செய்திகள் :

Rashmika: "திருமணம் பற்றிய தகவலை நான் மறுக்கவில்லை, அதே சமயம்!"- ராஷ்மிகா மந்தனா

post image

2016-ம் ஆண்டு கன்னடத் திரையுலகில் வெளியான ‘க்ரிக் பார்ட்டி’ படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ராஷ்மிகா மந்தனா.

கன்னட திரையுலகில் ஆரம்பித்த ராஷ்மிகா மந்தனாவின் திரையுலகப் பயணம் தெலுங்கு, தமிழ், தொடர்ந்து பாலிவுட் வரை சென்றிருக்கிறது.

சமீபத்தில் இவரது நடிப்பில் 'The Girlfriend' படம் வெளியாகியிருந்தது. இதனிடையே ‘கீதா கோவிந்தம்', 'டியர் காம்ரேட்' படங்களில் ஒன்றாக இணைந்து நடித்த விஜய் தேவரகொண்டா- ராஷ்மிகா இருவரும் சில வருடங்களாக காதலித்து வருவதாகத் தகவல் வெளியானது.

விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா
விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா

இதனை இருவரும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவும் இல்லை அதே சமயம் மறுக்கவும் இல்லை.

சமீபத்தில் இவர்கள் இருவருக்கும் பிப்ரவரியில் திருமணம் நடைபெற இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இந்நிலையில் 'தி ஹாலிவுட் ரிப்போர்டர்' ஊடகத்திற்கு ராஷ்மிகா பேட்டி அளித்திருக்கிறார்.

அதில் விஜய் தேவரகொண்டா உடனான திருமணம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது.

அதற்கு பதிலளித்த ராஷ்மிகா, “திருமணம் பற்றிய தகவலை நான் இப்போது உறுதிப்படுத்தவும், மறுக்கவும் விரும்பவில்லை.

அதை பற்றி பேச வேண்டிய நேரம் வந்தால் கண்டிப்பாக தெரிவிப்போம்” என்று கூறியிருக்கிறார்.

தொடர்ந்து பேசிய அவர், "நான் விஜய் தேவரகொண்டாவிடம் வேலை விஷயமாக நிறைய பேசமாட்டேன்.

விஜய் தேவரகொண்டா - ரஷ்மிகா
விஜய் தேவரகொண்டா - ரஷ்மிகா

80 சதவிகித நேரம் வேலையைப் பற்றி நான் வீட்டில் பேச மாட்டேன். வேலை சார்ந்த ஏதாவது ஒரு விஷயம் எனக்கு மனதில் சுமையாக இருந்தால், மட்டும் ஆலோசனைக்காக விஜய் தேவரகொண்டாவிடம் கேட்பேன்.

நான் வேலைக்கு 100 சதவிகிதம் கொடுப்பவள், ஆனால் வீட்டில் இருக்கும்போது வேலையை பற்றி பேச மாட்டேன்" என்று கூறியிருக்கிறார்.

Akhanda 2: ''தெய்வ சக்தி இல்லாம இதெல்லாம் நடக்காது" - சென்னையில் பாலைய்யா

நந்தமுரி பாலகிருஷ்ணா நடித்திருக்கும் 'அகண்டா 2: தாண்டவம்' திரைப்படம் இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகிறது. 2021-ம் ஆண்டு வெளியான முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து இப்படத்தை இயக்கியிருக்கிறார் இயக... மேலும் பார்க்க

"படப்பிடிப்பில் தகாத வார்த்தையை உபயோகிக்கும் தெலுங்கு இயக்குநர்" - நடிகை திவ்யபாரதி குற்றச்சாட்டு

சமீபத்தில் ‘OTHERS’ என்ற தமிழ் பட பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பத்திரிகையாளர் ஒருவர் ஹிரோவிடம் "கெளரி கிஷனின் வெயிட் (எடை) என்ன?" என்று கேள்வி கேட்டது பெரும் சர்ச்சைக் கிளப்பியிருந்தது.இதுகுறித்து கோ... மேலும் பார்க்க

SS Rajamouli: `அனுமனை அவமதிக்கும் பேச்சு' - இயக்குநருக்கு எதிராக இந்து அமைப்புகள் புகார்

திரைப்பட இயக்குநர் எஸ்.எஸ் ராஜமௌலி மீது ராஷ்டிரிய வானர சேனா அமைப்பினர் ஹைத்ராபாத்தில் உள்ள சரூர்நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். சமீபத்தில் நடந்த வாரணாசி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இ... மேலும் பார்க்க

"அதை 60 நாள்கள் படமாக்கினோம்"-'வாரணாசி' படம் குறித்து ராஜமெளலி

ராஜமெளலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடிக்கும் படத்திற்கு 'வாரணாசி' எனப் பெயரிடப்பட்டுள்ளது. 'ருத்ரா' என்ற கதாபாத்திரத்தில் மகேஷ் பாபு நடிக்கிறார்.கதாநாயகியாக 'மந்தாகினி' என்ற கதாபாத்திரத்தில் பிரியங்கா சோ... மேலும் பார்க்க