செய்திகள் :

"அண்ணாமலை நீண்டகால நண்பர்; அவரை சந்தித்ததில் அரசியல் இல்லை" - டிடிவி தினகரன்

post image

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், "அதிமுக-வின் செயற்குழு, பொதுக்குழு குறித்து கருத்து சொல்ல எதுவும் இல்லை. அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் தேர்தலை நோக்கி பயணித்துக் கொண்டுள்ளது.

பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலையை அரசியலுக்காக சந்திக்கவில்லை. நீண்டகால நண்பர் என்பதால் கோவையில் சந்தித்து பேசினோம். அதில் அரசியல் உறுதியாக இல்லை. அரசியல் கட்சிகளின் கூட்டங்கள் நீதிமன்ற வழிகாட்டுதலில்படி நடக்கிறது. அதன்அடிப்படையில் கேட்கும் இடங்களை அரசு தேர்வு செய்து கொடுக்கிறது. தவெக கூட்டத்திற்கு செங்கோட்டையன் அனுமதி கேட்டபோது கூட காலஅவகாசம் கேட்டதாக செய்திகளில் பார்த்தேன்.” என்றார்.

டி.டி.வி.தினகரன்

`125 இந்து கோயில்கள் இடிக்கப்பட்டுள்ளது என அண்ணாமலை கூறியுள்ளார்’ என கேட்டதற்கு, ``யார் எதற்காக இடித்தார்கள் என்ன காரணம் என தெரியாமல் கருத்து சொல்வதற்கு விரும்பவில்லை. திருப்பரங்குன்றத்தில் முருகன் பெயரை சொல்லி, எந்த ஒரு அரசியல் இயக்கமும் அரசியல் செய்வதை மதங்களைக் கடந்து வாழ்கின்ற மக்களிடையே தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்துவதை தடுக்கும் வகையில் அனைத்து அரசியல் அமைப்புகளும் செயல்பட வேண்டும்.

எந்த அரசியல் கட்சியாக இருந்தாலும் ஆட்சி அதிகாரத்திற்கு வர வேண்டும் என்று தான் நினைப்பார்கள். கூட்டணி ஆட்சி அமைகின்ற சூழ்நிலை தமிழ்நாட்டில் ஏற்படும், அது எந்த கூட்டணியாக இருந்தாலும் சரி, எந்தக் கட்சிக்கும் அறுதி பெரும்பான்மை கிடைக்காத நிலையில் கூட்டணி ஆட்சி தான் அமையும்” என்றார்.

இதை தொடர்ந்து பேசிய அவர், ``மற்ற கட்சியில் குறித்து தேவையில்லாமல் கருத்து கூறுவது நாகரீகமாக இருக்காது. அம்மாவின் தொண்டர்கள் ஓர் அணியில் இணைய வேண்டும் என்பதுதான் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிலைப்பாடு, ஓ.பன்னீர்செல்வத்தின் நிலைப்பாடு என்பது உங்களுக்கே தெரியும்.

அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்பது அனைவருக்கும் தெரிந்தது. கொலை, கொள்ளை அதிகரித்துள்ளது. இதற்கு காரணம் போதை கலாசாரம், பெண்களுக்கான பாதுகாப்பு இல்லாதது அதிகளவில் உள்ளது.

தேர்தலுக்கு இன்னும் நாட்கள் உள்ளது. இரண்டு மாதங்களுக்கு பிறகு கூட்டணி குறித்து அறிவிப்போம். தமிழக வெற்றிக்கழகம் தலைமையில் ஒரு முழுமையான கூட்டணி அமைந்தால், அது திமுக கூட்டணிக்கு சவாலாக இருக்கும். சில கட்சிகள் எங்களோடு கூட்டணி வரவேண்டுமென பேசிக் கொண்டிருப்பது உண்மைதான். எந்த கட்சியில் பேசுகிறது என்று தற்போது கூற முடியாது” என தெரிவித்தார்.

அதிமுக: "கட்சியை சில அரசியல் புரோக்கர்கள் அழிக்கப் பார்க்கிறார்கள், ஆனால்.!"- சி.வி சண்முகம்

சென்னை வானகரத்தில் இன்று (டிச.10) அதிமுகவின் செயற்குழு, பொதுக்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் பேசிய அதிமுக எம்.பி சி.வி சண்முகம், " அதிமுக வரலாற்றிலேயே பொறிக்கப்பட வேண்டிய ஒரு முக்கியமான நிகழ்வ... மேலும் பார்க்க

அதிமுக: `நாம் வென்றபோது சட்டையை கிழித்துக்கொண்டு திரிந்தவர் ஸ்டாலின்' - பொதுக்குழுவில் எடப்பாடி

தமிழ்நாட்டின் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், சென்னை வானகரத்தில் உள்ள தனி​யார் மண்​டபத்தில் அ.தி​.மு.க பொதுக்​குழு மற்​றும் செயற்​குழு கூட்​டம் இன்று நடை​பெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தில... மேலும் பார்க்க

அதிமுக பொதுக்குழு: மட்டன் பிரியாணி, சிக்கன் 65, மீன் வறுவல், மட்டன் குழம்பு - கம கம உணவுகள்! | Album

அதிமுக பொதுக்குழு | கம கம உணவுகள்அதிமுக பொதுக்குழு | கம கம உணவுகள்அதிமுக பொதுக்குழு | கம கம உணவுகள்அதிமுக பொதுக்குழு | கம கம உணவுகள்அதிமுக பொதுக்குழு | கம கம உணவுகள்அதிமுக பொதுக்குழு | கம கம உணவுகள்அத... மேலும் பார்க்க

USA:``இந்த வழக்கில் தோற்றால் பேரழிவு'' - பிறப்பு குடியுரிமை குறித்து ட்ரம்ப் ஆவேசம்!

அமெரிக்கவில் 1860 காலகட்டத்தில் அடிமை முறைக்கு ஆதரவாகவும் - எதிராகவும் உள்நாட்டுப்போர் நடந்தது. இந்தப் போர் முடிவுக்கு வந்தபோது, அமெரிக்காவில் அடிமைகளாக இருந்தவர்களுக்கு சாதகமாக அமெரிக்காவில் பிறக்கும... மேலும் பார்க்க

``SIR வரவேற்பு, நீதித் துறையை மதிக்காத திமுக"- அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் என்னென்ன?- முழு விவரம்

தமிழ்நாட்டின் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், சென்னை வானகரத்தில் உள்ள தனி​யார் மண்​டபத்தில் அ.தி​.மு.க பொதுக்​குழு மற்​றும் செயற்​குழு கூட்​டம் இன்று நடை​பெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தில... மேலும் பார்க்க

மட்டன் பிரியாணி, சிக்கன் 65, மீன் வறுவல்; அதிமுக பொதுக்குழுவிற்காகத் தயாராகும் மெனு

அடுத்த ஆண்டு (2026) தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில், பேரணி, பிரசாரம், பொதுக்கூட்டம், தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகளை கட்சிகள் த... மேலும் பார்க்க