செய்திகள் :

Scene : "தனுஷ் அவர்களுக்கு என் சிறப்பு நன்றிகள்; ஏன்னா..!" - நெகிழும் சூர்யா

post image

சூர்யாவின் 'சீன்' திரைப்படம் தீபாவளி வெளியீடாகத் திரைக்கு வருகிறது. மலையாள இயக்குநர் ஜித்து மாதவன் எழுதி இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் நஸ்ரியா, நஸ்லென் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

Suriya - Scene Title Teaser
Suriya - Scene Title Teaser

இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.

சூர்யா பேசுகையில், "என்னுடைய முதல் படமான 'நேருக்கு நேர்' திரைப்படத்திற்குத் தேவா சார்தான் இசையமைத்தார். இந்த மேடையின் வாயிலாக அவருக்கு என்னுடைய பிரார்த்தனைகளையும், அவரது குடும்பத்தாருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். "அவள் வருவாளா..." என்று அன்று அவர் போட்ட பாட்டுதான் இன்றளவும் ஒலித்துக் கொண்டிருக்கிறது. நான் இந்த அளவுக்கு உயர்ந்து வந்திருக்கிறேன் என்றால், அதற்குத் தேவா சார் எனக்குக் கொடுத்த தொடக்கம்தான் காரணம். உங்களை எப்போதும் என் நினைவில் வைத்திருப்பேன் சார்.

கடந்த 29 வருடங்களாக அன்பு சிறிதும் குறையாமல் என்னை இந்த மேடையில் நிற்க வைத்து அழகு பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். நான் சொன்ன ஒரே ஒரு வார்த்தைக்காக அந்த அன்பை இன்றளவும் பின்பற்றி வருகிறீர்கள். 5,000 பேரை வைத்து ஒரு ரத்த தான முகாம் ஆரம்பித்தோம். "நீங்கள் ரத்தம் கொடுத்தால் உங்களுடன் புகைப்படம் எடுக்கிறேன்" என்று சொன்னேன்.

அப்படித் தொடங்கிய அந்த இயக்கம், இப்போது வருடத்திற்கு 5,000 பேர் ரத்த தானம் செய்யும் அளவிற்கு உயர்ந்திருக்கிறது. ஆண்டுக்கு ஆண்டு அந்த எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே இருப்பது நெகிழ்ச்சியளிக்கிறது.

நானும் ஜோதிகாவும் 'ரோமஞ்சம்' திரைப்படம் பார்த்தபோது விழுந்து விழுந்து சிரித்தோம். ஜித்து மாதவனின் 'ஆவேசம்' படமும் எனக்கு ரொம்பப் பிடிக்கும். ஜித்து ஒரு உலகத்தை உருவாக்கினார் என்றால், அது ஒரு படத்திலிருந்து மற்றொரு படத்திற்கு முற்றிலும் வித்தியாசமாக இருக்கும்.

அவர் இங்கு வந்து நேரடித் தமிழ்ப் படம் பண்ண வேண்டும் என்று ஆசைப்பட்டேன்; அது உடனடியாகச் சாத்தியமானது. நஸ்ரியா 12 வருடங்கள் கழித்து மீண்டும் தமிழில் நடிக்க வந்திருக்கிறார். நஸ்ரியா எப்போது நடிக்கிறார் என்றே தெரியாது! வசனங்கள் ஏதுமின்றித் தனது சின்னச் சின்ன பாவனைகள் மூலமாகவே நகைச்சுவையை வரவழைத்து விடுவார்.

அதனால் 'மாயா' என்ற கதாபாத்திரத்திற்கு நஸ்ரியாதான் சரியான தேர்வு. நஸ்லென், 'லோக்கா' படத்தில் பிணத்தைப் பார்த்துப் பயந்து விழுந்தவர், இதில் பிணத்தை வைத்து ஆராய்ச்சியே செய்து கொண்டிருப்பார்! 'ழகரம்' நிறுவனம் மூலமாகத் தமிழ் சினிமாவில் அவர் அறிமுகமாவது எனக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

Suriya Speech - Scene Audio Launch
Suriya Speech - Scene Audio Launch

தமிழிலும் அழகாக டப்பிங் பேசியிருக்கிறார். இத்திரைப்படம் உங்களுக்கு நிச்சயமாக ஒரு புதிய அனுபவத்தைத் தரும் என்று நம்புகிறேன். கொலை, மர்மம், சைக்கோத்தனம் மற்றும் நகைச்சுவை நிறைந்த ஒரு சுவாரஸ்யமான கதைக்களமாக இது இருக்கும்.

எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் ஜாலியாக திரையரங்கிற்கு வந்து பார்த்துவிட்டு, மகிழ்ச்சியாகத் திரும்பிச் செல்லலாம். இந்தத் தீபாவளி உங்களுக்கு ஒரு அழகான தீபாவளியாக அமையும்.

இசையமைப்பாளர் சுஷின் ஷ்யாம் பற்றிச் சொல்ல வேண்டுமென்றால், உங்களின் ஆற்றலின் மிகச்சிறந்த வடிவமாக இப்படத்தின் இசை அமைந்திருக்கிறது. இறுதியாக, நடிகர் தனுஷ் அவர்களுக்கு என் சிறப்பு நன்றிகள். ஏனெனில், நம்ம படம் தீபாவளிக்கு வருவதால், தனது படத்தின் வெளியீட்டைத் தள்ளி வைப்பதாக அவரே ட்வீட் செய்து வாழ்த்தியிருந்தார். அவருக்கு என் இதயப்பூர்வமான நன்றிகள்!"

Scene Audio Launch: "12 வருடங்களுக்குப் பிறகு தமிழ் சினிமாவுக்கு வர காரணம் அவர்தான்..!" - நஸ்ரியா

சூர்யாவின் 'சீன்' திரைப்படம் தீபாவளி வெளியீடாகத் திரைக்கு வருகிறது. மலையாள இயக்குநர் ஜித்து மாதவன் எழுதி இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் நஸ்ரியா, நஸ்லென் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திரு... மேலும் பார்க்க

Scene Audio Launch: "அதை பார்த்துட்டு எனக்கு விழுந்த அடியை வெளியே சொல்ல முடியாது!" - கார்த்தி கலகல

சூர்யாவின் 'சீன்' திரைப்படம் தீபாவளி வெளியீடாகத் திரைக்கு வருகிறது. மலையாள இயக்குநர் ஜித்து மாதவன் எழுதி இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் நஸ்ரியா, நஸ்லென் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திரு... மேலும் பார்க்க

Dorothy: "15 வருடங்கள், ஆயிரம் கனவுகள், எண்ணற்ற போராட்டங்கள்!" - நெகிழும் சனந்த்

திரையரங்கிலும், ஓடிடி வெளியீட்டிலும் கார்த்திக் சுப்புராஜின் 'டோரதி' படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது. படத்தில் நடித்த நடிகர்கள் சனந்த், ரிஷிகாந்திற்கும் மக்கள் பாராட்டையும் அன்பையும் தந்திருக... மேலும் பார்க்க

What To Watch: 'பத்தா', 'சிக்மா', 'அக்கா' - இந்த வாரம் ஓடிடியில் என்ன பார்க்கலாம்?

இந்த வாரம் ஓடிடி-யில் வெளியாகியிருக்கும் படங்கள் மற்றும் சீரிஸ் லிஸ்ட். திரையரங்கிற்கு பிந்தைய ஓடிடி படங்கள் ரிலீஸ் :பத்தா (Baththa - Tamil) - Netflixசிக்மா (Sigma - Tamil) - Netflixஇம்மோர்ட்டல் (Immo... மேலும் பார்க்க

Diwali Releases: 'சீன்', 'ராமாயணா' மட்டுமல்ல... இன்னும் இருக்கு! - தீபாவளி ரிலீஸ்கள் என்னென்ன?

எப்போதும் தீபாவளிக்கு வெளியாகும் படங்களுக்கு மிகுந்த எதிர்பார்ப்பு நிலவும். அந்த வரிசையில் இந்த வருடம் வெளியாகும் படங்களுக்குப் பெரிய அளவிலான எதிர்பார்ப்பு இருக்கிறது. சூர்யாவின் 'சீன்', உலகமெங்கும் ப... மேலும் பார்க்க

நடிகை வத்சலா ராஜகோபால் காலமானார்! - திரையுலகினர் இரங்கல்!

தமிழ் சினிமாவில் ரிதம், வின்னர், சதி லீலாவதி என ஏகப்பட்ட படங்கள் மற்றும் சித்தி உள்ளிட்ட சீரியல்களில் நடிதிருந்த பழம்பெரும் நடிகை வத்சலா ராஜகோபால் சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 93.சிறு வயத... மேலும் பார்க்க