் பார்க்க

"வி.எஸ்.பாபு உடல்நிலை குறித்து மௌனம் காத்தது மனித உரிமை மீறல்" - டாக்டர் கிருஷ்ணசாமி கூறுவது என்ன?

"ஒரு மக்கள் பிரதிநிதியின் உடல்நிலை குறித்து மூன்று மாதங்கள் மருத்துவமனையும், அரசும் மௌனம் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை" என்று கொளத்தூர் தவெக சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ்.பாபுவுக்கான இரங்கல் செய்தியில... மேலும் பார்க்க

```Start, Camera, Action' என்றதும் எல்லாம் மாறிவிடும் என்ற எண்ணத்தை கைவிடுங்கள்"- எடப்பாடி பழனிசாமி

சென்னை மாதவரத்தில் மத்திய வருவாய் புலனாய்வு போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அங்கு வந்த வாகனத்தை சோதனை செய்ததில் 70 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த கடத்தல் சம்பவம் தொடர்பாக 2 பேர... மேலும் பார்க்க