செய்திகள் :

Sreekumar: "ட்ரோல்ஸ் விஷயங்களுக்கு நான் என் ஹஸ்பண்ட்கிட்ட சொல்றது..." - ஷமிதா ஷேரிங்ஸ்

post image

சின்னத்திரையில் 'சிவசக்தி', 'மௌன ராகம்', 'பேரன்பு' எனப் பல்வேறு வெற்றித் தொடர்கள் மூலம் குடும்பங்களுக்கு பேவரிட்டானவர் நடிகை ஷமிதா.

தற்போது இவர் மீண்டும் வில்லியாக ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் 'சாமந்தி' தொடரில் நடிக்கக் கமிட்டாகியிருக்கிறார். அந்த சீரியலுக்காக அவரைச் சந்தித்துப் பேட்டி கண்டோம்.

Shamitha - Samanthi Serial
Shamitha - Samanthi Serial

நம்மிடையே பேசியவர், "'சாமந்தி' தொடரின் படப்பிடிப்பு மிகவும் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இதில் நான் 'அரசி' என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறேன்.

இந்த அரசிக்கு மனிதர்களையே பிடிக்காது, யாரையுமே நம்ப மாட்டார்கள். அதனால்தான் எப்போதும் கூடவே ஒரு ரோபோட்டை வைத்திருப்பார்கள். இந்த சீரியலின் முக்கியமான விஷயமே ரோபோட்தான். அது எப்போதும் நேர்மையாக நடந்து கொள்ளும்.

அதன் மூலம் மனிதர்களின் இயல்பு எப்படிப்பட்டது என்பதைப் புரிந்து கொள்ளலாம். அந்த ரோபோட் கதாபாத்திரம் மிக முக்கியமான ஒன்று. உண்மையான வாழ்க்கையில் நாம் வெளிப்படுத்த முடியாத பல எதிர்மறையான உணர்வுகள் நமக்குள்ளும் இருக்கும்.

இந்த மாதிரி வாய்ப்புகள் கிடைக்கும்போது அதை நடிப்பில் வெளிப்படுத்துவது ஒரு நல்ல அனுபவமாக இருக்கும். நெகட்டிவ் ரோல் பண்ணுவதில் ஒரு தனி ஜாலி இருக்கிறது. அதற்கு எந்த எல்லைகளும் கிடையாது, நாம் எப்படி வேண்டுமானாலும் நடித்து எக்ஸ்பெரிமென்ட் பண்ணலாம்.

'மௌன ராகம்' பண்ணும்போது வயதானவர்கள் மட்டும், 'ஏன் அந்த குழந்தைகளை இப்படிப் படுத்துறீங்க?' என்று திட்டினார்கள்.

Shamitha - Samanthi Serial
Shamitha - Samanthi Serial

ஆனால் குட்டீஸ் எல்லாம் 'சூப்பர் மேம்' என்பார்கள்" என்றவர், "'பொன்னூஞ்சல்' சீரியலுக்குப் பிறகு இப்போது மீண்டும் விஷ்வா சாருடன் இணைந்து நடிக்கிறேன். முதலில் இதை என்னால் நம்பவே முடியவில்லை.

இப்போதெல்லாம் சீரியல் சூழல் நிறைய மாறிவிட்டதால் அவர் ஒப்புக்கொள்வாரா என யோசித்தேன். ப்ரோமோ ஷூட்டின் போது 'நீங்க நிஜமாவே பண்றீங்களா?' என்று கேட்டதற்கு, 'ஏன் நான் பண்ணக்கூடாதா?' என்று ஜாலியாகக் கேட்டார்" என்றார்.

தொடர்ந்து பேசியவர், "ஆரம்பத்தில் எனக்கு சீரியலில் நடிக்க விருப்பமே இல்லை. சீரியலில் 'எப்போதும் அழுதுகொண்டே இருப்பார்கள்' என்று என் அம்மாவிடம் சொன்னேன்.

ஆனால் பெரிய வாய்ப்புகள் வந்தபோது அம்மாதான் 'ட்ரை பண்ணிப் பாரு, பிடிக்கவில்லை என்றால் வந்துவிடு' என்று தைரியம் சொன்னார். அப்படி முதன்முதலில் நடித்ததுதான் 'சிவசக்தி'. நானும் என்னுடைய கணவர் ஸ்ரீயும் வீட்டில் பெரும்பாலும் நடிப்பைப் பற்றித்தான் அதிகம் பேசிப்போம்.

Shamitha - Samanthi Serial
Shamitha - Samanthi Serial

தனிப்பட்ட விஷயங்களை விட நடிப்பு பற்றிய பேச்சுகளே அதிகமாக இருக்கும். சமூக வலைதளங்களில் அவரைப் பற்றி டிரோல்கள் வரும்போது, 'நீ செய்கிற வேலையைச் செய்துகொண்டே இரு, நெகட்டிவ் கமெண்ட்ஸைப் பார்க்காதே' என்று சொல்வேன்.

தேவையில்லாத விஷயங்களுக்குப் பதில் சொல்லிக் கொண்டிருந்தால் நம் நேரம்தான் வீணாகும். பயனுள்ளதாக இருந்தால் எடுத்துக்கொள்ளலாம், மற்றபடி கடந்து போய்க்கொண்டே இருக்க வேண்டும்" எனப் பகிர்ந்துகொண்டார்.

`டி.ஆர்.பி ரேட்டிங் இனி கிடையாதா?' - சீரியல் ஆடியன்ஸ் கணக்கீட்டில் என்ன செய்யப் போகிறது மத்திய அரசு?

டி.ஆர்.பி ரேட்டிங் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? டிவியில் எந்த சீரியலை அதிகம் பேர் பார்க்கின்றனர், எந்த மொழியில் எந்த சேனலை அதிக மக்கள் பார்க்கின்றனர் என்பன போன்ற விபரங்களைத் தரும் டெலிவிஷன் ரேட்டிங் பா... மேலும் பார்க்க

Samanthi: "சீரியலின் கதை பிடிக்கலைனா சம்பளத்தை அதிகமாகச் சொல்லிடுவேன்!" - சுர்ஜீத் பேட்டி

ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் 'சந்தியாராகம்' தொடர் மூலம் மக்களின் அன்பைப் பெற்றவர் நடிகர் சுர்ஜித். அந்த சீரியலிலிருந்து விலகியவர் இப்போது 'சாமந்தி' தொடரின் மூலம் மீண்டும் 'ஜீ தமிழ்' சேனலுக்கு வந்திருக... மேலும் பார்க்க

Bigg Boss: மூன்று நேர்காணல், பரபரக்கும் போட்டியாளர் தேர்வு - இன்டர்வியூவில் என்ன கேள்விகள் தெரியுமா?

விஜய் டிவியில் செப்டம்பர் முதல் வாரத்தில் ஒளிபரப்பு தொடங்கவிருக்கிற பிக்பாஸ் சீசன் 10 க்கு போட்டியாளர்களைத் தேர்ந்தெடுக்கும் வேலைகள் ஆரம்பமாகி இருக்கின்றன.இதுவரை சுமார் அறுபது பேரிடம் நிகழ்ச்சித் தயார... மேலும் பார்க்க

முன்கூட்டியே வருகிறது பிக் பாஸ் சீசன் 10 ; தேதி விவரம்? - Bigg Boss Updates

விஜய் டிவியின் ஹிட் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாஸ். 2017-ம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வரும் இந்த நிகழ்ச்சிக்கு இது பத்தாவது ஆண்டு.முதல் மூன்று சீசன்கள் ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பரில் நிறைவடைந்து வந்த‌ன.... மேலும் பார்க்க

`ஆபீஸ் போட்டு பிரதமர் பெயரைச் சொல்லி ஏமாத்துறாங்க; ஜஸ்ட்ல தப்பிச்சேன்' - சீரியல் நடிகர் நவீந்தர்

''நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே போகிற சைபர் மோசடிகளில் யார் வேணூம்னாலும் ஏமாந்து போகலாம்கிற சூழல் இன்னைக்கு உருவாகிடுச்சு. டெக்னாலஜி என்னதான் வளர்ந்திருந்தாலும், ஏமாத்தறவங்களுக்கும் தைரியம் எல்லை மீறி... மேலும் பார்க்க

Tv update: 'செகண்ட் லவ்' ஷூட்டிங்கை மும்பைக்கு கொண்டு போனது ஏன்?

மறுபடியும் ஹீரோ.. நெகிழும் காமெடியன்!காமெடி மற்றும் சப்போர்ட் கேரக்டர்கள் மூலம் சின்னத்திரையில் நுழைந்தவர் அழகப்பன். சன் டிவியில் ஒளிபரப்பான 'ஆனந்த ராகம்' தொடர் இவரை ஹீரோ ஆக்கியது.அந்த தொடர் ஆயிரம் எப... மேலும் பார்க்க