செய்திகள் :

Mookuthi Amman 2: "ஆண் நடிகர்களுக்குச் செய்ததை நடிகைகளுக்கு யாரும் செய்வதில்லை" - ரெஜினா பேட்டி

post image

சுந்தர் சி இயக்கத்தில் உருவாகியிருக்கும் 'மூக்குத்தி அம்மன் 2' திரைப்படம் தீபாவளி வெளியீடாக திரைக்கு வருகிறது. நயன்தாரா முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இப்படத்தில், ஊர்வசி, ரெஜினா கசாண்ட்ரா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

'விடாமுயற்சி' திரைப்படத்தைத் தொடர்ந்து இதிலும் மிரட்டும் வில்லி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் ரெஜினா. அவரை 'மூக்குத்தி அம்மன் 2' படத்திற்காகச் சந்தித்துப் பேட்டி கண்டோம்.

Mookuthi Amman 2
Mookuthi Amman 2

நம்மிடையே பேசியவர், "என் திரைப்பயணத்திலேயே முதல்முறையாக இந்த மாதிரியான ஒரு பெரிய கமர்சியல் படத்தில் வில்லியாக நடித்திருக்கிறேன். தொழில்நுட்ப ரீதியாகவும் எமோஷனல் ரீதியாகவும் ஒவ்வொரு தருணத்தையும் மிகவும் ரசித்துச் செய்தேன்.

உங்களுக்கும் அதே போன்றதொரு அனுபவம் கிடைக்கும். நான் வருகின்ற காட்சிகள் மற்றும் ஷாட்டுகளில் கிராபிக்ஸ் அதிகமாக இருக்கும். இயக்குநர் சுந்தர் சி சார் கூறியது போல், படத்தில் குறைந்தபட்சம் 3,000 சிஜி ஷாட்கள் உள்ளன.

கிராபிக்ஸுக்காக ஒரு பெரிய குழு கடந்த ஒரு வருடமாக உழைத்து வருகிறது. வரலாற்றுப் படங்கள் என்றாலே ஹெவி மேக்கப் மற்றும் ஆடைகள் இருக்கத்தான் செய்யும். ஆனால் ஒரு நடிகையாக நான் அதை மிகவும் ரசித்துச் செய்கிறேன்.

மேக்கப் போட நேரம் எடுக்கும் என்றாலும், மனதளவில் அதை ஏற்றுக்கொண்டு செய்யத் தொடங்கிவிட்டால் அது கடினமாகத் தெரியாது. சுந்தர் சி சார் தனது ஃபேண்டஸி உலகில் ஓர் அம்மன் படத்தைத் தனது சொந்த முத்திரையோடு கமர்சியலாக உருவாக்கியிருக்கிறார்.

அதில் நான் வில்லியாக நடித்திருப்பதும் முற்றிலும் புதிய அனுபவம். தினமும் என் மேக்கப்பிற்கே 2 மணி நேரம் செலவாகும்.

குறிப்பாக என் இண்ட்ரோ காட்சிக்கு தேன் மற்றும் பிஸ்தா பச்சை நிறத்திலான ஒரு பிசுபிசுப்பான திரவத்தைத் தலை முதல் கால் வரை என் மீது ஊற்றிவிட்டார்கள். அதைச் சமாளித்து நடித்ததே ஒரு தனி அனுபவம்தான்" என்றார்.

Regina Cassandra Interview - Mookuthi Amman 2
Regina Cassandra Interview - Mookuthi Amman 2

'மூக்குத்தி அம்மன் 2' திரைப்படத்திற்காக நடிகை நயன்தாராவுக்கு 60 அடியில் கட்-அவுட்டை அவருடைய ரசிகர்கள் வைத்திருக்கிறார்கள்.

அது குறித்துப் பேசிய ரெஜினா, "பல தசாப்தங்களாக தமிழ் சினிமாவில் முன்னணி ஆண் சூப்பர் ஸ்டார்களுக்கு மட்டுமே பிரமாண்டமான கட்-அவுட்கள் வைக்கப்பட்டுப் பார்த்திருக்கிறோம்.

ஆனால் நடிகைகளுக்கு அதை யாரும் செய்ததில்லை. நயன்தாராவிற்கு கட்-அவுட் வைக்கப்பட்ட பிறகுதான், ராதிகா மேமிற்கு 'தாய் கிழவி' படத்திற்காக கட்-அவுட் வைத்திருந்த விஷயம் எனக்குத் தெரியவந்தது.

30-40 ஆண்டுகளுக்கும் மேலாக திரையுலகில் சாதித்து வரும் ராதிகா மேமிற்கு இப்போதுதான் கட்-அவுட் வைக்கப்பட்டுள்ளது.

எனவே, ஆண் நடிகர்களுக்கு இணையான பிரமாண்ட கட்-அவுட்கள் நயன்தாரா, ராதிகா போன்ற பெண் நடிகைகளுக்கும் வைக்கப்படுவது திரையுலகில் ஆரோக்கியமான ஒரு மாற்றத்தின் அடையாளம்" என்றவர், "'விடாமுயற்சி' திரைப்படத்திற்குப் பிறகு எனக்கு வில்லி கதாபாத்திரங்கள் நிறைய வருகின்றன.

Regina Cassandra Interview - Mookuthi Amman 2
Regina Cassandra Interview - Mookuthi Amman 2

அந்த வரிசையில்தான் 'மூக்குத்தி அம்மன் 2' பட வாய்ப்பும் வந்தது. அஜித் சாருடன் 'விடாமுயற்சி' போன்ற பெரிய திரைப்படத்தில் நடித்த பிறகு, எந்தவொரு திரையுலகிலும் ஒரே மாதிரியான கதாபாத்திரங்களுக்குள் நடிகர்களை அடைப்பது மிகவும் எளிதாக நடந்துவிடும்.

ஆனால், அப்படி நடந்துவிடக் கூடாது என்பதில் நான் மிகத் தெளிவாக இருக்கிறேன். அதன் காரணமாகவே நான் மிகவும் கவனமாக, குறைந்த அளவிலான திரைப்படங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வருகிறேன்" எனப் பகிர்ந்துகொண்டார்.

"பழையன நினைத்தல், புதியன புகுத்தல்" - ஒளிப்பதிவாளர் சங்கத் தலைவராகப் பதவியேற்ற எஸ்.சரவணன் பாலிசி!

கோடம்பாக்கத்தில் உள்ள சினிமா சங்கங்களில் சிறப்பு வாய்ந்த ஒன்று, தென்னிந்திய திரைப்பட ஒளிப்பதிவாளர்கள் சங்கம். ( SICA ) 1972ல் ஆரம்பிக்கப்பட்ட இச்சங்கம் பொன்விழாவைக் கடந்து வெற்றிகரமாகச் செயல்பட்டு வரு... மேலும் பார்க்க

Ramayana: "அதற்கு ஐஸ் கிரீம் விற்கலாம்" - 'ராமாயணா' பாடல் விமர்சனங்களுக்கு ரஹ்மானின் பதில் என்ன?

நிதேஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர், சாய் பல்லவி மற்றும் யஷ் நடிப்பில் பிரமாண்டமாக வெளியாகயிருக்கும் திரைப்படம் 'ராமாயணா'. இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் - ஹான்ஸ் ஜிம்மர் ஆகியோர் இசையமைத்திருக்கின்றன... மேலும் பார்க்க

Mookuthi Amman 2: நெல்லையில் நயன்தாராவுக்கு வைக்கப்பட்ட 80 அடி உயர பிரமாண்ட கட்-அவுட்! | Photos

நெல்லையில் நடிகை நயன்தாராவுக்கு வைக்கப்பட்ட 80-அடி உயர பிரம்மாண்ட கட் -அவுட்!'மூக்குத்தி அம்மன்-2 என் மனதிற்கு நெருக்கமானப் படம்.!'- நடிகை நயன்தாரா நெகிழ்ச்சி மேலும் பார்க்க

Daredevil: பூஜையுடன் தொடங்கிய படப்பிடிப்பு; கதாநாயகியாக கமிட்டான ஸ்ரீலீலா - 'டேர் டெவில்' அப்டேட்ஸ்

'குட் பேட் அக்லி' படதைத் தொடர்ந்து இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிக்கும் படத்தின் அறிவிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியாகியிருந்தது. படத்தின் முதல் அறிவிப்பையே தலைப்போடு அற... மேலும் பார்க்க

Scene: "அப்போது என்னுடைய குரல் முழுவதுமாக போய்விட்டது; ஆனால் லிப் சிங்க் செய்யாமல்..." - விஜய் நரேன்

'ஏய் சுழலி', 'போறேன் நான் போறேன்' என நமக்கு ஃபேவரிட்டான பல பாடல்களைப் பாடியவர் பின்னணிப் பாடகர் விஜய் நரேன். சமீபத்தில் இவரின் 'கேரளநாடு' பாடலும் இணையத்தில் வைரலானது. இவர் 'சீன்' படத்திலும் ஒரு பாடலைப... மேலும் பார்க்க

Abishan Jeevinth: 'செல்லமே மகளே'; பெண் குழந்தை பிறந்திருக்கும் செய்தியை பகிர்ந்த அபிஷன் ஜீவிந்த்!

'டூரிஸ்ட் ஃபேமிலி' திரைப்படத்தின் மூலம் பெரியளவில் கவனிக்கப்பட்டவர் இயக்குநர் அபிஷன் ஜீவிந்த். சசிகுமார், சிம்ரன் ஆகியோர் நடித்திருந்த அந்தப் படத்திற்கு வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்லதொரு ... மேலும் பார்க்க