செய்திகள் :

Maharaja: "அந்தப் பெண்ணின் நடிப்பிலிருந்து மீள முடியவில்லை" - சாச்சனாவைப் பாராட்டிய ஹாலிவுட் நடிகர்

post image

ஹாலிவுட் நடிகர் டாம் ஹேங்க்ஸ், ‘மகாராஜா’ திரைப்படத்தைப் பார்த்துவிட்டு, அதில் நடித்த இளம் நடிகை சாச்சனாவைப் பாராட்டியிருக்கிறார்.

'குரங்கு பொம்மை’ படத்தின் மூலம் அறிமுகமான இயக்குநர் நித்திலன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சாச்சனா உள்ளிட்ட பலர் நடிப்பில் 2024 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘மகாராஜா'.

மகாராஜா
மகாராஜா

இந்தப் படம் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இந்தியாவில் மட்டுமின்றி சீனா, ஜப்பான், தென்கொரியா ஆகிய நாடுகளிலும் இந்தப் படம் நல்ல விமர்சனத்தைப் பெற்றிருந்தது.

இந்நிலையில் சர்வதேச தொலைக்காட்சி கலை மற்றும் அறிவியல் அகாடமியின் வாரிய உறுப்பினரான கவிதா குப்தா 'The Hollywood Reporter India' ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் ஹாலிவுட் நடிகர் டாம் ஹேங்க்ஸ் ‘மகாராஜா’ படத்தைப் பற்றியும், குறிப்பாக சாச்சனாவின் நடிப்பைப் பற்றியும் நெகிழ்ந்து பேசியதாகத் தெரிவித்திருக்கிறார்.

சாச்சனா
சாச்சனா

இதுதொடர்பாக பேசிய கவிதா குப்தா, "சமீபத்தில் நடந்த பட விழாவில் டாம் ஹேங்க்ஸ், யாரும் கேட்காமலேயே ‘மகாராஜா’ படத்தைப் பற்றியும், குறிப்பாக சாச்சனாவின் நடிப்பைப் பற்றியும் நெகிழ்ந்து பேசினார். 'அந்தப் பெண்ணின் (சாச்சனா) நடிப்பிலிருந்து என்னால் இன்னும் மீள முடியவில்லை... என்னவொரு அற்புதமான நடிகை. என்னால் அப்படிச் செய்திருக்க முடியாது, அந்த ஆளைக் கொன்றிருப்பேன்' என்று அவர் வியந்து கூறினார்" என்று பகிர்ந்திருக்கிறார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

Vijay Sethupathi: "இது திடீரென அமைந்த ஒரு சர்ப்ரைஸ்" - எம்மி விருது விழாவில் விஜய் சேதுபதி

தொலைக்காட்சிப் படைப்புகளுக்கு வழங்கப்படும் எம்மி விருதுகள் விழா அமெரிக்காவின் நியூயார்க் நகரில் கோலாகலமாக நடைபெற்றுள்ளது. இந்த விழாவில் விருது வழங்கும் பிரசண்டராகப் பங்கேற்றிருக்கிறார் விஜய் சேதுபதி.இ... மேலும் பார்க்க

பொன்னியின் செல்வன் : வரலாறும் புனைவும்! | ஆதி தாமிரா | `சினி'ஸ்கோப் 44

வந்தியத்தேவனுக்கும், அவனது குதிரை செம்பாவுக்கும் இடையிலான உறவு அழகானது. கடம்பூர் மாளிகைக்குள் நுழையவிடாமல் வந்தியன் தடுக்கப்படும்போது, செம்பாவின் உதவியால் அதை மீறுகிறான். போலவே அருள்மொழிக்கு யானைகளோடு... மேலும் பார்க்க

Hello Kadhal: "இருவரும் சேர்வதற்கு நானும் ஒரு காரணமாக இருந்தேன்" - சதீஷ் கலகல

ஆர்யா, நிகிலா விமல், வைஷ்ணவி சைதன்யா ஆகியோர் நடித்திருக்கும் 'ஹலோ காதல்' திரைப்படம் டிசம்பர் 4-ம் தேதி வெளியாகிறது. மலையாளத்தில் 'பிரணய விலாசம்' படத்தை இயக்கிய இயக்குநர் நிகில் முரளி, இப்படத்தை இயக்கி... மேலும் பார்க்க

"அவர் உயிரோடு இருந்திருந்தால் 10 ஹீரோக்களை அறிமுகப்படுத்தியிருப்பார்" - நினைவுகளைப் பகிரும் ஆர்யா

ஆர்யா, நிகிலா விமல், வைஷ்ணவி சைதன்யா ஆகியோர் நடித்திருக்கும் 'ஹலோ காதல்' திரைப்படம் டிசம்பர் 4-ம் தேதி வெளியாகிறது. மலையாளத்தில் 'பிரணய விலாசம்' படத்தை இயக்கிய இயக்குநர் நிகில் முரளி, இப்படத்தை இயக்கி... மேலும் பார்க்க

"அந்த நபரின் வாழ்க்கை கருதி... அவரை எந்தக் கடவுள் வந்தாலும் காப்பாற்ற முடியாது!" - இயக்குநர் சேரன்

ஜெயா டி.வி-யில் இயக்குநர் மற்றும் நடிகர் சேரன் 'யார் சரி' என்கிற விவாத நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி வருகிறார். அந்த நிகழ்ச்சியின் சமீபத்திய எபிசோட் 'பாப்புலாரிட்டி எதில் அதிகம் கிடைக்கிறது? சினிமாவா?... மேலும் பார்க்க