செய்திகள் :

Kamal Haasan: "இந்தியாவின் கதைகள் உலகளாவிய பார்வையாளர்களைக் கவரும் வலிமை கொண்டவை!" - கமல்ஹாசன்

post image

Essel குழுமம் தொடங்கப்பட்டு 100 ஆண்டுகள் நிறைவு செய்திருப்பதையொட்டி, Zee தமிழ், Zee திரை மற்றும் தமிழ் Zee 5 இணைந்து சென்னை ITC கிராண்ட் சோழா ஹோட்டலில் மிகப் பிரமாண்டமான விழாவை நடத்தியது.

தமிழ் திரையுலகம் மற்றும் தொலைக்காட்சித் துறையைச் சேர்ந்த முன்னணி நட்சத்திரங்கள், படைப்பாளிகள், எழுத்தாளர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

Kamal Haasan
Kamal Haasan

இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக நடிகர்கள் கமல்ஹாசன், விஜய் ஆண்டனி, ஆர்யா, விஜயகுமார் ஆகியோர் கலந்துகொண்டனர். அதேபோல் Zee தமிழ் தொலைக்காட்சி நட்சத்திரங்களும் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.

விழாவில் கலந்துகொண்டு பேசிய கமல்ஹாசன், “ஒரு நிறுவனம் நூறு ஆண்டுகள் வெற்றிகரமாக இயங்குவது என்பது அதன் உறுதியையும், தொலைநோக்குப் பார்வையையும், காலத்திற்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொள்ளும் திறனையும் காட்டுகிறது.

தொழில்நுட்பங்கள் எவ்வளவு மாறினாலும், நல்ல கதைகளுக்கான மக்களின் வரவேற்பு ஒருபோதும் குறையாது.

Kamal Haasan
Kamal Haasan

இந்தியாவின் மொழிகள், கலாச்சாரங்கள் மற்றும் கதைகள் உலகளாவிய பார்வையாளர்களைக் கவரும் வலிமை கொண்டவை.

இந்தியக் கதைகளை உலக அரங்கில் கொண்டு செல்வதற்கான முயற்சிகளில் நான்னும் தொடர்ந்து பங்கெடுக்கத் தயார்,” எனப் பகிர்ந்துகொண்டார்.

Rio Raj: அப்போது 'ராம் இன் லீலா', இப்போது 'ராம் & லீலா'; சென்சாரினால் பட தலைப்பில் ஏற்பட்ட மாற்றம்!

'ஆண்பாவம் பொல்லாதது' படத்தின் வெற்றிக்குப் பிறகு நடிகர் ரியோ நடித்திருக்கும் 'ராம் & லீலா' படம் இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகிறது. அறிமுக இயக்குநர் ராமச்சந்திரன் கண்ணன் இயக்கத்தில் உருவாகியிர... மேலும் பார்க்க

தியாகராஜன் குமாராஜாவின் 'பாக்கெட் நாவல்' 'லீலை' ரீரிலீஸ்: வதந்தி 2 இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ் அப்டேட்

ஓடிடி-யில் வரவேற்பை அள்ளிக் கொண்டிருக்கும் 'வதந்தி சீசன் 2'வை இயக்கியவர் ஆண்ட்ரூ லூயிஸ். இதற்கு முன் 'கொலைகாரன்' படத்தை இயக்கியவர். த்ரில்லர் பட இயக்குநராக பெயரெடுத்துவிட்ட ஆண்ட்ரூவின் முதல் படமான 'லீ... மேலும் பார்க்க

Vishwanath & Sons: "குழந்தைகள் என் காமெடி காட்சிகளைக் கொண்டாடும்போது..." - நெகிழும் மமிதா பைஜூ

சூர்யாவின் 'விஸ்வநாத் & சன்ஸ்' படம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. Vishwanath & Sons வெங்கி அட்லூரி இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் ராதிகா சரத்குமார், மமிதா பைஜூ, ரவீனா டாண்டன் ஆகியோர்... மேலும் பார்க்க

Paris Cafe: `பாரிஸ் நகரில் சிரமத்தைப் பொருட்படுத்தாமல் படப்பிடிப்பு நடத்தினோம்' - குரு சோமசுந்தரம்

கண்மணி ரங்கநாதன் தயாரிப்பில் சரஜ் சீலன் இயக்கத்தில் குரு சோமசுந்தரம், அனுமோல், அர்ச்சனா குமார், விஜய் விஷ்வா, சாய் விக்கி, நயனா உள்ளிட்டோர் நடித்துள்ள 'பாரிஸ் கபே' திரைப்படம் விரைவில் திரைக்கு வருகிறத... மேலும் பார்க்க

Paris Cafe: ``நம் யாராலும் தவிர்க்க முடியாத முக்கியமான விஷயம்" - நடிகை அனுமோல் பேச்சு

கண்மணி ரங்கநாதன் தயாரிப்பில் சரஜ் சீலன் இயக்கத்தில் குரு சோமசுந்தரம், அனுமோல், அர்ச்சனா குமார், விஜய் விஷ்வா, சாய் விக்கி, நயனா உள்ளிட்டோர் நடித்துள்ள 'பாரிஸ் கபே' திரைப்படம் விரைவில் திரைக்கு வருகிறத... மேலும் பார்க்க

Arun Vijay: "பலத்தோடு மீண்டும் வருவேன்" - 'இருளன்' படப்பிடிப்பில் அருண் விஜய்க்கு ஏற்பட்ட காயம்

நடிகர் அருண் விஜய், இப்போது இயக்குநர் முத்தையா இயக்கத்தில் 'இருளன்' படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு தென் மாவட்டங்களில் நடைபெற்று வருகிறது. எப்போதுமே அருண் விஜய் ஆக்ஷன் காட்சிகளுக்குச் சி... மேலும் பார்க்க