செய்திகள் :

LIC : 6.5 சதவீத பங்குகளை விற்று ரூ.35,000 கோடி திரட்ட மத்திய அரசு முடிவு

post image

மத்திய அரசு ஏற்கனவே பெரும்பாலான பொதுத்துறை நிறுவனங்களை விற்பனை செய்துவிட்டது. இப்போது எல்.ஐ.சி., ஒ.என்.சி.ஜி போன்ற சில நிறுவனங்கள் மட்டுமே மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. தற்போது எல்.ஐ.சி.யில் தனக்கு இருக்கும் பங்குகளில் 6.5 சதவீதத்தை விற்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக பங்குகளை விற்பனை செய்யும் பணி இன்று தொடங்கப்பட்டு நாளை முடிவடைகிறது. ஆஃபர் ஃபார் சேல் (OFS) திட்டத்தின் மூலம் கிட்டத்தட்ட ரூ.35,000 கோடி ($3.7 பில்லியன்) மதிப்புள்ள 6.5% பங்குகளை விற்பனை செய்து வருகிறது.

ஒரு பங்கின் அடிப்படை விலையான ரூ. 382 என்ற விலையில் வழங்கப்படுகின்றன. ஆனால் மும்பை பங்குச்சந்தையில் எல்.ஐ.சி.யின் பங்குகள் ரூ. 424க்கு முடிவடைந்தது. மத்திய அரசு 10% தள்ளுபடி சலுகையில் இந்த பங்குகளை விற்று வருகிறது. இதன் மூலம் 6.5% பங்குகளை பங்குகளை முழுமையாக விற்றால், அரசுக்கு சுமார் 31,400 கோடி ரூபாய் கிடைக்கும். இது இந்தியாவில் பங்குகளை விலக்குவதற்கான மிகப்பெரிய OFS வாக கருதப்படுகிறது.

பொதுமக்கள்(சில்லறை விற்பனை) இன்று இத்திட்டத்தில் பங்குகளை வாங்க முடியாது. நாளை அதாவது கடைசி நாளில் பொதுமக்கள் பங்குகளை வாங்க முடியும்.

தற்போது 6.5 சதவீத பங்குகளை விற்பனை செய்வதன் மூலம் அரசின் பங்கு விலக்கல் தற்போதைய ரூ.21,000 கோடியில் இருந்து ரூ.52,000 கோடியாக உயரும். மேலும், சொத்துப் பணமாக்கல் மூலம் மத்திய அரசுக்கு ரூ.6,367 கோடி கிடைக்க இருக்கிறது. இதன் மூலம் மத்திய அரசு அதன் முழு ஆண்டு இலக்கான ரூ.80,000 கோடியில் ரூ.60,000 கோடியை நெருங்கியிருக்கும். மே மாதம் எல்.ஐ.சி. நிறுவனம் ஒரு பங்கிற்கு ஒரு பங்கு என்ற விகிதத்தில் போனஸ் வழங்கியது.

பங்கு விற்பனையானது, குறைந்தபட்ச பொது மக்களின்பங்கு விதிமுறையை பூர்த்தி செய்யும் நோக்கில் மேற்கொள்ளப்படுகிறது. தற்போது, ​​ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தில் பொதுப் பங்கு 3.5% ஆக உள்ளது. தற்போது 6.5 சதவீத பங்குகள் விற்பனை செய்யப்படுவதன் மூலம் பொது பங்கு 10% வரை உயரும். இது செபியின் விதிகளை பூர்த்தி செய்வதாக அமையும்.

நோயல் டாடா உடன் விரிசல்; 'முன்னெச்சரிக்கை'யாக போட்டியிலிருந்து விலகிய N.சந்திரசேகரனின் சாதனைகள்!

ஒன்பது ஆண்டுகள்... இரண்டு பதவிக்காலத்தை டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவராக கழித்துள்ள என்.சந்திரசேகரன் அடுத்த தலைவர் பதவிக்கால போட்டியில் கலந்துகொள்ளப் போவதில்லை. இது தான் இந்திய பிசினஸ் உலகத்தின் தற்போத... மேலும் பார்க்க

Tata Sons-ன் அடுத்த தலைவர் 'இவரா?' - அடிபடும் பேச்சுகள்; தலைவர் எப்படி தேர்வு செய்யப்படுவார்?

அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்துடன் டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவர் பதவி காலியாகிறது. மீண்டும் தலைவர் பதவிக்கு போட்டிப்போட போவதில்லை என்று டாடா சன்ஸ் நிறுவனத்தின் தற்போதைய தலைவர் என்.சந்திரசேகரன் அறிவித்த... மேலும் பார்க்க

`நான் ஏன் Tata Sons தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்?' - N சந்திரசேகரன் முழு விளக்கம்

டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவர் பதவிக்கு மீண்டும் போட்டியிடுவதிலிருந்து விலகுகிறார் N.சந்திரசேகரன். தமிழ்நாட்டைச் சேர்ந்த இவர், 2017-ம் ஆண்டு டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர... மேலும் பார்க்க

`ஆடி கொடைக்கு ஆயிரங்கண் பானையும், தீச்சட்டியும் ரொம்ப விசேஷம்' - கவனம் ஈர்க்கும் மண்பாண்ட பொருள்கள்

மண் கலயங்களின் விற்பனைதென் மாவட்டங்களில் ஆடி மாத கொடை விழாக்களை அலங்கரிக்கும் மண் கலயங்களின் விற்பனை அமோகமாக நடைபெறுகிறது.நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் ஆடி மாதம் பெரும்பாலான அம்மன் மற்ற... மேலும் பார்க்க

Regal Jewellers: புதிய சமூகநல முயற்சியுடன் தமிழ்நாட்டில் தடம் பதிக்கும் ரீகல் ஜுவல்லர்ஸ்!

தென்னிந்தியாவின் முன்னணி நகை மேனுஃபேக்ச்சரர் மற்றும் ஹோல்சேலர்களில் ஒன்றான ரீகல் ஜுவல்லர்ஸ், சென்னை தி.நகரில் உள்ள வடக்கு உஸ்மான் சாலையில் தனது முதல் ஷோரூம், தமிழ்நாட்டில் அதிகாரப்பூர்வமாக தனது பயணத்த... மேலும் பார்க்க