செய்திகள் :

Vijay: "தம்பி விஜய்... நீங்கள் சொல்வது உண்மைதான்" - வீடியோ வெளியிட்ட ஸ்டாலின்

post image

சட்டமன்றக் கூட்டத்தொடரில் காவல்துறை, தீயணைப்புத் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்தின்போது முதல்வர் விஜய், திமுகவைக் கடுமையாக விமர்சித்து பேசியிருந்தார்.

சர்க்காரியா கமிஷன், மிசா குறித்தெல்லாம் பேசியிருந்தார். குறிப்பாக மிசா குறித்து பேசும்போது ஸ்டாலினை மறைமுகமாகச் சைகை ஒன்றின் மூலம் சாடியிருந்தார்.

இதற்கு எதிர்ப்புகள் கிளம்ப முதல்வர் விஜய், "பதிலுரையின் இடையேயான எனது உடல்மொழி எதேச்சையாக வெளிப்பட்டதுதானே தவிர, அது எவ்வகையிலும் உள்நோக்கம் கொண்டதில்லை என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்" என்று விளக்கம் கொடுத்திருந்தார்.

முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்

இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வரின் சட்டமன்றப் பதிலுரைக் குறித்து வீடியோ ஒன்றைப் பேசி வெளியிட்டிருக்கிறார். அதில், "அண்மையில் நடந்து முடிந்த சட்டமன்றத்தில் நடந்த சில சர்ச்சைகள் தமிழ் மக்களுக்கும் நம் உடன் பிறப்புகளுக்கும் கோபத்தையும், அதிருப்தியையும் உண்டாக்கி இருப்பதைப் நான் உணர்கிறேன்.

இந்தச் சர்ச்சையில் குறிப்பாக சிறை வரலாறும் இருப்பதால் அதைப் பற்றி நான் கொஞ்சம் தெளிவுப்படுத்த விரும்புகிறேன். தம்பி விஜய் நீங்கள் சொல்வது உண்மைதான். பொய்யெல்லாம் இல்லை.

எமெர்ஜென்சி காலத்தில் அதை எதிர்த்து கலைஞர் மிகப்பெரிய கூட்டத்தைக் கூட்டி மிசா சட்டத்தைக் கடுமையாக விமர்சித்ததைத் தொடர்ந்து அப்போது இருந்த ஒன்றிய அரசாங்கம் 1971-ம் ஆண்டு திமுக ஆட்சியைக் கலைத்தார்கள்.

ஆட்சியைக் கலைத்த அடுத்த நொடி மிசா சட்டத்தில் என்னைக் கைது செய்வதற்காக வீட்டிற்கு போலீஸ் வந்தார்கள். அன்று நான் வீட்டில் இல்லை. 'மகன் பிரசாரத்திற்குச் சென்றிருக்கிறார் வந்ததும் நானே அனுப்பி விடுகிறேன்' என்று கலைஞர் சொல்லி அனுப்பிவிட்டார்.

திமுக தலைவர் ஸ்டாலின்
திமுக தலைவர் ஸ்டாலின்

அடுத்த நாள் நான் வீட்டிற்குச் சென்றதும் அவரே போலீஸை வரச்சொல்லி கைது செய்ய சொல்லிவிட்டார். சிறையில் எனக்கு பல கொடுமைகள் நடந்தன..." என்று சில விஷயங்களை ஸ்டாலின் அந்த வீடியோவில் பேசியிருக்கிறார். முழு வீடியோ கீழே இணைக்கப்பட்டிருக்கிறது.

"பிரதமர் வேட்பாளரை இந்தியா கூட்டணிதான் முடிவு செய்யும்"- தவெக கூட்டத்திற்குப் பிறகு மாணிக்கம் தாகூர்

நேற்று முடிந்த சட்டமன்றக் கூட்டத்தொடரின் போது, தவெக தரப்பிலிருந்து ‘2029-ம் ஆண்டு தற்போதைய தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தான் பிரதமர்’ என்கிற பேச்சை அடிக்கடி கேட்க முடிந்தது. காங்கிரஸை தொடரும் கேள்வி இத... மேலும் பார்க்க

`110ன் கீழ் விஜய்-ன் 17 அறிவிப்புகள்; 28 நாளில் ஒரு நாள் நடந்த வெளியேற்றம்'- கூட்டத்தொடர் ஹைலைட்ஸ்

தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடர் நேற்றோடு (செப்டம்பர் 8) முடிந்திருக்கிறது. இந்தக் கூட்டத்தொடரில் நடந்த முக்கியமான நிகழ்வுகளை தமிழ்நாடு அரசு தகவல்களாக வெளியிட்டுள்ளது. அந்த நிகழ்வுகளின் ஹைலைட்ஸ்...&g... மேலும் பார்க்க

மதுரை: பராமரிப்பின்றி கிடக்கும் மாநகராட்சிப் பூங்கா - சீரமைக்கக் கோரும் பொது மக்கள்!

மதுரை மாவட்டம், தெற்குத் தொகுதி, வார்டு எண் 71, மண்டலம் 3 பகுதியில் சேர்மன் முத்துராமையர் சாலையில் மதுரை மாநகராட்சியின் ஜோசப் பூங்கா கடந்த 2016 – 2017 ஆம் ஆண்டு (AMRUT – Atal Mission for Rejuvenation ... மேலும் பார்க்க

`மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி' - உதயமானது தவெக தலைமையிலான புதிய கூட்டணி!

இன்று (செப்டம்பர் 9) பனையூரில் தமிழக வெற்றிக் கழகம் கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தை நடத்தியது. இந்தக் கூட்டத்திற்கான அழைப்பு தவெக ஆட்சி அமைக்க ஆதரவளித்த கட்சிகளுக்கு விடுக்கப்பட்டது. அவை - காங... மேலும் பார்க்க

‘அதுவே பழகிடும்’ ஹார்முஸ் நீர்ச்சந்தி மூடலைப் பழகிக்கொண்ட உலக நாடுகள்; இப்போது எப்படி சமாளிக்கின்றன?

அமெரிக்காவும், இஸ்ரேலும் நவீன ஆயுதங்கள், தொழில்நுட்பம் மிகுந்த ஏவுகணைகளை வைத்து, ஈரானை வழிக்குக் கொண்டுவர நினைத்தது.ஆனால், ஈரானோ ஒரே ஒரு நீர்ச்சந்தியை மூடி அமெரிக்காவிற்கு, இஸ்ரேலுக்கு மட்டும் ஆட்டம் ... மேலும் பார்க்க