செய்திகள் :

தவெக கூட்டணி: "ராகுல் காந்தியை பிரதமராக ஏற்கவில்லை எனில்..." - செல்வப்பெருந்தகை

post image

சுதந்திரப் போராட்ட தியாகி ராமசாமி படையாட்சியாரின் 109-வது பிறந்தநாளை முன்னிட்டு காங்கிரஸ் முன்னாள் தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்ட தலைவர்கள், சென்னையில் அவரின் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த செல்வப்பெருந்தகை, ``சுதந்திரப் போராட்ட தியாகியும், பிற்படுத்தப்பட்ட மற்றும் விளிம்புநிலை மக்களின் அரசியல் விழிப்புணர்வுக்கு வித்திட்டவர் தலைவர் ராமசாமி படையாட்சியார். ராமசாமி படையாட்சியார் தன் மக்களுக்காகவும், மாநிலத்திற்காகவும், தேசத்திற்காகவும் எந்தவொரு கருத்தையும் துணிச்சலுடனும் தைரியத்துடனும் பதிவு செய்யக்கூடியவர்.

அத்தகைய துணிச்சலும் ஆளுமையும் இன்றைய அரசியல் சூழலில் குறைந்திருக்கிறதோ என்ற கேள்வி எழுகிறது.

விஜய் - ராகுல் காந்தி
விஜய் - ராகுல் காந்தி

அரசு கொண்டுவரும் ஐந்து ஆண்டுகள் திட்டங்களோ அல்லது எதிர்காலத் திட்டங்களோ எதுவாக இருந்தாலும், திட்டம் செயல்படுத்தப்படும் பகுதிக்கு நேரடியாகச் சென்று, அங்குள்ள அனைத்துக் கட்சித் தலைவர்களையும் மக்களையும் சந்தித்து ஆலோசனைகளைப் பெற வேண்டும். பரந்தூர் விமான நிலையத் திட்டத்தில் நேரில் சென்று மக்களைச் சந்தித்து, முதல்வர் வேண்டாமென முடிவெடுத்தது போல, ஏனைய திட்டங்களிலும் மக்களிடம் ஏன் கருத்து கேட்கப்படவில்லை என்ற கேள்வியும் எழுகிறது.

கூட்டணி ஆட்சியில் இருந்தாலும், கம்யூனிஸ்ட் கட்சிகள் மக்களின் நலனுக்காகத் தங்கள் ஆளுமையுடன் குரல் கொடுத்து வருகின்றன.

அதேபோன்று, கூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சிகளும் மக்களுக்காகத் தைரியமாகத் குரல் கொடுக்க வேண்டும். மேலும், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர் என்றால் கூட்டணிக் கட்சிகள், வெளிப்படையாகவும் நேர்மையாகவும் ஒப்புக்கொள்ள வேண்டும். அவரை பிரதமராக ஏற்கவில்லை எனில், இந்தக் கூட்டணி தொடர்வதற்கு என்ன வாய்ப்பு இருக்கிறது? தலைவர் ராமசாமி படையாட்சியாரின் இந்தப் பிறந்த நாளில், ராகுல் காந்தியை பிரதமராக ஏற்றுக்கொள்ளும் நேர்மையான நிலையை வலியுறுத்திச் சபதம் ஏற்போம்" என்றார்

புதிய தலைமை செயலகம்: `ஜல்லிக்கட்டு போராட்டத்தை விட மிகப்பெரிய போராட்டத்தை..!'- கொதிக்கும் மீனவர்கள்

நடந்து முடிந்த சட்டமன்றக் கூட்டத்தொடரின்போது, 110-வது விதியின் கீழ் ரூ.1,200 கோடி மதிப்பில் 20 ஏக்கர் பரப்பளவில் புதிய தலைமைச் செயலகம் கட்டப்படும் என தமிழக முதல்வர் விஜய் அறிவித்தார். இதைத் தொடர்ந்து,... மேலும் பார்க்க

``கூட்டணி குறித்து கருத்து சொல்ல செல்வப்பெருந்தகை யார்..?" - எம்.பி பிரவீன் சக்ரவர்த்தி கேள்வி!

காங்கிரஸ் முன்னாள் தலைவர் செல்வப்பெருந்தகை இன்று செய்தியாளர்களிடம் பேசியபோது, ``ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக ஏற்காதவர்களுடன் கூட்டணிக்கான வாய்ப்பு என்ன இருக்கிறது?" எனக் கேள்வி எழுப்பியிருந்தார்... மேலும் பார்க்க

'அமைச்சரவையின் முதல் விக்கெட்... பதைபதைப்பில் 'கில்லி' சரத்? - அதிரடிக்கு தயாராகும் முதல்வர்?

கிரிக்கெட் மைதானத்தில் மாத்திரை நுணுக்கியது தொடங்கி தாம்பரம் மாநகராட்சி டெண்டர் ஊழல் வரைக்கும் தொடர் சர்ச்சைகளில் சிக்கிக் கொண்டிருக்கிறார் அமைச்சர் கில்லி சரத். 'அமைச்சர் போதைப் பொருள் பயன்படுத்தினார... மேலும் பார்க்க

மயிலாடுதுறை: பள்ளியில் கழிவறை இருந்தும் காவிரி படுகையை நாடும் மாணவர்கள்; அவலநிலைக்கு காரணம் இதுதான்!

மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் அரசு ஆண்கள் மாதிரி மேல்நிலைப் பள்ளியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். நூறு ஆண்டுகளைக் கடந்த இந்தப் பள்ளியில், மாணவர்களுக்கான அடிப்படை வசதிகளில்... மேலும் பார்க்க

இறுதி ஒப்புதலுக்கு Waiting; கிடைத்துவிட்டால் இந்தியாமீது அமெரிக்காவின் 100% வரி பாயும்! விவரம் என்ன?

அடுத்த பிப்ரவரி மாதம் வந்தால், ரஷ்யா-உக்ரைன் போர் தொடங்கி ஐந்து ஆண்டுகள் ஆகிவிடும்.அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ‘நான் அமெரிக்க அதிபரானால் ரஷ்யா-உக்ரைன் போரை விரைவில் முடிப்பதற்கான பணிகளைச் செய்வேன்’ என்று ... மேலும் பார்க்க

'வாயை விட்ட மூசா;கடுப்பில் முதல்வரின் பாதுகாப்பு அதிகாரிகள்?'- லண்டன் ரசிகர் சந்திப்பு ரத்து பின்னணி

தொழில் முதலீடுகளை ஈர்க்க லண்டன் சென்றிருக்கும் முதல்வர் விஜய்யுடன் புகைப்படம் எடுக்க ஆயிரக்கணக்கான மக்கள் கூடியதால், பாதுகாப்புக் காரணங்களுக்காக ரசிகர் சந்திப்பு ரத்து செய்யப்பட்டிருக்கிறது. முதல்வரை ... மேலும் பார்க்க