செய்திகள் :

ரயிலில் கடத்திவரப்பட்ட 36 கிலோ கஞ்சா - ஒடிசாவைச் சேர்ந்த பெண் உட்பட 5 பேர் கைது

post image

ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா ரோடு ரயில் நிலையப் பகுதியில் தனிப்படை போலீஸார் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ஒரு ரயிலிலிருந்து இறங்கிவந்து வாகனத்துக்காக காத்திருந்த 4 பேரின் நடவடிக்கைகள் சந்தேகத்திற்கிடமாக இருந்ததால், அவர்களிடம் விசாரணை நடத்தினர். மேலும், அவர்களிடமிருந்த பைகளை சோதனை செய்தபோது, அதில் 14 கஞ்சா பார்சல்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

விசாரணையில், 4 பேரும் ஒடிசாவைச் சேர்ந்த பவுர்ணமி நாயக், ஹஸ்பினா நாயக், அமித் நாயக், பிஜாய் நாயக் எனத் தெரியவந்தது. கஞ்சாவை கடத்திவந்து தமிழ்நாட்டில் விற்க முயன்றதாகவும் தெரியவந்ததையடுத்து, 4 பேரையும் கைது செய்த போலீஸார் அவர்களிடமிருந்து 28 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா

இதேபோல், வேலூர் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு போலீஸார், காட்பாடி ரயில் நிலையத்தில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, வடமாநில இளைஞனைப் பிடித்து சோதனை செய்தபோது, 8 கிலோ கஞ்சா சிக்கியது. விசாரணையில், ஒடிசாவைச் சேர்ந்த தீபக் பத்ரா என்பது தெரியவந்தது. இதையடுத்து, கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸார் அந்த இளைஞனையும் கைது செய்தனர்.

திருச்சி: 'மூன்று இடங்கள்; திருடுபோன 110 சவரன் நகைகள்!' - அதிர்ச்சியில் திருவெறும்பூர் மக்கள்

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே உள்ள வடக்கு காட்டூர் அந்தோணியார் கோவில் தெருவை சேர்ந்தவர் மரியன் ஸ்டீபன் ( 45 ). இவர், மணப்பாறை ஆவாரம்பட்டியில் உள்ள உயர்நிலைப்பள்ளி ஆசிரியராக பணி புரிந்து வருக... மேலும் பார்க்க

புதுச்சேரி: 625 வகை போலி மருந்துகள்… நாடு முழுவதும் சப்ளை! - அடுத்தடுத்து சிக்கும் உயரதிகாரிகள் ?

இந்தியாவின் முக்கிய மருந்து நிறுவனங்களில் ஒன்றான சன் ஃபார்மா (Sun Pharmaceutical Industries Limited),தங்களின் உயிர்காக்கும் மருந்துகள் புதுச்சேரியில் போலியாக உற்பத்தி செய்யப்படுவதாக கடந்த 2024-ம் ஆண்ட... மேலும் பார்க்க

தருமபுரி: 3 குழந்தைகளுடன் கிணற்றில் மிதந்த தாயின் சடலம்; சந்தேகம் கிளப்பும் கயிறு - போலீஸ் விசாரணை!

தருமபுரி அருகே 3 குழந்தைகள், தாய் என 4 பேரின் சடலங்கள் கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட சம்பவம், அதிரச்சியை ஏற்படுத்தியுள்ளது.தற்கொலைதருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், தடங்கம் ஊராட்சி, தோக்கம்பட்டி கிர... மேலும் பார்க்க

10 வகுப்பு படித்துவிட்டு மருத்துவம் பார்த்த போலி மருத்துவர் கைது; நத்தத்தில் தொடரும் மோசடி

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் பகுதிகளில் போலி மருத்துவர்கள் நடமாட்டம் அதிகம் உள்ளதாக மாவட்ட நிர்வாகத்திற்குப் புகார்கள் வந்தன. இதைத்தொடர்ந்து நத்தம் பகுதியில் திண்டுக்கல் மாவட்ட இணை இயக்குநர் நலப்பணிகள... மேலும் பார்க்க

கவின் ஆணவக்கொலை: சுர்ஜித்தின் தந்தை சரவணன் கூலிப்படையை ஏவி மற்றொரு கொலைக்குத் திட்டம்; பின்னணி என்ன?

மாற்றுத்திறனாளி உரிமை செயல்பாட்டாளரும் மாற்றுத்திறனாளி வழக்கறிஞருமான முருகானந்தம் என்பவர் கடந்த 2025-ம் ஆண்டு ஜூலை மாதம் பட்டப்பகலில் கூலிப்படையால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். தேன் மொழி மெட்ரிகுலேஷ... மேலும் பார்க்க

ரூ.15,000-க்கு வங்கிகளின் போலி செயலி விற்பனை - பள்ளி படிப்பை கூட முடிக்காதவர் சிக்கியதெப்படி?

நாடு முழுவதும் இணையதள மோசடிகள் அதிக அளவில் நடந்து வருகிறது. இந்த மோசடியில் அதிக அளவில் பெண்கள் மற்றும் முதியவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதுவும் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி இது போன்ற மோசடிகள் அதிக அ... மேலும் பார்க்க