செய்திகள் :

"TVK அமைச்சர் போதைப்பொருள் வீடியோ எங்கள் ஆட்சியில் வந்திருந்தால் நடவடிக்கை எடுத்திருப்போம்"- உதயநிதி

post image

சட்டமன்றத்தில் திமுக வெளிநடப்பு செய்த பிறகு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார்.

"தொடர்ந்து போதைப்பொருளால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டிருக்கிறது. இதனை அரசின் கவனத்திற்குக் கொண்டு வருவதற்காக அனைத்து கட்சி தலைவர்களும் அரசின் கவனத்திற்கு எடுத்து வந்தோம்.

உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின்

ஆனால் அதற்கெல்லாம் சரியான பதிலை இந்த அரசு அளிக்கவில்லை. மாறாக எங்கள் மீதுதான் குற்றச்சாட்டை வைக்கின்றனர். தெளிவான விளக்கத்தை அளிக்காமல் எப்போதும் போல பழியை எங்கள் மீது சுமத்துகின்றனர்.

அதுமட்டும் அல்லாமல் கடந்த மூன்று மாதங்களாகச் சொல்லிக்கொண்டிருக்கிறேன். எந்தத் துறைக்கு எந்த அமைச்சர் என்பதே சரியாகத் தெரியவில்லை என்று... இதற்கு என்ன கரணம் என்றால் அந்தந்தத் துறை அமைச்சர்கள் அந்தந்தத் துறைக்கான கேள்விகளுக்கு சட்டமன்றத்தில் பதில் சொல்வதில்லை.

உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின்

உதாரணத்திற்கு இன்று போதைப்பொருள் பற்றி சட்டமன்றத்தில் பேசிக்கொண்டிருந்தோம். இதற்கு முழு பொறுப்பு யார் ஏற்க வேண்டும் எல்லோருக்கும் தெரியும். ஆனால் அந்தத் துறை அமைச்சர் இன்று சட்டமன்றத்திற்கு வரவே இல்லை.

இதையெல்லாம் கண்டித்துத்தான் வெளிநடப்பு செய்தோம். தவெக அமைச்சர் போதைப்பொருள் பயன்படுத்திய வீடியோ நாங்கள் ஆட்சி செய்யும்போது வெளியாகி இருந்தால் நிச்சயம் நடவடிக்கை எடுத்திருப்போம்" என்று தெரிவித்திருக்கிறார்.

மகாராஷ்டிரா: சாலை இல்லாததால் உயிரிழந்த கர்ப்பிணி மனைவி; மக்களைத் திரட்டி சாலையமைத்த பழங்குடி கணவன்!

மகாராஷ்டிராவில் மலைப்பகுதியில் இருக்கும் கிராமங்களுக்குப் போதிய சாலை வசதி இல்லாமல் இருக்கிறது. அப்படியே சாலை வசதி இருந்தாலும் அவை மிகவும் மோசமாகச் சேதம் அடைந்து காணப்படுகிறது. மகாராஷ்டிராவின் சந்திராப... மேலும் பார்க்க

ஒரு அமெரிக்க வீரரை பிடித்தாலோ, கொன்றாலோ 30,000 டாலர் பரிசு; பெண்களுக்கு இரட்டிப்பு.! ஈரானின் அதிரடி

“அமெரிக்க வீரரைப் பிடித்தாலும், கொன்றாலும் பரிசு...” — ஈரான் ராணுவத்தின் இந்த அறிவிப்பு, ஏற்கெனவே பதற்றத்தில் இருக்கும் அமெரிக்கா–ஈரான் மோதலை மேலும் பரபரப்பாக்கியிருக்கிறது.அமெரிக்க ராணுவ வீரர் ஒருவரை... மேலும் பார்க்க

`அனைத்தும் குஜராத் மாநிலத்திற்கே செல்வதை ஏற்க முடியாது.!' - பாஜக அரசை சாடிய அண்ணாமலை

'இந்தியா டுடே தமிழ் ரவுன்ட் டேபிள் கான்பரன்ஸில்' பேசிய அவர் 'வி தி லீடர்ஸ்' இயக்கத்தின் நிறுவனர் அண்ணாமலை, பாஜகவின் முடிவெடுக்கும் முறை மற்றும் மத்திய அரசின் வளர்ச்சித் திட்டங்கள் குறித்து தனது கருத்த... மேலும் பார்க்க

`கூட்டணியை விட்டு வெளியேறுங்கள்' - நெருக்கும் மாணவர்கள்; ஜார்க்கண்ட் முதல்வருக்கு ராகுல் கடிதம்

ஜார்க்கண்டில் அரசுப் பணித் தேர்வுகளில் முறைகேடுகள் நடந்ததாகக் குற்றம்சாட்டி மாணவர்கள் நடத்தி வரும் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், அம்மாநில முதல்வர் ஹேமந்த் சோரனை நேரில் சந்தித்து மாணவர்களின் க... மேலும் பார்க்க

ஈரான் அணுசக்தி: இந்தியாவிலிருந்து இஸ்ரேல், வாஷிங்டன் வரை பரவிய வதந்தி! - உண்மை என்ன?

அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையேயான மோதல்கள் இனி வான்வெளியிலோ அல்லது ஹார்முஸ் ஜலசந்தியிலோ மட்டும் நிகழ்வதில்லை. ஏவுகணைத் தாக்குதல்களும், ட்ரோன் கண்காணிப்புகளும் செய்திகளில் ஆதிக்கம் செலுத்தும் அதே வே... மேலும் பார்க்க

TN Assembly: 'எதிர்கட்சியில 57 பேர் தான் இருக்கீங்க; உதயநிதி பேசும்போது நாங்க எழுந்தோம்னா.!'- ஆதவ் அர்ஜுனா | Live

"அமைச்சர் ஆதவ் பேசியதை அவை குறிப்பில் இருந்து நீக்குகிறேன்"- சபாநாயகர்ஆதவ் அர்ஜுனா சட்டமன்றத்தில் திமுக குறித்து பேச ஆரம்பித்தப்போது அக்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர். அதற்கு ஆதவ் அர்ஜுனா, " எதிர்கட்ச... மேலும் பார்க்க