செய்திகள் :

Vijay Sethupathi: 'முதல் தமிழ் திரைப்படம்!' - ஹாலிவுட்டில் ரீமேக்காகும் விஜய் சேதுபதியின் 'மகாராஜா'!

post image

ஹாலிவுட்டிலிருந்து நிறைய திரைப்படங்கள் தமிழில் நேரடியாக ரீமேக் செய்யப்பட்டிருக்கின்றன. அதனைத் தாண்டி சில படங்கள் நேரடியாக இல்லாமல், கதையில் சில விஷயங்களை மட்டும் எடுத்துக்கொண்டு ரீமேக் செய்யப்பட்டிருக்கின்றன.

தற்போது ஒரு தமிழ் படத்தை ஹாலிவுட்டில் ரீமேக் செய்யவிருக்கிறார்கள். அதற்கான உரிமத்தையும் தயாரிப்பு நிறுவனத்திடமிருந்து பெற்றிருக்கிறது ரீமேக் செய்யவிருக்கும் ஹாலிவுட் நிறுவனம்.

மகாராஜா
மகாராஜா

இயக்குநர் நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில், விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த 2024-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'மகாராஜா'. வசூலிலும் பெரிய கணக்கைத் தொட்ட இப்படம் பல விருதுகளையும் பெற்றது.

தேசிய விருதுகளில்கூட அப்படத்திற்கு விருதுகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. இப்படியான பெரிய அங்கீகாரங்களைப் பெற்ற இந்தத் திரைப்படம் இப்போது ஹாலிவுட்டில் ரீமேக் ஆகவிருக்கிறது.

இந்தத் தகவலை இந்தத் திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது. ஹாலிவுட்டில் ரீமேக்காகும் முதல் தமிழ் திரைப்படம் இதுதான் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாகப் பதிவிட்டிருக்கும் 'மகாராஜா' படத்தின் தயாரிப்பு நிறுவனமான பேஷன் ஸ்டுடியோஸ், " இது வரலாற்று சாதனை. முன்னணி ஹாலிவுட் தயாரிப்பு நிறுவனம் மூலம் உருவாக்கப்படும் முதல் தமிழ் திரைப்படம் என்ற பெருமையை 'மகாராஜா' பெறுகிறது" எனக் குறிப்பிட்டுப் பதிவிட்டிருக்கிறார்கள்.

இந்தப் படத்தில் 'இண்டர்ஸ்டெல்லார்' படத்தில் நடித்திருந்த நடிகர் மேத்யூ மெக்கோனஹி (Matthew McConaughey) நடிக்கவிருக்கிறார் எனவும் தகவல்கள் இணையத்தில் பேசப்பட்டு வருகின்றன.

ARS கார்டன் யாருக்கு? எச்சரிக்கும் சட்ட அறிவிப்பு! - அம்பிகா, ராதா குடும்பத்தில் சொத்து பிரச்னையா?

சென்னையின் பிரபல ஷூட்டிங் ஸ்பாட்டான ஏ.ஆர்.எஸ். கார்டன் வளாகத்தில் வைக்கப்பட்டிருக்கும் சட்ட அறிவிப்பு பலகை சினிமா வட்டாரத்தில் பேசு பொருளாகியிருக்கிறது.'இந்த நிலம் விற்பனைக்கல்ல, தவிர இந்த நிலம் தொடர்... மேலும் பார்க்க

"விஜய் சேதுபதி மறைந்திருந்து தாக்கும் குணம் கொண்ட மனிதன் அல்ல.!" - இயக்குநர் சீனு ராமசாமி

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிகர் விஜய் சேதுபதி பகிர்ந்த கருத்தை முன்வைத்து தவெக ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் விஜய் சேதுபதியை கடுமையாக விமர்சித்து வருகின்றன. இந்நிலையில் விஜய் சேதுபதிக்கு இயக்குநர் சீனு ... மேலும் பார்க்க

Mandaadi: " 'உன்னை கொன்றுக்கணும், விட்டிருக்கக் கூடாது'னு கமென்ட்ஸ் போடுறாங்க!" - 'மண்டாடி' கிட்டான்

சூரியின் 'மண்டாடி' படம் திரையரங்குகளில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. மதிமாறன் புகழேந்தி இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் சத்யராஜ், சுஹாஸ், மஹிமா நம்பியார் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்... மேலும் பார்க்க

'பொக்கிஷமாகப் போற்றுவேன்!' - திருமண வாழ்வில் 20 ஆண்டுகள் கடந்ததை கொண்டாடிய சூர்யா - ஜோதிகா

சூர்யா - ஜோதிகா தம்பதி, தங்களுடைய 20-வது திருமண நாளைக் கடந்த செப்டம்பர் 11-ஆம் தேதி கொண்டாடினர். திருமண வாழ்வில் 20 ஆண்டுகளை கடந்ததையொட்டி, அதனை இந்த தம்பதியினர் கொண்டாடியிருக்கிறார்கள். அந்த கொண்டாட்... மேலும் பார்க்க