செய்திகள் :

Scene: ``ஷூட்டிங்குக்கு அப்புறம் மனநிலை ஜாம்பி நிலைக்குப் போயிடும்" - நடிகர் நஸ்லன்

post image

சூர்யா நடிப்பில் நவம்பர் 6-ம் தேதி வெளியாக காத்திருக்கும் சீன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. அதில் பேசிய நடிகர் நஸ்லென், ``இதுக்கு முன்னாடி வரைக்கும் எந்த தமிழ் படமும் நடிக்கல. இது தான் என்னோட முதல் தமிழ் அறிமுகப்படம். ஆனா அதுக்குள்ளாகவே இவ்வளவு அன்பு கொடுக்குறீங்க, ரொம்ப எமோஷனலாக இருக்கு. நவம்பர் 6-ம் தேதி வெளியாகுது. இந்த படம் பார்த்ததற்கு அப்புறமும் இந்த அன்பு அப்படியே இருக்கனும்னு கேட்டுக்குறேன். தமிழ்நாடு உணவுகளில் எனக்கு பொங்கல் பிடிக்கும்.

நஸ்லன்
நஸ்லன்

படபிடிப்பு நடக்கும் எல்லா நாளும் மதியத்துக்கும், இரவுக்கும் சூர்யா சாரோட டிபன் பாக்ஸில் அவரோட அன்பு கலந்து சாப்பாடு எனக்கு வரும். சூர்யா சார் கிட்ட இருந்து நான் கத்து கிட்ட விஷயம் அவர் சிறந்த கடின உழைப்பாளி. எல்லாத்துலயும் ஆர்வம் கொண்டவராக இருப்பார். ஒரு விஷயம் கண்டிப்பாக சொல்லனும்னா எங்களுக்கு ஷூட்டிங் எப்பொழுதும் மாலை 6 மணியில் இருந்து அதிகாலை 6 மணி வரை இருக்கும். ஷூட்டிங்குக்கு அப்புறம் மனநிலை ஜாம்பிநிலைக்கு போயிடும் போது, சாருக்கு காலையில் 9 மணிக்கு டப்பிங் இருக்கும்.

ஆனால் அவர் அப்போதும் புத்துணர்ச்சியோடத்தான் இருப்பாரு. அது போன்ற விசயங்கள் எல்லாம் என்னை போன்ற ஆரபம்ப கால நடிகர்களுக்கு உத்வேகம் அளிக்ககூடிய விசயம். முதலில் என்னோட தமிழ் அவ்வளவாக நல்லா இல்லை அதற்காக மன்னிச்சிடுங்க. ஆனால் இந்த படத்திலும் என்னோட கதாபாத்திரம் அவ்வளவு மோசமானது கிடையாது. அவரோட நடிக்கும் போது ஒருபக்கம் ரொம்ப பயமாகவும், இன்னொருபக்கம் ரொம்ப சந்தோஷமாகவும் இருந்தது." என்றார்.

Scene: ``நஸ்லெனை நான் ரொமான்டிக்கா பார்க்கல; அதனாலதான் அவர் வில்லன்..." - இயக்குநர் ஜித்து மாதவன்

சூர்யா நடிப்பில் நவம்பர் 6-ம் தேதி வெளியாக காத்திருக்கும் சீன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. அதில் பேசிய இயக்குநர் ஜித்து மாதவன், ``ஆன்லைன்ல இந்த படம் இப்படி அப்படி. கதை அது, இ... மேலும் பார்க்க

Scene Audio Launch: "12 வருடங்களுக்குப் பிறகு தமிழ் சினிமாவுக்கு வர காரணம் அவர்தான்..!" - நஸ்ரியா

சூர்யாவின் 'சீன்' திரைப்படம் தீபாவளி வெளியீடாகத் திரைக்கு வருகிறது. மலையாள இயக்குநர் ஜித்து மாதவன் எழுதி இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் நஸ்ரியா, நஸ்லென் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திரு... மேலும் பார்க்க

Scene Audio Launch: "அதை பார்த்துட்டு எனக்கு விழுந்த அடியை வெளியே சொல்ல முடியாது!" - கார்த்தி கலகல

சூர்யாவின் 'சீன்' திரைப்படம் தீபாவளி வெளியீடாகத் திரைக்கு வருகிறது. மலையாள இயக்குநர் ஜித்து மாதவன் எழுதி இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் நஸ்ரியா, நஸ்லென் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திரு... மேலும் பார்க்க

Dorothy: "15 வருடங்கள், ஆயிரம் கனவுகள், எண்ணற்ற போராட்டங்கள்!" - நெகிழும் சனந்த்

திரையரங்கிலும், ஓடிடி வெளியீட்டிலும் கார்த்திக் சுப்புராஜின் 'டோரதி' படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது. படத்தில் நடித்த நடிகர்கள் சனந்த், ரிஷிகாந்திற்கும் மக்கள் பாராட்டையும் அன்பையும் தந்திருக... மேலும் பார்க்க

Scene : "தனுஷ் அவர்களுக்கு என் சிறப்பு நன்றிகள்; ஏன்னா..!" - நெகிழும் சூர்யா

சூர்யாவின் 'சீன்' திரைப்படம் தீபாவளி வெளியீடாகத் திரைக்கு வருகிறது. மலையாள இயக்குநர் ஜித்து மாதவன் எழுதி இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் நஸ்ரியா, நஸ்லென் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திரு... மேலும் பார்க்க

What To Watch: 'பத்தா', 'சிக்மா', 'அக்கா' - இந்த வாரம் ஓடிடியில் என்ன பார்க்கலாம்?

இந்த வாரம் ஓடிடி-யில் வெளியாகியிருக்கும் படங்கள் மற்றும் சீரிஸ் லிஸ்ட். திரையரங்கிற்கு பிந்தைய ஓடிடி படங்கள் ரிலீஸ் :பத்தா (Baththa - Tamil) - Netflixசிக்மா (Sigma - Tamil) - Netflixஇம்மோர்ட்டல் (Immo... மேலும் பார்க்க