செய்திகள் :

`இளைஞர்களின் நலனும் எதிர்காலமும்தான் மிக முக்கியம்; எவரும் தப்பவிடப்பட மாட்டார்கள்.!' - பிரதமர் மோடி

post image

நீட் தேர்வு வினாத்தாள் கசிவிற்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று டெல்லி ஜந்தர் மந்தரில் காக்ரோச் ஜனதா கட்சி 34 நாள்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

சமூக செயற்பாட்டாளர் சோனம் வாங்சுக் 26 நாள்களாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.

கடந்த 20-ம் தேதி நாடாளுமன்றத்தை நோக்கியும் காக்ரோச் ஜனதா கட்சி பேரணி நடத்தியது. காங்கிரஸும் பிரதமர் மோடியின் வீட்டின் முன் போராட்டம் நடத்தினர்.

இந்த நிலையில், இந்தப் போராட்டத்திற்குப் பதிலளிப்பது போல மோடி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.

நீட்
நீட்

"நமது இளைஞர்களின் நலனும் எதிர்காலமும் தான் எங்களுக்கு எல்லாவற்றையும் விட மிக முக்கியம்!

வினாத்தாள் கசிவில் ஈடுபடுபவர்களுக்கு விரைவான மற்றும் கடுமையான தண்டனையை உறுதி செய்வதற்காக 'விரைவு நீதிமன்றங்களை' அமைக்க முடிவு செய்துள்ளோம்.

இது தொடர்பாகத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். மாணவர்களின் நலன்களைப் பாதுகாப்பதற்காக நாங்கள் எடுத்து வரும் தொடர் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இது அமையும்.

நமது இளைஞர்களின் எதிர்காலத்திற்குத் தீங்கு விளைவிக்க முயல்பவர்கள் எவரும் தப்பவிடப்பட மாட்டார்கள்." என குறிப்பிட்டுள்ளார்.

"மாநிலங்களை நம்ப வேண்டிய நேரம் இது.!"- நீட் குறித்து திமுக தலைவர் ஸ்டாலின்

நீட் தேர்வு முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் கசிவு விவகாரங்களுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி டெல்லியில் இளைஞர்கள் தொடர் போராட்டத்த... மேலும் பார்க்க

"அனைவருக்கும் கிடைக்க வேண்டும்; இல்லையென்றால் யாருக்கும் கிடைக்கக்கூடாது" - ஈரானின் 3 எச்சரிக்கை

ஈரான் போர் புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்குப் பிறகு, அமெரிக்கா ஈரான் எண்ணெய் மீதான கெடுபிடிகளைச் சற்று தளர்த்தியது. ஆனால், இப்போது மீண்டும் போர் தொடங்கியிருக்கும் சூழலில், அமெரிக்கா ஈரான் வர்த்தகத்தை இறு... மேலும் பார்க்க

ஜந்தர் மந்தரில் தடியடி: "ஒவ்வொரு காவல் அதிகாரியும் நீதி முன் நிறுத்தப்பட வேண்டும்!" - திரிணாமுல்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவிற்கு எதிராகவும், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்றும் ஜந்தர் மந்தரில் தொடர்ந்து போராட்டம் நடந்து வருகிறது. காக்ரோச் ஜனதா கட்சியின் நிறுவனர் அ... மேலும் பார்க்க

"கடமை இரண்டு திசைகளில் அழைக்கிறது; சென்னை செல்கிறேன், இதனால்.!" - மாணிக்கம் தாகூர்

டெல்லியில் காக்ரோச் ஜனதா கட்சிக்கு ஆதரவாக காங்கிரஸ் நடத்திய போராட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் தொடர்ந்து கலந்து வந்தார். இன்று அவர் சென்னை வரும் சூழலில், அதுகுறித்து தனத... மேலும் பார்க்க

CJP: 'உங்க சினிமாவை இனி.!" - போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த மோகன்லால் மகள் மீது சைபர் அட்டாக்

மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலின் மகள் விஸ்மயா மோகன்லால் `துடக்கம்' என்ற சினிமா மூலம் திரைத்துறையில் அடியெடுத்துவைத்துள்ளார். அவர், ​டெல்லி போராட்டத்தில் மாணவர்கள் மீது வன்முறை ஏவப்படுவதாக தனது இன்ஸ்ட... மேலும் பார்க்க

'ஹவுஸ்புல்' காக்ரோச் போராட்டம்; தி.நகரில் திரளும் மாணவர்கள்! - பாஜக அலுவலகத்துக்கு பலத்த பாதுகாப்பு!

டெல்லியின் காக்ரோச் ஜனதா பார்ட்டியின் போராட்டம் தீவிரமடைந்திருக்கும் நிலையிலும், சென்னையிலும் காக்ரோச்களின் போராட்டம் வேகமெடுக்க தொடங்கியிருக்கிறது.Cockroach Protestடெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த ஜூலை 2... மேலும் பார்க்க