செய்திகள் :

Once More: "என் Cousin ஃபகத் ஃபாசில்தான் என்னை அவரிடம் பரிந்துரைத்தார்"- இசையமைப்பாளர் ஹேஷாம் பேட்டி

post image

அர்ஜுன் தாஸ், அதிதி ஷங்கர், சோனா ஒலிக்கல் ஆகியோர் நடிப்பில் உருவாகியிருக்கும் 'ஒன்ஸ் மோர்' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது.

இப்படத்திற்கு 'ஹ்ருதயம்', 'குஷி', 'ஹாய் நானா' போன்ற படங்களுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஹேஷாம் அப்துல் வஹாப் இசையமைத்திருக்கிறார்.

நம் சினிமா விகடன் சேனலுக்கு அளித்த பேட்டியில், 'ஒன்ஸ் மோர்' திரைப்படப் பயணம், இயக்குநர் ஷங்கரைச் சந்தித்த தருணம் ஆகியவற்றைக் குறித்துப் பகிர்ந்திருக்கிறார்.

ஒன்ஸ் மோர் படம்
ஒன்ஸ் மோர் படம்

நம்மிடையே பேசுகையில், "‘குஷி’, ‘ஹாய் நானா’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் எனக்கு முற்றிலும் மாறுபட்ட, மறக்க முடியாத அனுபவங்களைத் தந்தவை. ‘குஷி’ திரைப்படத்தை முன்னணி தயாரிப்பு நிறுவனமான ‘மைத்ரி மூவி மேக்கர்ஸ்’ தயாரித்தது.

தெலுங்கு திரையுலகில் பிரபலமான இயக்குநரான சிவா நிர்வாணா அதை இயக்கியிருந்தார். அவரது முந்தைய படங்களை நான் ஏற்கனவே பார்த்திருந்ததால், அவருடைய டைரக்‌ஷன் பற்றி எனக்குத் தெரிந்திருந்தது.

ஒருநாள் மைத்ரி நிறுவனத்திலிருந்து என்னை அழைத்து, "ஹிஷாம், நாளைக்கு ஹைதராபாத் வர முடியுமா?" என்று கேட்டார்கள். நான் அதற்கு முன்பு ஹைதராபாத் சென்றதே இல்லை.

ஆனால், "நாளைக்கு நீங்கள் வந்து கண்டிப்பாக ஒரு பாடலை அமைத்துக் கொடுக்க வேண்டும்" என்றார்கள்.

எப்படியாவது சிறந்த இசையை உருவாக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் உடனே ஒப்புக்கொண்டேன். அப்படி ஹைதராபாத் சென்று இசையமைத்த பாடல் தான் 'என் ரோஜா நீயே'. அந்தப் பாடலுக்குப் பிறகே அப்படத்திற்கு நான் இசையமைப்பது உறுதி செய்யப்பட்டது.

அடுத்து ‘ஹாய் நான்னா’ திரைப்பட வாய்ப்பு எனக்குக் கிடைத்ததும் சுவாரசியமானது. நடிகர் ஃபஹத் ஃபாசில் எனது கசின் பிரதர். அவர்தான் நடிகர் நானி அவர்களிடம் எனது பெயரைப் பரிந்துரைத்தார். அதன் பிறகே ‘ஹ்ருதயம்’ படத்தில் நான் அமைத்த இசையைப் பற்றி நானி சார் அறிந்துகொண்டார்.

Hesham Abdul Wahab
Hesham Abdul Wahab

தொடர்ந்து அப்படத்தின் இயக்குநர் கொச்சிக்கு வந்து என்னைச் சந்தித்துப் பேசினார்" என்றவர், "எனக்கு மிகவும் பிடித்த திரைப்படங்களைப் பற்றிக் கூறினால், எப்போதும் ஏ.ஆர்.ரஹ்மான் சாரின் இசையில் உருவான ‘காதலன்’ திரைப்படம்தான் முதலிடத்தில் இருக்கும்.

இன்றளவும் அப்படத்தின் பாடல்களையும் காட்சிகளையும் பார்க்கும்போதெல்லாம் எனக்குள் மெய்சிலிர்க்கும். அந்தக் காலத்திலேயே பல்வேறு வகையான இசை ஜானர்களை ரஹ்மான் சார் முயற்சித்துப் பார்த்துள்ளார். சமீபத்தில் இயக்குநர் ஷங்கர் சாரை நேரில் சந்திக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அது உண்மையிலேயே ஒரு மறக்க முடியாத அனுபவம். ‘ஒன்ஸ் மோர்’ திரைப்படத்தில் ஷங்கர் சாரின் மகள் அதிதி நடிக்கிறார் என்ற செய்தி வந்தபோதே எனக்குப் பெரும் ஆர்வம் ஏற்பட்டது.

ஆனால், அதைவிட அப்படத்தைப் பார்த்தபோது அதிதி, சோனா ஒலிக்கல் மற்றும் அர்ஜுன் தாஸ் ஆகிய மூவரின் நடிப்பும் என்னை மிகவும் கவர்ந்தது. திரையில் நடிகர்களாக இல்லாமல், அந்தக் கதாபாத்திரங்களாகவே அவர்கள் வாழ்ந்திருந்தார்கள்.

அப்படத்தைப் பார்த்ததுமே நான் அதிதியின் தீவிர ரசிகனாகிவிட்டேன். அதன்பின் ‘ஒன்ஸ் மோர்’ படத்தின் பாடல்களையும் திரைப்படத்தையும் பார்த்த ஷங்கர் சார், "ஹிஷாம், மிகவும் சிறப்பாகச் செய்திருக்கிறீர்கள்!" என்று வாழ்த்தி மெசேஜ் அனுப்பியிருந்தார். ஏ.ஆர்.ரஹ்மான் - ஷங்கர் சார் கூட்டணியின் இசையைக் கேட்டு வளர்ந்தவன் நான்.

Hesham Abdul Wahab
Hesham Abdul Wahab

எனது இசைப் பயணமே அவர்களின் இசையிலிருந்துதான் தொடங்கியது. அப்படிப்பட்ட ஷங்கர் சாரிடமிருந்து வந்த பாராட்டுச் சொல் எனக்குக் கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம்.

உடனே நான் அவருக்கு நன்றி தெரிவித்து, "சார், உங்கள் திரைப்படங்களின் இசையைக் கேட்டுத்தான் என்னுடைய இசைப் பயணமே தொடங்கியது. உங்களின் இந்த மெசேஜைப் பார்த்ததில் எனக்கு அளவற்ற மகிழ்ச்சி" என்று பதிலளித்தேன்.

பின்னர் அவருடைய அலுவலகத்திற்குச் சென்று அவரை நேரில் சந்தித்துப் பேசி, புகைப்படமும் எடுத்துக்கொண்டேன். என்னுடைய நீண்ட நாள் கனவு நனவான தருணம் அது!" எனப் பகிர்ந்துகொண்டார்.

எந்திரன் : தகர்க்கப்பட்ட எல்லைகள்! | ஆதி தாமிரா | `சினி'ஸ்கோப் 22

`சினி'ஸ்கோப் 22எந்திரன்2000க்குப் பிறகு சுமார் 10 வருடங்கள், இந்தியாவின் பெரும்பகுதி சினிமா மார்க்கெட்டை தன்வசம் வைத்திருக்கும் இந்தி சினிமா, காதல் படங்களையும், சிறிய அளவு ஸ்பை ஆக்‌ஷன் படங்களையும் 20 ... மேலும் பார்க்க

என்ன விலை: ``என் நடிப்பை பார்த்து நிமிஷா சஜயன் எனக்கு முத்தம் கொடுத்தாங்க" - நடிகர் கருணாஸ்

சஜீவ் பழூர் இயக்கத்தில் நிமிஷா சஜயன், கருணாஸ் நடித்த ‘என்ன விலை’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய நடிகர் கருணாஸ், ``25 வருஷத்துக்கு முன்னாடி, 200... மேலும் பார்க்க

Yuvan Shankar Raja: 'மீண்டும் அந்த OG கூட்டணிகள்' - எதிர்பார்ப்பைக் கூட்டம் யுவன் லைன் அப்!

முன்னணி இயக்குநர்களின் திரைப்படங்கள், புதுமுக இயக்குநர்களுடன் கூட்டணி என யுவன் அடுத்தடுத்து பரபரப்பான லைன்அப்களை வைத்திருக்கிறார். அப்படங்களும் அடுத்தடுத்து ரிலீஸுக்குத் தயாராகிவருகின்றன. அந்த லைன்அப்... மேலும் பார்க்க

Sardar 2: "நல்ல பெயர் வாங்க அண்ணன் சூர்யாவை மாட்டிவிடுவேன்" - கார்த்தி ஜாலி டாக்

கார்த்தி நடித்திருக்கும் 'சர்தார் 2' படம் செப்டம்பர் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. பி.எஸ். மித்ரன் இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் மாளவிகா மோகனன், ரஜிஷா விஜயன், ஆஷிகா ரங்கநாத் ஆகியோர் நடித... மேலும் பார்க்க

Mani Ratnam: 'நீ இஞ்சி, நான் வெல்லம்!' - ஒளிப்பதிவாளரை மாற்றிய மணி ரத்னம் - 'இஞ்சி வெல்லம்' அப்டேட்!

'தக் லைஃப்' படத்திற்குப் பிறகு மணி ரத்னம் இயக்கும் படத்தின் தலைப்பை இன்று அறிவித்திருக்கிறார்கள். விஜய் சேதுபதி, சாய் பல்லவி ஆகியோர் நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில தினங்களுக்கு முன்பு கொ... மேலும் பார்க்க

Ajith: ''பில்லா 2' படத்தை நான் இயக்காதது ஏன்?' - இயக்குநர் விஷ்ணுவரதன் விளக்கம்

தமிழ் சினிமாவில் நடிகர் அஜித் குமாரின் 'பில்லா', 'ஆரம்பம்' போன்ற ஹிட் படங்களை இயக்கியவர் இயக்குநர் விஷ்ணுவர்தன். 'பில்லா' படத்தின் வெற்றிக்குப் பிறகு, அதன் இரண்டாம் பாகமான 'பில்லா 2' திரைப்படத்தையும் ... மேலும் பார்க்க