செய்திகள் :

SIR: `உ.பி-யில் 1.27 கோடி இந்து வாக்காளர்களின் பெயர்கள் நீக்கம்'- விளக்கம் கேட்ட யோகி ஆதித்யநாத்!

post image

வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு (SIR) பிறகு உத்தரப்பிரதேச மாநில வாக்காளர் பட்டியலில் இந்து வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாக அந்த மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து நேர்காணல் ஒன்றில் பேசியுள்ள அவர்,

"SIR-க்குப் பிறகு, வாக்காளர் பட்டியலில் குளறுபடிகள் ஏற்பட்டுள்ளது. மாநில உள்ளாட்சி தேர்தலின் போது வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருந்த 1.27 கோடி இந்து வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளது.

SIR

அரசின் நலத்திட்டப் பயனாளிகளான 55 லட்சம் இந்து வாக்காளர்களும், 18 மற்றும் 19 வயதுடைய சுமார் 4.5 லட்சம் இளம் வாக்காளர்களின் பெயர்களும் பட்டியலில் விடுபட்டுள்ளது. தேர்தல் ஆணையம் ஒரு சுதந்திரமான அரசியலமைப்பு அதிகாரம் கொண்ட அமைப்பு. இந்த குளறுபடிகள் குறித்து விளக்கம் கேட்டு தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்துள்ளேன்" என தெரிவித்துள்ளார்.

இது குறித்து விளக்கம் அளித்துள்ள அம்மாநில தலைமை தேர்தல் ஆணையர் நவ்தீப் ரின்வா,

"வாக்காளர்களின் மதம் மற்றும் சாதி குறித்த எந்த தகவல்களையும் தேர்தல் ஆணையம் பராமரிப்பதில்லை. சாதி மதத்தை அளவுகோளாக கொண்டு எவ்வித அதிகாரப்பூர்வ பகுப்பாய்வுகளையும் வெளியிடுவதில்லை. வாக்காளர்களின் தரவுத்தளத்தில் வாக்காளரின் பெயர், தந்தை அல்லது கணவர்/மனைவியின் பெயர், வயது, வீட்டு எண் மற்றும் பாலினம் ஆகிய விவரங்கள் மட்டுமே இடம்பெற்றிருக்கும் மதம் மற்றும் சாதி தொடர்பான விவரங்கள் அதில் சேர்க்கப்படுவதில்லை.

உத்திரபிரதேச மாநில தலைமை தேர்தல் ஆணையர் நவ்தீப் ரின்வா
உத்திரபிரதேச மாநில தலைமை தேர்தல் ஆணையர் நவ்தீப் ரின்வா

வாக்காளர் பட்டியல் என்பது பொதுவான ஆவணம் என்பதால் ஊடக நிறுவனங்கள் மற்றும் தனியார் ஆய்வாளர்கள் தங்களுக்கு கிடைக்கும் பிற தகவல்கள், தரவுகளின் அடிப்படியில் பகுப்பாய்வுகளை வெளியிடுவது உண்டு. அவற்றை தேர்தல் ஆணையத்தின் தரவுகளாக எடுத்துக்கொள்ள கூடாது. 2027 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில், 6.20 கோடி பெண்கள் உட்பட மொத்தம் 13.58 கோடி வாக்காளர்கள் உள்ளனர்.

வாக்காளர் பட்டியல் தொடர்பான உரிமைகோரல்கள் மற்றும் ஆட்சேபனைகளை தெரிவிக்க நவம்பர் 17 முதல் டிசம்பர் 16 வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்தக் காலகட்டத்தில் தகுதியுள்ள குடிமக்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க அல்லது திருத்தம் செய்ய முறையே படிவம் 6, 7 மற்றும் 8 ஆகியவற்றின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

SIR
SIR

டிசம்பர் 28-ஆம் தேதிக்குள் உரிமைகோரல்கள் மற்றும் ஆட்சேபனைகள் மீது தீர்வு காணப்பட்ட பிறகு, இறுதி வாக்காளர் பட்டியல் 2027 ஜனவரி 4-ஆம் தேதி வெளியிடப்படும். SIR-க்கு பிறகு வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலுடன் ஒப்பிடும்போது, தற்போதைய வரைவுப் வாக்காளர் பட்டியலில் 18,84,113 வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

வாக்காளர் பட்டியல் ஆண்டு முழுவதும் தொடர்ச்சியாகப் புதுப்பிக்கப்படும் ஒன்று திருத்தப் பணிகளுக்குப் பிறகு இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட பின்னரும் கூட, தகுதியுள்ள குடிமக்கள் பெயர் சேர்த்தல், நீக்குதல் அல்லது திருத்தங்களுக்கு விண்ணப்பிக்கலாம்" என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb

'என் வீட்டுல 22 வருசமா வேலை பார்க்குறாங்க'- பணிப்பெண்ணை விஜய்யிடம் அறிமுகப்படுத்திய பிரியங்கா காந்தி

டெல்லியில் நேற்று (16.11.2026) நடைபெற்ற சோனியா காந்தியின் சுயசரிதை புத்தக வெளியீட்டு விழாவில், தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் விருந்தினராக கலந்துகொண்டிருந்தார். அப்போது விஜய்யைச் சந்தித்த பிரியங்கா காந்த... மேலும் பார்க்க

கோவை: பெண்ணிடம் தகராறு செய்த தவெக நிர்வாகி – கட்சியில் இருந்து அதிரடி நீக்கம்!

கோவை கலிக்கநாயக்கன்பாளையம் பகுதியில் மகாராஜன் என்பவர் இருசக்கர வாகன விற்பனை ஷோரூம் நடத்தி வருகிறார். இவரது மனைவி திவ்யா. சமீபத்தில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த மகாராஜன், கட்சியின் பல்வேறு நிகழ்ச்ச... மேலும் பார்க்க

இஸ்ரேல் அதிபராக தொடர நெதன்யாகுவின் ஐடியா; ஒத்துழைக்காத எதிர்க்கட்சி! இன்னும் எத்தனை நாள் கெடு?

இஸ்ரேலில் தேர்தல் முடிவுகள் வந்து கிட்டத்தட்ட இரண்டு வாரங்கள் ஆகிவிட்டன. ஆனால், அந்த நாட்டில் இன்னும் யாரும் ஆட்சி அமைக்கவில்லை.பெரும்பான்மை பெறாத இஸ்ரேல் கட்சிகள்இஸ்ரேல் நாடாளுமன்றம் நெசட்டில் பெரும்... மேலும் பார்க்க

கள்ளக்குறிச்சி எம்எல்ஏ விவகாரம்: `இதே எடப்பாடியாராக இருந்திருந்தால்...'- அதிமுக பா.வளர்மதி பேச்சு

தவெக கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் மாவட்ட ஆட்சியருக்கு குறுஞ்செய்தி அனுப்பியதாக வெடித்திருக்கும் விவகாரம், பெரும் சர்ச்சையாகி இருக்கும் நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்ட அதிமுக மகளிர் அணி சார்பில் ... மேலும் பார்க்க

'மன்மோகன் சிங்கை பிரதமர் பதவியிலிருந்து நீக்க கோரிய பிரணாப் முகர்ஜி!' - என்ன சொல்கிறார் சோனியா?

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான சோனியா காந்தி 'Belonging' என்ற பெயரில் சுயசரிதை நூலை எழுதியிருக்கிறார். அதில் அவர் அரசியல்ரீதியாக குறிப்பிட்டிருக்கும் சில சம்பவங்கள் சர்ச்சையை கிளப்பியிருக்கிறது. கு... மேலும் பார்க்க

திருப்பத்தூர் பெரிய ஏரி: சுகாதாரச் சீர்கேட்டைச் சுட்டிக்காட்டிய விகடன்; குப்பைகளை அகற்றிய நிர்வாகம்!

திருப்பத்தூர் புதிய பேருந்து நிலையத்தை ஒட்டி அமைந்துள்ளது திருப்பத்தூர் பெரிய ஏரி. மீன்பிடித் தொழில், விவசாயப் பாசனம் எனப் பல வகைகளில் மக்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும் இந்த ஏரி, குப்பைகள் கொட்டப்படும... மேலும் பார்க்க