செய்திகள் :

Samanthi: "சீரியலின் கதை பிடிக்கலைனா சம்பளத்தை அதிகமாகச் சொல்லிடுவேன்!" - சுர்ஜீத் பேட்டி

post image

ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் 'சந்தியாராகம்' தொடர் மூலம் மக்களின் அன்பைப் பெற்றவர் நடிகர் சுர்ஜித்.

அந்த சீரியலிலிருந்து விலகியவர் இப்போது 'சாமந்தி' தொடரின் மூலம் மீண்டும் 'ஜீ தமிழ்' சேனலுக்கு வந்திருக்கிறார். இந்த சீரியலுக்காக அவரைச் சந்தித்துப் பேட்டி கண்டோம்.

Surjith - Samanthi Serial
Surjith - Samanthi Serial

நம்மிடையே பேசியவர், "'சாமந்தி' சீரியலோட ஷூட்டிங் இப்போதான் ஆரம்பிச்சிருக்கோம். ரொம்ப கலகலப்பான, ஜாலியான ஒரு டீம் அமைந்திருக்கிறது. இந்த சீரியலின் கதை ஒரு கியூட்டான லவ் ஸ்டோரி. கூடவே நிறைய ஃபேண்டசி எலிமென்ட்ஸ் இருக்கும்.

வழக்கமான சீரியல்களில் மாமியார்-மருமகள் சண்டைதான் பிரதானமாக இருக்கும், ஆனா இதுல அது ஒரு பகுதியா இருந்தாலும், அம்மாவுக்கும் பையனுக்கும் இடையேயான பாசப் போராட்டம் ரொம்ப முக்கியமானது. நான் இதில் 'அர்ஜுன்' என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறேன்.

இந்த சீரியலில் வர்ற 'ஃபேண்டசி' என்பது மேஜிக் மற்றும் ரோபோட் சம்பந்தப்பட்டது. தமிழ் சீரியலில் தொடக்கம் முதல் முடிவு வரை ஒரு ரோபோட் முழுமையாக வருவது இதுவே முதன்முறை என நினைக்கிறேன். இது குழந்தைகளுக்கு ரொம்பவே பிடிக்கும்.

இந்த சீரியல் ஜீ தெலுங்கில் இதே தலைப்பில் வெளிவந்து வெற்றிபெற்ற ஒரு தொடரின் ரீமேக்தான். தெலுங்கு பதிப்பில் கதாநாயகனாக நடிக்கும் ஆசிஷ் சக்கரவர்த்தி என்னுடைய நெருங்கிய நண்பன். தயாரிப்புத் தரப்பில் தமிழில் நடிக்கப் பொருத்தமான நபரைத் தேடியபோது அவன்தான் என் பெயரைப் பரிந்துரைத்தான்.

நடிகர் விஷ்வா சாரைச் சின்ன வயதில் 'மெட்டி ஒலி' சீரியலில் பார்த்திருக்கிறேன். அவரும் இந்த சீரியலில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். எனக்கு அவரை ரொம்பவே பிடிக்கும்.

ஷமிதா மேம் நடித்த படங்களையெல்லாம் பார்த்திருக்கிறேன். செட்டில் அனைவருமே மூத்த கலைஞர்களாக இருப்பதால் கொஞ்சம் கவனமாகத்தான் நடிக்க வேண்டும்" என்றார்.

Surjith - Samanthi Serial
Surjith - Samanthi Serial

தொடர்ந்து பேசியவர், "நான் ஒவ்வொரு சீரியலைத் தேர்வு செய்யும்போதும், அதனுடைய கதையில் புதிதாக அல்லது தனித்துவமாக என்ன இருக்கிறது என்றுதான் பார்ப்பேன்.

கதை பிடிக்கவில்லை என்றால் சம்பளத்தை அதிகமாகக் கேட்டு நிராகரித்துவிடுவேன். நான் நடித்த சீரியலின் ஒவ்வொரு எபிசோடையும் தவறாமல் பார்த்து, என்ன தவறு செய்கிறேன் என்று கவனிப்பேன்.

இதில் ரோபோட், மேஜிக் என்ற விஷயங்கள் புதுமையாக இருந்தது." என்றவர், " 'சந்தியாராகம்' குடும்பத்தை நான் ரொம்பவே மிஸ் பண்ணேன். நான் நடித்தபோது அதுதான் 'நம்பர் ஒன்' சீரியலாக இருந்தது.

டிஆர்பியில் உச்சத்தில் இருக்கும்போது யாரும் விலகும் முடிவை எடுக்க மாட்டார்கள். ஆனால் நான் பணத்தை மட்டும் அடிப்படையாக வைத்து முடிவெடுப்பவன் அல்ல. அங்கிருந்து வெளியேறித் தெலுங்கில் ஒரு சூப்பர் ஹிட் சீரியலில் நடித்தேன்.

Surjith - Samanthi Serial
Surjith - Samanthi Serial

இப்போது இந்த வாய்ப்பும் கிடைத்துள்ளது. நான் வாழ்க்கையில் ஒரு படி மேலேதான் போயிருக்கிறேன் என்பதால் அது நல்ல முடிவுதான்.

கோயிலுக்குப் போகும்போதுகூட இன்னும் நிறைய பேர் 'ஏன் தம்பி அந்த சீரியலை விட்டுப் போனீங்க?' என்று உரிமையோடு கேட்பார்கள். இப்போது 'சாமந்தி' தொடங்கியதும் என்னை 'அர்ஜுன்' என்று அழைக்கத் தொடங்குவார்கள் என நம்புகிறேன்" என்றார்.

Sreekumar: "ட்ரோல்ஸ் விஷயங்களுக்கு நான் என் ஹஸ்பண்ட்கிட்ட சொல்றது..." - ஷமிதா ஷேரிங்ஸ்

சின்னத்திரையில் 'சிவசக்தி', 'மௌன ராகம்', 'பேரன்பு' எனப் பல்வேறு வெற்றித் தொடர்கள் மூலம் குடும்பங்களுக்கு பேவரிட்டானவர் நடிகை ஷமிதா. தற்போது இவர் மீண்டும் வில்லியாக ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் 'சாமந்த... மேலும் பார்க்க

Bigg Boss: மூன்று நேர்காணல், பரபரக்கும் போட்டியாளர் தேர்வு - இன்டர்வியூவில் என்ன கேள்விகள் தெரியுமா?

விஜய் டிவியில் செப்டம்பர் முதல் வாரத்தில் ஒளிபரப்பு தொடங்கவிருக்கிற பிக்பாஸ் சீசன் 10 க்கு போட்டியாளர்களைத் தேர்ந்தெடுக்கும் வேலைகள் ஆரம்பமாகி இருக்கின்றன.இதுவரை சுமார் அறுபது பேரிடம் நிகழ்ச்சித் தயார... மேலும் பார்க்க

முன்கூட்டியே வருகிறது பிக் பாஸ் சீசன் 10 ; தேதி விவரம்? - Bigg Boss Updates

விஜய் டிவியின் ஹிட் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாஸ். 2017-ம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வரும் இந்த நிகழ்ச்சிக்கு இது பத்தாவது ஆண்டு.முதல் மூன்று சீசன்கள் ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பரில் நிறைவடைந்து வந்த‌ன.... மேலும் பார்க்க

`ஆபீஸ் போட்டு பிரதமர் பெயரைச் சொல்லி ஏமாத்துறாங்க; ஜஸ்ட்ல தப்பிச்சேன்' - சீரியல் நடிகர் நவீந்தர்

''நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே போகிற சைபர் மோசடிகளில் யார் வேணூம்னாலும் ஏமாந்து போகலாம்கிற சூழல் இன்னைக்கு உருவாகிடுச்சு. டெக்னாலஜி என்னதான் வளர்ந்திருந்தாலும், ஏமாத்தறவங்களுக்கும் தைரியம் எல்லை மீறி... மேலும் பார்க்க

Tv update: 'செகண்ட் லவ்' ஷூட்டிங்கை மும்பைக்கு கொண்டு போனது ஏன்?

மறுபடியும் ஹீரோ.. நெகிழும் காமெடியன்!காமெடி மற்றும் சப்போர்ட் கேரக்டர்கள் மூலம் சின்னத்திரையில் நுழைந்தவர் அழகப்பன். சன் டிவியில் ஒளிபரப்பான 'ஆனந்த ராகம்' தொடர் இவரை ஹீரோ ஆக்கியது.அந்த தொடர் ஆயிரம் எப... மேலும் பார்க்க

"`எந்த நிகழ்ச்சிக்கும் போறதில்ல‌; தந்த வாக்குக்காக வர்றேன்'னு வந்தார் சாலமன் பாப்பையா"- மதுரை முத்து

மதுரை திருநகரில் இரண்டாவது நூலகத்தைத் திறந்துள்ளார், மதுரை முத்து. தன்னுடைய பூர்வீக கிராமத்தில் ஏற்கெனவே ஒரு நூலகத்தை நடத்தி வரும் நிலையில், இரண்டாவது நூலகத்தை சாலமன் பாப்பையாவை வைத்து திறந்து வைத்திர... மேலும் பார்க்க