செய்திகள் :

திருச்சி: முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தொடர்புடைய இடங்களில் சோதனை!

post image

தி.மு.க முன்னாள் அமைச்சரும், திருச்சி தெற்கு மாவட்டச் செயலாளருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி மீது, கடந்த ஆட்சியில் தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்கியதில் பல கோடி ரூபாய் அளவில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. இந்தப் புகாரின் அடிப்படையில், முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியின் இல்லம் மற்றும் அவருக்குத் தொடர்புடைய ஆறுக்கும் மேற்பட்ட இடங்களில் மத்திய குற்றப்பிரிவு (CCIB) காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், திருச்சியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் இன்று காலை 7 மணி முதல் இந்தச் சோதனை நடைபெற்று வருகிறது.

raid

சென்னையில் இருந்து இன்று காலை 7 மணி அளவில் மத்திய பொருளாதாரக் குற்றப்பிரிவைச் சேர்ந்த உதவி ஆணையர் செந்தில் தலைமையில் வந்த 14 பேர் கொண்ட காவல்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சோதனை நடைபெறும் வேளையில் அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் பொருட்டு, பாதுகாப்பு கருதி அன்பில் மகேஸின் இல்லத்திற்கு வெளியே துப்பாக்கி ஏந்திய காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அங்கிருக்கும் முக்கிய ஆவணங்கள், டிஜிட்டல் சான்றுகள் மற்றும் கோப்புகளை அதிகாரிகள் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர். இன்னொருபக்கம், முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு இந்த விஷயத்தைக் கேள்விப்பட்டு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி வீட்டுக்கு வருகை தந்தார். ஆனால், அவரை உள்ளே அனுமதிக்கவில்லை. கடந்த ஆட்சிக் காலத்தில் தனியார் பள்ளிகளுக்கான அங்கீகாரம் அளித்தல், புதுப்பித்தல் மற்றும் தடையின்மை சான்றிதழ் (NOC) வழங்குவதில் பெரும் முறைகேடுகள் நடைபெற்றதாகப் புகார்கள் எழுந்தன.

nehru

குறிப்பாக, தகுதியற்ற பல தனியார் பள்ளி நிர்வாகங்களிடம் இருந்து சட்டவிரோதமாக பல கோடி ரூபாய் லஞ்சமாகப் பெறப்பட்டதாகக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. இதுதொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்கின் தொடர்ச்சியாகவும், அதன் அடிப்படையிலுமே தற்போது மத்தியக் குற்றப்பிரிவு காவல்துறையினர் இந்தச் சோதனையை நடத்தி வருவதாகச் சொல்லப்படுகிறது. தி.மு.க முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் தொடர்புடைய இடங்களில் மத்தியக் குற்றப்பிரிவு போலீஸார் அதிரடி சோதனை மேற்கொண்டு வருவது, பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

`நான் பாட்டியைக் கொன்னுட்டேன்' - குடிபோதையில் ரத்தம் சொட்டும் கத்தியுடன் கூச்சலிட்ட பேரன் கைது

கேரள மாநிலம் ​திருவனந்தபுரம் மாவட்டம் வெட்டுதுறை புதுவல் பகுதியைச் சேர்ந்தவர் மெர்சி (65). இவர் கடினங்குளம் சான்னாங்கரை பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தார். இவரது மகள் பிந்து மற்றும் பிந்துவின் க... மேலும் பார்க்க

`என் மகனை உண்மையிலேயே காதலிக்கிறாய் எனில் தூக்கில் தொங்கு' - விபரீத முடிவெடுத்த மாணவி; பெண் கைது

குஜராத் மாநிலம் அகமதாபாத்தை சேர்ந்த 17 வயது மாணவர், தான் படிக்கும் பள்ளியில் 12வது வகுப்பு படிக்கும் மாணவியை காதலித்து வந்தார். இருவரும் அடிக்கடி போன் மற்றும் மெசேஜ் மூலம் தங்களது காதலை வளர்த்து வந்தன... மேலும் பார்க்க

குருகிராமில் இளம்பெண் சென்ற பைக்கை மோதிய கார்; ராஜஸ்தானில் வைத்து இளைஞரைக் கைதுசெய்த போலீஸ்!

டெல்லி அருகில் உள்ள குருகிராமில் ஷிவானி என்ற பெண் இரு சக்கர வாகனத்தில் சென்றபோது கல்யான் என்பவர் காரில் அவரை விரட்டிச் சென்றார். ஒரு கட்டத்தில் அப்பெண்ணின் வாகனத்தின் மீது மோதிவிட்டு அங்கிருந்து காரில... மேலும் பார்க்க

காவல் நிலையத்தில் வைத்திருந்த 7 புகையிலை மூட்டைகளை காரில் கடத்திய ஏட்டு; கேரளாவில் அதிர்ச்சி சம்பவம்

கேரள மாநிலத்தில் `ஆப்ரேஷன் தூஃபான்' என்ற பெயரில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் சட்டவிரோத விற்பனைக்கு எதிராக போலீஸார் கடும் நடவடிக்கை எடுத்துவருகின்றனர். அதன் ஒரு பகுதியாக வயநாடு மாவட்டம், சுல்தான் பத்த... மேலும் பார்க்க

ஆம்னி பஸ்களில் பெண்களின் கைப்பையே குறி; தொடர் நகைக் கொள்ளையில் ஈடுபட்ட கொள்ளையன் சிக்கியது எப்படி?

நெல்லை மாவட்டம்,பாளையங்கோட்டை பிலிப் காலனியைச் சேர்ந்தவர் ஜஸ்டின் சகாயராஜ். இவரது மனைவி ஜூலியட் லதா, தனியார் கல்லூரி உதவி பேராசிரியர். இருவரும் கடந்த ஆகஸ்ட் 27-ம் தேதி இரவு நெல்லையில் இருந்து சென்னைக்... மேலும் பார்க்க

`பணம் தர்றேன், கேஸ் கொடுக்காதீங்க…' - ஆசிரியரின் தொடர் பாலியல் அத்துமீறல்; அரசுப்பள்ளி மாணவி தற்கொலை

``விஷம் குடிச்சிட்டேன்… செத்துடுவேன்னு பயமா இருக்கும்மா…"கள்ளக்குறிச்சி மாவட்டம்,சின்னசேலம் பகுதியில் சுமார்400மாணவிகளுடன் இயங்கி வரும் அந்த அரசுப் பள்ளியில்,பத்தாம் வகுப்பு படித்து வந்தார் கவிதா (மாண... மேலும் பார்க்க