ஈரோட்டில் ஓணம் பண்டிகை தொடக்கம்: அத்தப்பூ கோலமிட்டு பெண்கள் நடனமாடி கொண்டாட்டம்!
TN Assembly: 'எதிர்கட்சியில 57 பேர் தான் இருக்கீங்க; உதயநிதி பேசும்போது நாங்க எழுந்தோம்னா.!'- ஆதவ் அர்ஜுனா | Live
"அமைச்சர் ஆதவ் பேசியதை அவை குறிப்பில் இருந்து நீக்குகிறேன்"- சபாநாயகர்
ஆதவ் அர்ஜுனா சட்டமன்றத்தில் திமுக குறித்து பேச ஆரம்பித்தப்போது அக்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர். அதற்கு ஆதவ் அர்ஜுனா, " எதிர்கட்சியில் 57 பேர் தான் இருக்கிறீர்கள். எதிர்கட்சி தலைவர் பேசும்போது நாங்கள் எழுந்தோம் என்றால்..." என்று கூற சபாநாயகர் பொதுப்பணித்துறை அமைச்சர் கருத்தை ஏற்க முடியாது. நீங்கள் பேசியதை அவை குறிப்பில் இருந்து நீக்குகிறேன் என்றார்.
" ஆளுங்கட்சி நிர்வாகிகள் மீதே பாலியல் குற்றச்சாட்டுகள் வந்த வண்ணம் இருக்கிறது"- உதயநிதி ஸ்டாலின்
தமிழக சட்டமன்றத்தில் இன்று சுகாதாரத்துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சட்டமன்றத்தில் பேசிய எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், " கோவையில் கல்லூரி மாணவனை 20 பேர் சேர்ந்து அடித்து கொலை செய்துள்ளனர்; இது கோஷ்டி மோதல் அல்ல.

போதைப்பொருள் கும்பல் குறித்து காவல் துறையிடம் தகவல் கொடுத்ததால் அமுதன் கொலை செய்யப்பட்டிருக்கிறார். இந்த கொலை அரசின் அலட்சியத்தால், போலீஸின் பொறுப்பற்ற போக்கால் தான் நடந்தது. போதை கலாசாரத்தை எதிர்த்து நிற்கும் ஒவ்வொருவருக்கும் இது ஒரு எச்சரிக்கை சம்பவமாக இருக்கிறது" என்று பேசியிருக்கிறார்.
தொடர்ந்து பேசிய அவர், " ஆளுங்கட்சி நிர்வாகிகள் மீதே பாலியல் குற்றச்சாட்டுகள் வந்த வண்ணம் இருக்கிறது. 100 நாள் சாதனை என அரசு பெருமை பேசும் வேளையில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு நடந்து வருவதே சாட்சி. சட்டம் ஒழுங்கு சீர்கேட்டை சரிசெய்ய போதைப்பொருளுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்" என்று பேசியிருக்கிறார்.














