செய்திகள் :

Silver: சரியான நேரம் இது! 2025-ல் செய்த தவறுக்கு இப்போது 'நோ' இடம்; 'நியூ கோல்டு' வெள்ளியை கவனிங்க!

post image

தங்கத்திற்கு எப்போதுமே நமது குடும்பங்களில் தனி இடம் உண்டு. ஆனால், வெள்ளியை அவ்வளவாகக் கண்டுக்கொள்ளமாட்டோம்.

ஆனால், ‘இது தவறு’ என்பதைக் கடந்த ஆண்டு வெள்ளியின் ‘கிடுகிடு’ விலை உயர்வு நமக்குக் காண்பித்துவிட்டது.

வெள்ளி - தி 'நியூ கோல்டு'

2025-ம் ஆண்டு மட்டும் சர்வதேச சந்தையில் வெள்ளி விலை கிட்டத்தட்ட 160 சதவிகிதம் உயர்ந்தது.

2025-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி சென்னையில் ரூ.98-க்கு விற்பனையான வெள்ளி, அந்த ஆண்டின் இறுதி நாளில் (டிசம்பர் 31) ரூ.257-க்கு விற்பனையாகிக் கொண்டிருந்தது. வெள்ளி தான் இனி 'நியூ கோல்டு' என்றெல்லாம் செல்லமாக அழைக்கப்பட்டது.

ஆரம்பத்தில் வெள்ளியை அதிகம் கவனிக்காமல் அசால்டாக விற்றவர்கள், 2025-ம் ஆண்டின் பின்பாதியில் வெள்ளி இ.டி.எஃப் முதலீடு, பிசிக்கல் வெள்ளி வாங்குவது என ஆர்வம் காட்டினார்கள்.

இப்படி அமோகமாக உயர்ந்துகொண்டிருந்த வெள்ளி விலைக்குப் பிரேக் போட்டது சர்வதேச சூழல்கள்.

வெள்ளி
வெள்ளி

இப்போது...

சர்வதேச சந்தையில் தற்போது ஒரு அவுன்ஸ் வெள்ளி விலை 55 டாலர்... சென்னையில் இன்று ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.240.

‘இப்போ என்ன அதுக்கு’ என்று கேட்கிறீர்களா? 2025-ம் ஆண்டு செய்த தவறை இப்போது செய்ய வேண்டாம் என்பதற்காகத்தான் இந்தப் புள்ளிவிவரங்கள் கொடுக்கப்பட்டன.

சோலார் பேனல்கள் தொடங்கி செமிகண்டக்டர்கள், ஏ.ஐ சிப் ஆகியவற்றிற்குக் கட்டாயம் வெள்ளி தேவை.

இதனால், போர்ச்சூழல் அடங்கிக் கட்டமைப்பு வேலைகள் தொடங்கும்போதும், சமீபத்தில் மட்டுப்பட்டிருக்கும் ஏ.ஐயின் வளர்ச்சி மீண்டும் ஓங்கும்போதும், வெள்ளி விலை நிச்சயம் அதிகரிக்கும் என்று பொருளாதார நிபுணர்கள் குறிப்பிடுகிறார்கள்.

'பீக்'கில் லாபம் பார்க்கலாமே!

டிமாண்ட் அதிகரிக்கும்போது, விலையும் நிச்சயம் அதிகரிக்கும். ஆக, இப்போது நேரம் வந்துவிட்டது.

இப்போது வெள்ளி விலை இறங்குமுகத்தில் இருக்கும்போதே, வெள்ளி இ.டி.எஃப்பில் முதலீடு செய்து வைத்துவிடலாம்.

குறைந்த விலைக்கு இப்போது வாங்கி, விலை ‘பீக்’கிற்குச் செல்லும்போது விற்று நல்ல லாபம் பார்க்கலாம்.

வெள்ளி
வெள்ளி

இந்த முதலீட்டிற்கு அதிகத் தொகையும், அதிகம் தேவையும் இல்லை. புரோக்கிங் ஆப் மற்றும் டிமாட் கணக்கும், ரூ.500 கூட இருந்தால் போதும். உங்களுக்கு வெள்ளி இ.டி.எஃப் சாத்தியமாகிவிடும்.

விலை குறைவாக இருக்கும்போது முதலீடு செய்யும்போது, அதிக யூனிட்டுகளும் கிடைக்கும். இதுவும் ஒரு வகை ப்ளஸ்தான்.

ஆனால், ஒட்டுமொத்தமாக பல்க் முதலீடு செய்துவிட வேண்டாம். எஸ்.ஐ.பி முறையில் இரண்டு வாரத்திற்கு ஒரு முறை அல்லது மாதத்திற்கு ஒரு முறை என்று முதலீடு செய்யுங்கள். பின்னர், பலனடையுங்கள்.

Data in this section is not a buy/sell recommendation but only a compilation of information on various technical/volume-based parameters

Analyst certifies that all of the views, if any, expressed in this report reflect his personal views about the subject company or companies and its or their securities, and no part of his compensation was, is or will be, directly or indirectly related to specific recommendations or views expressed in this report. Analyst affirms that there exists no conflict of interest that can bias his views in this report. The Analyst does not hold any share(s) in the company/ies discussed.

INVESTMENT IN SECURITIES MARKET ARE SUBJECT TO MARKET RISKS. READ ALL THE RELATED DOCUMENTS CAREFULLY BEFORE INVESTING. Registration granted by SEBI and certification from NISM in no way guarantee the performance of the intermediary or provide any assurance of returns to investors. For a detailed disclaimer and disclosure please visit https://www.vikatan.com/business/share-market/113898-disclaimer-disclosures. Before making an investment/trading decision on the basis of this data you need to consider, with the assistance of a qualified adviser, whether the investment/trading is appropriate in light of your particular investment/trading needs, objectives and financial circumstances.

One year Price history of the daily closing price of the securities covered in this section is available at https://www.nseindia.com/report-detail/eq_security (Choose the respective symbol) /name of company/time duration)

"இன்னைக்கு ₹80,000 செலவு... அதுவே 15 வருஷம் கழிச்சு?" - NRI-களே, கணக்கு தப்பிடுச்சுனா கஷ்டம்!

துபாய் மாதிரி ஒரு வளைகுடா ஊரில் இருக்கீங்க... 45 வயசு... கைநிறைய சம்பளம், ஊர்ல சொந்த வீடு, பேங்க்ல நல்ல சேவிங்ஸ்னு கெத்தா சுத்துற ஆளா நீங்க? '60 வயசானதும் பேக்கப் பண்ணிட்டு ஊருக்குக் கிளம்ப வேண்டியதுத... மேலும் பார்க்க

Aadhar-ல் உங்கள் பெயர் 'எப்படி' இடம்பெற வேண்டும்? புதிய நடைமுறைக்கேற்ப பெயர் மாற்றம் செய்வது எப்படி?

2010 காலக்கட்டத்தில் ஆதார் கார்டு நடைமுறைக்கு வந்தபோது, ‘எங்கும்... எதிலும்... அனைத்திலும் ஆதார்’ என்கிற நிலை உருவாகும் என்று யாரும் கற்பனைக்கூடச் செய்து பார்த்திருக்கமாட்டோம்.அதனால், ஆதார் கார்டு எடு... மேலும் பார்க்க

லாபத்துக்கு வரி கட்டத் தேவை இல்லாத GIFT City ஃபண்டுகள்; NRI முதலீட்டாளர்களுக்கு அருமையான வாய்ப்பு!

வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் இந்தியாவில் முதலீடு செய்வதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன. ரியல் எஸ்டேட், பங்குகள், பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகள் என அவர்களுக்குக் கிடைக்கும் வாய்ப்புகள்... மேலும் பார்க்க

35+ வயசா? உங்ககிட்ட இந்த 3 பழக்கம் இருந்தா நீங்க கண்டிப்பா பணக்காரர் ஆவீங்க!

25 வயசுல யோசிச்சுக்கூட பார்க்காத அளவுக்கு, 37 வயசுல நீங்க நல்லாவே சம்பாதிக்கலாம். ஆனா, நீங்க நினைக்கிற இடம் இன்னமும் கைக்கெட்டாத தூரத்துல இருக்கிற மாதிரியே தோணுதா?மாசம் பிறந்தா சம்பளம் வருது, பில் கட்... மேலும் பார்க்க

''அசந்து தூங்கிட்டேன். 61 லட்சம் ரூபாய் போச்சு!'' ஒரு எஃப்&ஓ வர்த்தகரின் பரிதாப அனுபவம்!

ஃப்யூச்சர் அண்ட் ஆப்ஷன் என்று சொல்லப்படும் எஃப்&ஓ வர்த்தகம் படுரிஸ்க்-ஆனது. மிக மிக ஜாக்கிரதையாக, ஸ்டாப் லாஸ் போட்டு செய்தால் மட்டுமே பெரிதாக லாபம் கிடைக்காவிட்டாலும் நஷ்டம் வராமல் தப்பிக்கலாம். க... மேலும் பார்க்க

பங்குச் சந்தை கடும் இறக்கம்... இப்போது முதலீடு செய்வது சரியான முடிவா?

இந்த வாரத்தில் உலகம் முழுக்க உள்ள பங்குச் சந்தைகள் கடும் இறக்கத்தைச் சந்தித்துள்ளன. இதனால் முதலீட்டாளர்கள் அடைந்த லாபம் அனைத்தும் போனதுடன், நஷ்டம் ஏற்படும் நிலை வந்துள்ளது. கடந்த 6 முதல் 12 மாதங்களில்... மேலும் பார்க்க