திருப்பரங்குன்றம்: ``நீதிமன்ற உத்தரவை இந்து விரோத திமுக அரசு செயல்படுத்த வேண்டும...
Madurai, Coimbatore Metro: நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பிய தயாநிதி மாறன்!
சென்னையைத் தொடர்ந்து கோவை மற்றும் மதுரை மாநகரங்களில் மெட்ரோ போக்குவரத்து வசதியை அமைக்க தமிழ்நாடு அரசு வகுத்த திட்டத்தை சமீபத்தில் திருப்பி அனுப்பியது மத்திய அரசு.
Metro திட்டம் நிராகரிப்பு: மத்திய அரசு சொன்ன காரணம்
இது அரசியல் தளத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியது. 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, இரண்டு நகரங்களிலும் மக்கள்தொகை 20 லட்சத்துக்கும் குறைவாக இருப்பதனால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகக் கூறப்பட்டது.
மேலும் கோவை மற்றும் மதுரை நகரங்களுக்கு வலுவான பேருந்து அமைப்பு மற்றும் BRTS (விரைவான பேருந்து போக்குவரத்து) ஆகியவை பொருத்தமானதாக இருக்கலாம் என்றும் கூறியிருந்தது.
இதைத் தொடர்ந்து "குருகிராம், புவனேஷ்வர், ஆக்ரா, மீரட் உள்ளிட்ட நகரங்ளின் மக்கள்தொகை 20 லட்சத்துக்கும் குறைவாக இருந்தபோதும் அங்கு மெட்ரோ திட்டங்களுக்கு அனுமதி வழங்கியது எப்படி?" என தமிழக அரசியல் தலைவர்கள் கேள்வி எழுப்பினர்.
மத்திய அமைச்சர் பதில்

இதுகுறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளார் திமுக எம்.பி தயாநிதி மாறன். அதற்கு பதிலளித்த மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்களுக்கான இணையமைச்சர் தோஹான் சாகு, திட்டத்தில் விளக்கங்கள் கேட்டு திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக பதிலளித்துள்ளார்.













