செய்திகள் :

Rio Raj: அப்போது 'ராம் இன் லீலா', இப்போது 'ராம் & லீலா'; சென்சாரினால் பட தலைப்பில் ஏற்பட்ட மாற்றம்!

post image

'ஆண்பாவம் பொல்லாதது' படத்தின் வெற்றிக்குப் பிறகு நடிகர் ரியோ நடித்திருக்கும் 'ராம் & லீலா' படம் இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகிறது.

அறிமுக இயக்குநர் ராமச்சந்திரன் கண்ணன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்தப் படத்தில் சேத்தன், தீபா வெங்கட் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

Rio - Ram & Leela
Rio - Ram & Leela

நடிகை தீபா வெங்கட், பல வருட இடைவெளிக்குப் பிறகு இந்தப் படத்தின் மூலம் மீண்டும் நடிக்க வந்திருக்கிறார்.

இப்படம் வெளியாகவிருக்கிற நேரத்தில் படத்தின் தலைப்பில் சிறிய மாற்றத்தைப் படக்குழுவினர் மேற்கொண்டிருக்கிறார்கள்.

முதலில் இந்தத் திரைப்படத்திற்கு 'ராம் இன் லீலா' எனத் தலைப்பிட்டிருக்கிறார்கள். ஆனால், சென்சாரில் இந்தப் பெயரை மாற்றப் பரிந்துரைத்திருக்கிறார்கள்.

அதன் பிறகு படத்தின் தலைப்பை 'ரகு இன் லீலா' எனப் படக்குழுவினர் மாற்றவிருப்பதாகத் தகவல்கள் பேசப்பட்டன.

Rio - Ram & Leela
Rio - Ram & Leela

நேற்றைய தினம் படக்குழுவினர், படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்திருப்பதாகப் பதிவிட்டார்கள். அதில் தலைப்பு, 'ராம் அண்ட் லீலா' என மாற்றப்பட்டிருக்கிறது.

ராம் என்கிற பெயர் சென்சிடிவாக இருப்பதனால், தலைப்பில் மாற்றத்தை மேற்கொள்ள தணிக்கை குழுவினர் கூறியதாக நடிகர் ரியோ தெரிவித்திருக்கிறார்.

படத்திற்கு தணிக்கை சான்றிதழ் கிடைத்திருப்பதாக நடிகர் ரியோ பதிவிட்ட பதிவில், "மின்னல விழுங்கி… U/A-வ கொப்பளிச்சாச்சு!" எனக் குறிப்பிட்டு பதிவிட்டிருக்கிறார்.

Kamal Haasan: "இந்தியாவின் கதைகள் உலகளாவிய பார்வையாளர்களைக் கவரும் வலிமை கொண்டவை!" - கமல்ஹாசன்

Essel குழுமம் தொடங்கப்பட்டு 100 ஆண்டுகள் நிறைவு செய்திருப்பதையொட்டி, Zee தமிழ், Zee திரை மற்றும் தமிழ் Zee 5 இணைந்து சென்னை ITC கிராண்ட் சோழா ஹோட்டலில் மிகப் பிரமாண்டமான விழாவை நடத்தியது. தமிழ் திரையு... மேலும் பார்க்க

தியாகராஜன் குமாராஜாவின் 'பாக்கெட் நாவல்' 'லீலை' ரீரிலீஸ்: வதந்தி 2 இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ் அப்டேட்

ஓடிடி-யில் வரவேற்பை அள்ளிக் கொண்டிருக்கும் 'வதந்தி சீசன் 2'வை இயக்கியவர் ஆண்ட்ரூ லூயிஸ். இதற்கு முன் 'கொலைகாரன்' படத்தை இயக்கியவர். த்ரில்லர் பட இயக்குநராக பெயரெடுத்துவிட்ட ஆண்ட்ரூவின் முதல் படமான 'லீ... மேலும் பார்க்க

Vishwanath & Sons: "குழந்தைகள் என் காமெடி காட்சிகளைக் கொண்டாடும்போது..." - நெகிழும் மமிதா பைஜூ

சூர்யாவின் 'விஸ்வநாத் & சன்ஸ்' படம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. Vishwanath & Sons வெங்கி அட்லூரி இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் ராதிகா சரத்குமார், மமிதா பைஜூ, ரவீனா டாண்டன் ஆகியோர்... மேலும் பார்க்க

Paris Cafe: `பாரிஸ் நகரில் சிரமத்தைப் பொருட்படுத்தாமல் படப்பிடிப்பு நடத்தினோம்' - குரு சோமசுந்தரம்

கண்மணி ரங்கநாதன் தயாரிப்பில் சரஜ் சீலன் இயக்கத்தில் குரு சோமசுந்தரம், அனுமோல், அர்ச்சனா குமார், விஜய் விஷ்வா, சாய் விக்கி, நயனா உள்ளிட்டோர் நடித்துள்ள 'பாரிஸ் கபே' திரைப்படம் விரைவில் திரைக்கு வருகிறத... மேலும் பார்க்க

Paris Cafe: ``நம் யாராலும் தவிர்க்க முடியாத முக்கியமான விஷயம்" - நடிகை அனுமோல் பேச்சு

கண்மணி ரங்கநாதன் தயாரிப்பில் சரஜ் சீலன் இயக்கத்தில் குரு சோமசுந்தரம், அனுமோல், அர்ச்சனா குமார், விஜய் விஷ்வா, சாய் விக்கி, நயனா உள்ளிட்டோர் நடித்துள்ள 'பாரிஸ் கபே' திரைப்படம் விரைவில் திரைக்கு வருகிறத... மேலும் பார்க்க

Arun Vijay: "பலத்தோடு மீண்டும் வருவேன்" - 'இருளன்' படப்பிடிப்பில் அருண் விஜய்க்கு ஏற்பட்ட காயம்

நடிகர் அருண் விஜய், இப்போது இயக்குநர் முத்தையா இயக்கத்தில் 'இருளன்' படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு தென் மாவட்டங்களில் நடைபெற்று வருகிறது. எப்போதுமே அருண் விஜய் ஆக்ஷன் காட்சிகளுக்குச் சி... மேலும் பார்க்க