AI: “என் முகத்தைப் பயன்படுத்தாதீர்கள்; மீறினால்..!” – நடிகை நேஹா ஷர்மா எச்சரிக்...
Rain Alert: தமிழகத்தில் இன்று எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு? - வானிலை ஆய்வு மையம் தகவல்!
தமிழகத்தின் 17 மாவட்டங்களில் இன்று (அக். 18) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

இந்நிலையில் இன்று (அக்.18) "நீலகிரி, கோயம்புத்தூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், ஈரோடு உள்ளிட்ட 17 மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் அநேக இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்" என சென்னை வானிலை மையம் தெரிவித்திருக்கிறது.















