Patrick Stewart: Star Trek, X-Men புகழ் நடிகர் பேட்ரிக் ஸ்டீவர்ட் காலமானார்
Serial Update: 'சிங்கப் பெண்ணே' சீரியலில் இருந்து வெளியேறும் ஹீரோ அமல்ஜித்? காரணம் இதுவா?
சன் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் 'சிங்கப் பெண்ணே' சீரியலில் இருந்து ஹீரோ அமல்ஜித் விரைவில் வெளியேறலாமெனக் கூறப்படுகிறது.
சீரியல் வட்டாரத்தில் சில தினங்களாக இப்படியொரு தகவல் ரவுண்டு வர 'சிங்கப் பெண்ணே' சீரியல் தொடர்புடைய சிலரிடம் விசாரித்தோம்.
''சன் டிவியின் ஹிட் சீரியல்களில் ஒண்ணு 'சிங்கப் பெண்ணே. ஹீரோவாக அமல்ஜித்தும் அவருக்கு ஜோடியா மனிஷாவும் நடிச்சிட்டிருக்காங்க.
டி.ஆர்.பி. ரேட்டிங் வந்துட்டிருந்தவரை இந்தச் சீரியலுக்கு நல்ல ரேட்டிங் கிடைச்சிட்டிருந்தது. சமீபமா ரேட்டிங் வெளியாகலைன்னாலும் சீரியல் ரசிகர்கள் மத்தியில் இந்தச் சீரியலுக்கான மவுசு குறைஞ்சதா தெரியலை.
சமூக வலைத்தளங்கள்ல இந்த ஜோடிக்குமே ரசிகர்கள் அதிகம்.
அமல்ஜித்துக்கு சீரியல் நல்ல பெயரைத் தந்தாலும் அவருடைய கனவு சினிமாவாகத்தான் இருக்கறதா சொல்றாங்க. தமிழ்ல ஏற்கனவே ஒரு படத்துல ஹீரோவா நடிச்சார். என்ன காரணம்னு தெரியல, அந்தப் படம் இன்னும் வெளியாகல.

இந்தச் சூழல்லதான் இப்ப இன்னொரு படத்துக்கு பூஜை போட்டிருக்காங்க. 'பிளாக் நைட் பாய்ஸ்'னு டைட்டில். அமல்ஜித்துக்கு ஜோடியா நடிகை தேவயாணியின் மகள் பிரியங்கா நடிக்கிறாங்க. அடுத்த சில தினங்கள்ல ஷூட்டிங் தொடங்கி அடுத்த வருஷ தொடக்கத்துல படம் ரீலீஸ் ஆகும்கிறாங்க' என்கிறார்கள் இவர்கள்.
வாழ்த்துக்கல் சொல்லி அமல்ஜித்திடமே பேசினோம்.
''எனிமா என்னுடைய ரொம்ப வருஷ கனவு. முன்னாடி ஹீரோவா நடிச்ச படம் ரிலிஸ்ல சில சிக்கலைச் சந்திச்சது. ஆனா அந்தப்படமும் ரிலீஸ் ஆகிடும்கிற நம்பிக்கை இருக்கு. இந்தப் படம் லவ் சப்ஜெக்ட்தான். ஆனா குடும்பத்தோட எல்லாரும் பார்க்கிற மாதிரி இருக்கும்'' என்கிறார்.
சினிமா, சீரியல் இரண்டிலும் பயணிக்கத் திட்டமா என்றால் ''சினிமா பக்கம் முழுக் கவனத்தையும் செலுத்தலாம்னுதான் நினைக்கிறேன். சீரியல், சினிமா ரெண்டிலும் இருக்கறப்ப கால்ஷீட் பிரச்னை வரலாம்கிறதால 'சிங்கப் பெண்ணே' தொடர்ல இருந்து வெளியேறலாம்னு நினைச்சிருக்கேன். இது தொடர்பா தயாரிப்பு தரப்பு மற்றும் சேனல்ல பேசிட்டிருக்கேன்'' என்கிறார்.

















