செய்திகள் :

Scene Audio Launch: "12 வருடங்களுக்குப் பிறகு தமிழ் சினிமாவுக்கு வர காரணம் அவர்தான்..!" - நஸ்ரியா

post image

சூர்யாவின் 'சீன்' திரைப்படம் தீபாவளி வெளியீடாகத் திரைக்கு வருகிறது. மலையாள இயக்குநர் ஜித்து மாதவன் எழுதி இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் நஸ்ரியா, நஸ்லென் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

Suriya - Scene Title Teaser
Suriya - Scene Title Teaser

இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் பேசிய நஸ்ரியா, "சென்னைக்கு வருவதற்கு எனக்கு எப்போதும் பிடிக்கும். நான் தமிழ் படங்கள் செய்யாத நாட்களிலும், தமிழ் மக்கள் எனக்குக் கொடுத்த அந்த அன்பும், காதலும், ஆதரவும் எப்போதும் குறைந்ததே இல்லை.

'சீன்' திரைப்படத்தைத் தங்களின் முதல் தயாரிப்பாகத் தேர்ந்தெடுத்த 'ழகரம்' நிறுவனத்திற்கு மிகப்பெரிய நன்றிகள்.

இனி இங்கிருந்து உங்களின் பயணம் மிகச் சிறப்பாக அமையும். இயக்குநர் ஜித்து மாதவன், எனக்கு 'மாயா' என்ற கதாபாத்திரத்தைக் கொடுத்ததற்கு மிகப்பெரிய நன்றி.

Nazriya - Scene Audio Launch
Nazriya - Scene Audio Launch

அந்த மாயா கேரக்டர் ஒரு 'ஒன் பீஸ்' கதாபாத்திரத்தைப் போன்றது. ஜித்து மாதவனின் முதல் ஹீரோயின் நான்தான் என்று பெருமையாகச் சொல்வேன்.

12 வருடங்களுக்குப் பிறகு தமிழ் சினிமாவுக்கு மீண்டும் வரக் காரணம், முதலாவது சூர்யா சார்தான். உண்மையிலேயே இது எனக்குக் கனவு நனவான தருணம். இதற்கு முன்பு ஒன்று இரண்டு முறை வாய்ப்புகள் தவறினாலும், இறுதியாக நாங்கள் இருவரும் இணைந்து ஒரு படத்தில் முதன்முறையாக நடிக்கிறோம் என்பதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி.

12 வருடங்களுக்குப் பிறகு தமிழ் சினிமாவுக்குத் திரும்பி வந்து, என்னுடைய சொந்த ஊரைச் சேர்ந்த மனிதர்களோடு ஒரே ஃபிளைட்டில் வந்து ஷூட்டிங் செய்த அனுபவம் மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது." எனப் பகிர்ந்திருக்கிறார்.

Scene Audio Launch: "அதை பார்த்துட்டு எனக்கு விழுந்த அடியை வெளியே சொல்ல முடியாது!" - கார்த்தி கலகல

சூர்யாவின் 'சீன்' திரைப்படம் தீபாவளி வெளியீடாகத் திரைக்கு வருகிறது. மலையாள இயக்குநர் ஜித்து மாதவன் எழுதி இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் நஸ்ரியா, நஸ்லென் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திரு... மேலும் பார்க்க

Dorothy: "15 வருடங்கள், ஆயிரம் கனவுகள், எண்ணற்ற போராட்டங்கள்!" - நெகிழும் சனந்த்

திரையரங்கிலும், ஓடிடி வெளியீட்டிலும் கார்த்திக் சுப்புராஜின் 'டோரதி' படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது. படத்தில் நடித்த நடிகர்கள் சனந்த், ரிஷிகாந்திற்கும் மக்கள் பாராட்டையும் அன்பையும் தந்திருக... மேலும் பார்க்க

Scene : "தனுஷ் அவர்களுக்கு என் சிறப்பு நன்றிகள்; ஏன்னா..!" - நெகிழும் சூர்யா

சூர்யாவின் 'சீன்' திரைப்படம் தீபாவளி வெளியீடாகத் திரைக்கு வருகிறது. மலையாள இயக்குநர் ஜித்து மாதவன் எழுதி இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் நஸ்ரியா, நஸ்லென் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திரு... மேலும் பார்க்க

What To Watch: 'பத்தா', 'சிக்மா', 'அக்கா' - இந்த வாரம் ஓடிடியில் என்ன பார்க்கலாம்?

இந்த வாரம் ஓடிடி-யில் வெளியாகியிருக்கும் படங்கள் மற்றும் சீரிஸ் லிஸ்ட். திரையரங்கிற்கு பிந்தைய ஓடிடி படங்கள் ரிலீஸ் :பத்தா (Baththa - Tamil) - Netflixசிக்மா (Sigma - Tamil) - Netflixஇம்மோர்ட்டல் (Immo... மேலும் பார்க்க

Diwali Releases: 'சீன்', 'ராமாயணா' மட்டுமல்ல... இன்னும் இருக்கு! - தீபாவளி ரிலீஸ்கள் என்னென்ன?

எப்போதும் தீபாவளிக்கு வெளியாகும் படங்களுக்கு மிகுந்த எதிர்பார்ப்பு நிலவும். அந்த வரிசையில் இந்த வருடம் வெளியாகும் படங்களுக்குப் பெரிய அளவிலான எதிர்பார்ப்பு இருக்கிறது. சூர்யாவின் 'சீன்', உலகமெங்கும் ப... மேலும் பார்க்க

நடிகை வத்சலா ராஜகோபால் காலமானார்! - திரையுலகினர் இரங்கல்!

தமிழ் சினிமாவில் ரிதம், வின்னர், சதி லீலாவதி என ஏகப்பட்ட படங்கள் மற்றும் சித்தி உள்ளிட்ட சீரியல்களில் நடிதிருந்த பழம்பெரும் நடிகை வத்சலா ராஜகோபால் சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 93.சிறு வயத... மேலும் பார்க்க