செய்திகள் :

NEET: "முதல்வர் திரைப்படங்களில் மட்டுமே ஜனநாயகவாதியா?" - தமிழக மாணவர்கள் கைதுக்கு சீமான் கண்டனம்

post image

தமிழகத்தில் வீதிக்கு இறங்கிப் போராட முயலும் மாணவர்கள் மற்றும் இளைஞர்களை காவல் துறையைக் கொண்டு தவெக அரசு ஒடுக்குவது கடுமையாகக் கண்டிக்கத்தக்கது என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

ஜனநாயகத்திற்குச் செய்யும் துரோகம்

இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், " நீட் தேர்வில் நடந்த முறைகேடுகள் மற்றும் குளறுபடிகளுக்கு எதிராக டெல்லியில் நடைபெற்ற பிரம்மாண்ட இளைஞர் போராட்டத்தின் தொடர்ச்சியாக, வடமாநிலங்களில் போராட்டங்கள் பரவி வரும் நிலையில், தமிழகத்தில் வீதிக்கு இறங்கிப் போராட முயலும் மாணவர்கள் மற்றும் இளைஞர்களை காவல் துறையைக் கொண்டு தவெக அரசு ஒடுக்குவது கடுமையாகக் கண்டிக்கத்தக்கது. நீட் தேர்வை எதிர்ப்பதாகக் கூறிக்கொண்டே, அதற்கு எதிராகத் தன்னிச்சையாகப் போராடும் இளைய தலைமுறையின் போராட்டத்தை ஒடுக்கும் மாநில அரசின் போக்கு, ஜனநாயகத்திற்குச் செய்யும் துரோகமாகும்.

சென்னையில் மாணவர்கள் போராட்டம்
சென்னையில் மாணவர்கள் போராட்டம்

திரைப்படங்களில் மட்டுமே ஜனநாயகவாதியா?

திரையில் தன்னை ஒரு 'ஜனநாயகன்' என்று காட்டிக்கொள்ளும் முதலமைச்சர் விஜய், களத்தில் காவல் துறை மூலம் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மீது அரசு வன்முறையை ஏவிவிட்டு, ஜனநாயகத்தைப் படுகொலை செய்வது நியாயமா? அவர் திரைப்படங்களில் மட்டுமே ஜனநாயகவாதியா?

வடமாநில இளைஞர்கள் தங்களது கல்வி உரிமைக்காக டெல்லி வீதிகளில் நின்று போராடும் வேளையில், தமிழக இளைஞர்களை சினிமா திரையரங்குகளின் முன் வரிசையில் நிறுத்தி வைப்பது ஏற்றுக்கொள்ள முடியாத கொடுமையாகும். ஒருபுறம், டெல்லியில் இளைஞர் போராட்டத்தை பாஜக அரசு ஒடுக்குவதைக் கண்டிப்பதாகக் கூறிக்கொண்டு, மறுபுறம் தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிரான இளைஞர் போராட்டங்களை நசுக்க முயல்வது தவெக அரசின் இரட்டை வேடம் அல்லவா?

என்னவொரு கூத்து!

பாஜகவை சித்தாந்த எதிரி என்று கூறிக்கொண்டே, ரகசியமாக அவர்களின் நலன்களுக்குச் சேவை செய்வது தவெக அரசின் மறைமுகச் சேவை அல்லவா? என்னவொரு கூத்து!

வடமாநிலங்களில் நடக்கும் போராட்டங்கள் நீட் தேர்வில் உள்ள முறைகேடுகளைக் கண்டிக்கும் அதே வேளையில், தமிழகத்தில் மட்டுமே நீட் அமைப்பே ஒரு மோசடி என்பதை வலியுறுத்திப் போராட்டங்கள் நடைபெறுகின்றன.

முந்தைய முறையை விடச் சிறந்தது என்று கூறி, தரமான மருத்துவர்களை உருவாக்குவது என்ற போர்வையில் கொண்டு வரப்பட்ட ஒரு அமைப்பில் இத்தனை முறைகேடுகளும், குழப்பங்களும், குளறுபடிகளும் நடக்கும்போது, இந்தத் தேர்வு முறையின் நோக்கம் தான் என்ன? கடந்த காலத்தில் இதே நீட் அமைப்பில் முறைகேடுகள் நடக்கவில்லை என்பதற்கு என்ன உத்தரவாதம் உள்ளது?

முதல்வர் விஜய் - பிரதமர் மோடி
முதல்வர் விஜய் - பிரதமர் மோடி

சமத்துவமற்றது...

எனவே, நீட் தேர்வில் நடந்த முறைகேடுகளை விசாரிப்பது மட்டுமின்றி, இந்த மோசடியான நீட் தேர்வு முறையை முழுமையாக ரத்து செய்வதே நாட்டின் சுகாதாரக் கட்டமைப்பைப் பாதுகாப்பதற்கான சிறந்த வாய்ப்பாகும். சீரான கற்றல் வாய்ப்புகளும் வசதிகளும் இல்லாத ஒரு நாட்டில், ஒரே மாதிரியான நுழைவுத் தேர்வை நடத்துவது இயல்பாகவே சமத்துவமற்றது. எனவே, சமத்துவத்திற்கு எதிரான நீட் தேர்வை நாம் தமிழர் கட்சி கடுமையாக எதிர்க்கிறது.

நீட் தேர்வு முற்றிலும் ஒழிக்கப்படட்டும்!

அரசியல் கட்சிகளும் இயக்கங்களும் நீட் தேர்வுக்கு எதிராகப் போராட்டங்களை முன்னெடுக்கும்போது, அவை பெரும்பாலும் அடையாள ஆர்ப்பாட்டங்களாகவே பார்க்கப்படுகின்றன. இருப்பினும், மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் வீதிக்கு இறங்கிப் போராடும்போது, அது ஒரு ஜனநாயகப் புரட்சியாக வெடித்து, ஆளும் வர்க்கத்தைப் பணிய வைத்து அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றச் செய்கிறது. இலக்கை நோக்கி உழைக்கும் இளைஞர் திரளின் அமைதியான போராட்டத்தை நான் முழுமையாக ஆதரிக்கிறேன், வரவேற்கிறேன். தமிழக இளைஞர்களின் அமைதியான போராட்டம் வெற்றி பெறட்டும்!

நீட் தேர்வு முற்றிலும் ஒழிக்கப்படட்டும்! அநீதிக்கு எதிராகப் போராட்ட குணத்துடன் போராடும் எனது சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் எனது வாழ்த்துகளும் அன்பும்!" என்று பதிவிட்டிருக்கிறார்.

"அண்ணாமலை விமர்சனம் செய்தால், பதிலடி கொடுப்போம்!" - வரிந்துகட்டுகிறார் வினோஜ் பி.செல்வம்

குதிரைப் பேரம் குற்றச்சாட்டில் ஆரம்பித்து, இந்து சமய அறநிலையத்துறை இடம் விவகாரம் வரையிலாக த.வெ.க அரசுக்கு எதிராக தொடர் கேள்விகளை எழுப்பிவருகிறார் பா.ஜ.க-வின் மாநில செயலாளர் வினோஜ் பி.செல்வம். அவரிடம் ... மேலும் பார்க்க

NEET: "ஜனநாயகன் எங்கே போனார்?"- தமிழக மாணவர்கள் கைதுக்கு அதிமுக கண்டனம்

நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரியும், டெல்லியில் நடைபெற்ற மாணவர் போராட்டத்திற்கு ஆதரவாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மாணவர் அமைப்பின... மேலும் பார்க்க

"சி.விஜயபாஸ்கர் - வியக்கிறேன்; வைகோ - பேசுவதற்கு ஒன்றுமில்லை!" - நாஞ்சில் சம்பத் 'நச்'

அதிரடி பேச்சுக்குச் சொந்தக்காரரான த.வெ.க பரப்புரை செயலாளர் நாஞ்சில் சம்பத், 'விஜய் காலடியில் வீழ்ந்து கிடக்கிறார் வைகோ!' எனப் பேசி பரபரப்பை பற்ற வைத்திருக்கிறார். இந்தச் சூழலில், த.வெ.க அரசு மீதான எதி... மேலும் பார்க்க

”தவெக-வில் சீனியர்களுக்கு மரியாதை இல்லை என நான் கூறவே இல்லை”- கடம்பூர் ராஜூ விளக்கம்!

முந்தைய சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க தோல்வியடைந்த நிலையில், அக்கட்சியில் இருந்து முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்.எ.ல்ஏ-க்கள் சிலர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து வருகின்றனர். அந்த வகையில் 3 முற... மேலும் பார்க்க

"இளைஞர்களின் எதிர்காலத்திற்கு தீங்கு விளைவித்ததே நீங்கள் தான்" - மோடி vs ராகுல், கார்கே

டெல்லி ஜந்தர் மந்தரில் நீட் தேர்வு வினாத்தாள் கசிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்றும் தொடர் போராட்டம் நடந்து வருகிறது. நீட் தேர்வு வினாத்த... மேலும் பார்க்க

"மாநிலங்களை நம்ப வேண்டிய நேரம் இது.!"- நீட் குறித்து திமுக தலைவர் ஸ்டாலின்

நீட் தேர்வு முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் கசிவு விவகாரங்களுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி டெல்லியில் இளைஞர்கள் தொடர் போராட்டத்த... மேலும் பார்க்க