செய்திகள் :

"அமெரிக்கா ஈரானை ஆயுதம் இல்லாமல் ஆக்கியதா? இது கட்டுக்கதை!" - ஆதாரத்தைப் பகிரும் ஈரான் அரசு

post image

ஈரான் போர் தொடங்கியதிலிருந்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ‘ஈரானின் ராணுவக் கட்டமைப்புகள், ஆயுதங்கள் முழுமையாக அழிக்கப்பட்டுவிட்டன. ஈரானால் நீண்ட நாள்களுக்குத் தாக்குப்பிடிக்க முடியாது’ என்று திரும்பத் திரும்பக் கூறினார்... கூறுகிறார்... இனி கூறுவாரும்கூட.

ட்ரம்ப் சொன்னது...

ட்ரம்ப் இதை எத்தனை முறை கூறினாலும், கண்டிப்பாக ஒன்றை நாம் யோசித்துப் பார்க்க வேண்டும் – ஈரானின் ராணுவக் கட்டமைப்புகள் முழுமையாக அழிக்கப்பட்டுவிட்டால், ஈரான் இன்னும் எப்படிக் களத்தில் சண்டை செய்கிறது என்பதை.

தற்போது ஈரானின் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி தனது எக்ஸ் பக்கத்தில் அமெரிக்காவின் அறிக்கை ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.

சையத் அப்பாஸ் அராக்சி
சையத் அப்பாஸ் அராக்சி

அந்த அறிக்கை அமெரிக்காவின் Operation Epic Fury (OEF)-ஐக் குறித்தது. இது ஈரானுக்கு எதிரான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கூட்டு ராணுவ நடவடிக்கை ஆகும்.

அப்பாஸ் அராக்சி ஷேரிங்ஸ்

அந்த அறிக்கையில் அராக்சி ஹைலைட் செய்திருக்கும் பாயிண்ட்டில், “ஈரானியத் தாக்குதல்கள் காரணமாகக் குவைத், பஹ்ரைன், கத்தார், ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா, ஈராக், ஓமன் மற்றும் ஜோர்டான் ஆகிய நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ முகாம்களில் இருந்த நூற்றுக்கணக்கான கட்டடங்களும் அமைப்புகளும் சேதமடைந்தும் முற்றிலும் அழிந்தும் போயுள்ளதாக அமெரிக்க மத்தியக் கட்டளையகம் (US CENTCOM) தெரிவித்துள்ளது.

மேலும், இந்த மோதலின் போது (OEF) பல அமெரிக்கப் போர் விமானங்களும் சேதமடைந்துள்ளன... அழிக்கப்பட்டுள்ளன” என்று குறிப்பிட்டிருக்கிறது.

அமெரிக்க மத்திய கட்டளையகம் என்பது அமெரிக்காவின் ஒரு ராணுவ பிரிவாகும். இது தான் தற்போது ஈரான் மீது போர் தொடுத்துவரும் பிரிவு.

அராக்சி ஷேர் செய்திருக்கும் அறிக்கையில், அமெரிக்காவின் என்னென்ன போர் விமானங்கள் சேதமடைந்திருக்கின்றன என்பதும் இடம்பெற்றிருக்கிறது.

அராக்சி ஷேர் செய்த அறிக்கை
அராக்சி ஷேர் செய்த அறிக்கை

பதிவு

இந்த அறிக்கை குறித்து, “கட்டுக்கதை: ஈரான் ஆயுதமின்றி நிற்பதாகக் கூறுவது.

உண்மை: நூற்றுக்கணக்கான அமெரிக்க ராணுவ மையங்கள் தகர்க்கப்பட்டுள்ளன. பல போர் விமானங்கள் சாம்பலாக்கப்பட்டுள்ளன. (ஆதாரம்: பென்டகன்)

இது வெறும் தொடக்கம்தான்.

சரியான நேரத்தில் அனைத்து உண்மையையும் வெளிப்படுத்துவோம்.

ஈரானைப் பற்றிப் பொய்யான கதைகளைப் பரப்பியவர்களுக்கு, இதன் முடிவு நிச்சயம் இனிமையாக இருக்கப் போவதில்லை” என்று பதிவிட்டுள்ளார் அராக்சி.

`மீனாட்சியம்மன் கோவில் குடமுழுக்கில் அரசியல்' - அறங்காவலர் குழு தலைவர் ருக்மிணி பழனிவேல்ராஜன்

மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் அறங்காவலர் குழு தலைவரும், முன்னாள் அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் தாயாருமான ருக்மணி பழனிவேல்ராஜன் மற்றும் அறங்காவலர்கள் குழு உறுப்பினர்கள் சுப்புலெட்சுமி, டாக்டர்.ச... மேலும் பார்க்க

விஜய் : லண்டன் போலீஸ் சொன்ன காரணம்? - கடைசி நேரத்தில் முதல்வர் நிகழ்ச்சி ரத்து!

தற்போது லண்டன் பயணத்தில் இருக்கிறார் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்.தமிழ்நாட்டிற்கு முதலீடு ஈர்ப்பதற்காக பொதுப்பணித் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, தமிழ்நாடு அரசு அதிகாரிகள் சிலர் விஜய்யுடன் லண்டனுக்குப் பய... மேலும் பார்க்க

`தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க ரூ.100 கோடி..?' - அன்பில் மகேஸ் வீடுகளில் அதிரடி ரெய்டு!

தமிழ்நாட்டின் முன்னாள் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி. இவரது வீடுகளில் தற்போது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் சோதனை செய்து வருகின்றனர்.எதற்காக இந்தச் சோதனை?தனியார் பள்ளிகள... மேலும் பார்க்க

Mecca-விற்கு வரலாற்றில் முதன்முறையாக சவூதி எச்சரிக்கை! - மெக்காவைத் தாக்கியதா ஏமனின் ஹூதி?

மத்திய கிழக்கில் ஈரான் போரைத் தாண்டி சவூதி அரேபியா - ஏமனின் ஹூதிப் படைகளுக்கு இடையே கடுமையான தாக்குதல்கள் நடந்துகொண்டிருக்கின்றன.ஜூலை மாதம் தொடங்கிய இந்த மோதல் போக்கு தீவிரமாக இன்னும் தொடர்ந்துகொண்டிர... மேலும் பார்க்க

`விஜய்யைவிட நன்றாக நடனமாடுகிறேன்'- வி.டி.சதீசன் EB ஊழியர்களுடன் நடனமாடும் AI வீடியோ; நீக்கிய மெட்டா!

​கேரள மாநிலத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டு நிலவுகிறது. இதனால் பொதுமக்கள் கடுமையாக அவதியடைந்துவருகின்றனர். இந்த நிலையில் கேரள மின்வாரிய ஊழியர்களுடன் கேரள முதல்வர் வி.டி.சதீசன் உற்சாகமாக நடனமாடுவது போன... மேலும் பார்க்க

விஜய்சேதுபதி : `வசையாலும் மிரட்டலாலும் கருத்துரிமையை முடக்க முற்படாதீர்கள்'- சீமான் ஆதரவு குரல்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிகர் விஜய் சேதுபதி பகிர்ந்த கருத்தை முன்வைத்து தவெக ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் விஜய் சேதுபதியை கடுமையாக விமர்சித்து வருகின்றன. இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்... மேலும் பார்க்க