செய்திகள் :

"அனைவருக்கும் கிடைக்க வேண்டும்; இல்லையென்றால் யாருக்கும் கிடைக்கக்கூடாது" - ஈரானின் 3 எச்சரிக்கை

post image

ஈரான் போர் புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்குப் பிறகு, அமெரிக்கா ஈரான் எண்ணெய் மீதான கெடுபிடிகளைச் சற்று தளர்த்தியது. ஆனால், இப்போது மீண்டும் போர் தொடங்கியிருக்கும் சூழலில், அமெரிக்கா ஈரான் வர்த்தகத்தை இறுக்கி வருகிறது.

இது குறித்து ஈரான் நாடாளுமன்ற அவைத் தலைவர் காலிபாஃப் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது...

"இந்தப் போரின் சமன்பாடு மிகத் தெளிவானது: ஒன்று அனைவருக்கும் கிடைக்க வேண்டும்... அல்லது யாருக்கும் கிடைக்கக் கூடாது!

காலிபாஃப்
காலிபாஃப்

நாங்கள் எண்ணெய் விற்பனை செய்யாத ஒரு பிராந்தியத்தில், வேறு எவரும் எண்ணெய் விற்க முடியாது.

நமது பாதுகாப்பு உறுதி செய்யப்படாவிட்டால், எந்தவொரு உள்கட்டமைப்பும் பாதுகாப்பாக இருக்காது. அதேபோல, அமெரிக்கப் படைகள் இல்லாத சூழலில்தான் இந்த நீர்ச்சந்தியின் பாதுகாப்பு சாத்தியமாகும்.

இந்த நீர்ச்சந்தியின் நிலைமை போருக்கு முந்தைய நிலைக்கு ஒருபோதும் திரும்பப் போவதில்லை என்பதை நாங்கள் மீண்டும் மீண்டும் தெளிவுபடுத்தியுள்ளோம்."

அடுத்ததாக, ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் அராக்சி தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது...

"நமது பாதுகாப்புத் தற்காப்புக் கோட்பாடு மிகத் தெளிவானது: கண்ணுக்குக் கண்!

நமது உள்கட்டமைப்புகள் உட்பட ஈரான் மீது நடத்தப்படும் எந்தவொரு தாக்குதலும், சக்திவாய்ந்த மற்றும் தீர்க்கமான பதிலடி கொடுக்க எங்களைக் கட்டாயப்படுத்தும்.

அத்தகைய தாக்குதல்களுக்கு எந்த வகையான ஆதரவை வழங்கினாலும், அதில் பங்கு வகிக்கும் எவரும் நமது தாக்குதலுக்குரிய நியாயமான இலக்குகளாகவே கருதப்படுவர்."

அப்பாஸ் அராக்சி
அப்பாஸ் அராக்சி

இந்த இரு பதிவுகள் மூலம் ஈரான் அமெரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு மூன்று எச்சரிக்கைகளை விடுத்துள்ளது.

ஒன்று, ஈரான் எண்ணெய் விற்பனையை யாரும் தடுக்கக் கூடாது.

இரண்டாவது, ஹார்முஸ் நீர்ச்சந்தியில் இருந்து அமெரிக்கா விலக வேண்டும்.

மூன்றாவது, ஈரான் மீது யார் தாக்குதல் நடத்தினாலும், திரும்பத் தாக்குதல் நடத்தப்படும்.

”தவெக-வில் சீனியர்களுக்கு மரியாதை இல்லை என நான் கூறவே இல்லை”- கடம்பூர் ராஜூ விளக்கம்!

முந்தைய சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க தோல்வியடைந்த நிலையில், அக்கட்சியில் இருந்து முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்.எ.ல்ஏ-க்கள் சிலர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து வருகின்றனர். அந்த வகையில் 3 முற... மேலும் பார்க்க

"இளைஞர்களின் எதிர்காலத்திற்கு தீங்கு விளைவித்ததே நீங்கள் தான்" - மோடி vs ராகுல், கார்கே

டெல்லி ஜந்தர் மந்தரில் நீட் தேர்வு வினாத்தாள் கசிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்றும் தொடர் போராட்டம் நடந்து வருகிறது. நீட் தேர்வு வினாத்த... மேலும் பார்க்க

"மாநிலங்களை நம்ப வேண்டிய நேரம் இது.!"- நீட் குறித்து திமுக தலைவர் ஸ்டாலின்

நீட் தேர்வு முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் கசிவு விவகாரங்களுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி டெல்லியில் இளைஞர்கள் தொடர் போராட்டத்த... மேலும் பார்க்க

ஜந்தர் மந்தரில் தடியடி: "ஒவ்வொரு காவல் அதிகாரியும் நீதி முன் நிறுத்தப்பட வேண்டும்!" - திரிணாமுல்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவிற்கு எதிராகவும், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்றும் ஜந்தர் மந்தரில் தொடர்ந்து போராட்டம் நடந்து வருகிறது. காக்ரோச் ஜனதா கட்சியின் நிறுவனர் அ... மேலும் பார்க்க

"கடமை இரண்டு திசைகளில் அழைக்கிறது; சென்னை செல்கிறேன், இதனால்.!" - மாணிக்கம் தாகூர்

டெல்லியில் காக்ரோச் ஜனதா கட்சிக்கு ஆதரவாக காங்கிரஸ் நடத்திய போராட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் தொடர்ந்து கலந்து வந்தார். இன்று அவர் சென்னை வரும் சூழலில், அதுகுறித்து தனத... மேலும் பார்க்க

`இளைஞர்களின் நலனும் எதிர்காலமும்தான் மிக முக்கியம்; எவரும் தப்பவிடப்பட மாட்டார்கள்.!' - பிரதமர் மோடி

நீட் தேர்வு வினாத்தாள் கசிவிற்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று டெல்லி ஜந்தர் மந்தரில் காக்ரோச் ஜனதா கட்சி 34 நாள்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். சமூ... மேலும் பார்க்க