செய்திகள் :

"அமெரிக்காவிற்கும், ISIS பயங்கரவாத அமைப்புக்கும் என்ன பெரிய வித்தியாசம்?" - மார்கோவிடம் ஈரான் கேள்வி

post image

சமீபத்தில் அமெரிக்காவின் வெளியுறவுச் செயலாளர் மார்கோ ரூபியோ, "சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் தனது வெற்று ஆணைகளை அமெரிக்கர்கள் மீது திணிக்க முட்டாள்தனமாக முயற்சித்தால், ரோமானியப் படைத்தளபதி பாம்பே தன் படைகளுக்கு எதிராக சட்டங்கள் பற்றிப் பேச வந்தவர்களிடம் சொன்ன அதே பதிலைத்தான் நாமும் சொல்ல வேண்டியிருக்கும் - 'கையில் வாள் வைத்திருப்பவர்களிடம் சட்டங்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்காதீர்கள்'" என்று பேசியுள்ளார்.

ஈரானின் வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகாயி
ஈரானின் வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகாயி

ஈரான் பதில்

இந்தப் பேச்சுக்குப் பதிலளித்து ஈரானின் வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகாயி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்...

"வாள் ஏந்தியவர்களிடம் சட்டங்களைப் பற்றிப் பேசாதீர்கள்" என்று அமெரிக்க வெளியுறவுத் துறைச் செயலர் எச்சரித்துள்ளார்.

இத்தகைய அழிவுகரமான வாதத்தை அலட்சியப்படுத்தியதற்காக மனிதகுலம் ஏற்கெனவே மிகப்பெரிய விலையைக் கொடுத்துள்ளது.

இன்று, ஈரானுக்கு எதிரான போர் ஒழுக்கம் மற்றும் தேசியப் பாதுகாப்பின் பெயரால் நியாயப்படுத்தப்படுகிறது.

அமெரிக்காவிற்கும், ISIS-க்கும்..?

கையில் வாள் வைத்திருப்பதால் தாங்கள் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் என்று அமெரிக்கா நம்பினால், இந்தத் தர்க்கத்திற்கும் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு பயன்படுத்தும் தர்க்கத்திற்கும் இடையே என்ன பெரிய வேறுபாடு இருந்துவிடப் போகிறது?

மற்றவர்களுக்கு மறுக்கப்படும் உரிமைகளை வலிமையானவர்கள் தங்களுக்கு மட்டும் சொந்தமாக்கிக் கொள்ளும்போதுதான் சர்வதேச ஒழுங்கு சரியத் தொடங்குகிறது."

அப்பாஸ் அராக்சி
அப்பாஸ் அராக்சி

தலை வெட்டப்பட்டு...

மார்கோ ரூபியோவின் பேச்சுக்கு ஈரானின் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி நேற்று (நவம்பர் 16), "வாள் ஏந்தியவர்களிடம் சட்டங்களைப் பற்றிப் பேசாதீர்கள்" என்ற வார்த்தைகளை உதிர்த்த ரோமானியப் படைத்தளபதியின் கடைசிப் போர்,

அவரிடம் பெரும் படைபலம் இருந்தபோதிலும் படுதோல்வியிலேயே முடிந்தது.

போர்க்களத்திலிருந்து தப்பியோடிய அவர், இறுதியில் தலை வெட்டப்பட்டுக் கொல்லப்பட்டார்.

இதைவிடச் சிறந்த பொன்மொழி இதுதான்: "கடந்த காலத்தை நினைவில் கொள்ளத் தவறுபவர்கள், அதையே மீண்டும் அனுபவிக்க விதிக்கப்பட்டவர்கள்" என்று பதிவிட்டிருந்தார்.

SIR: `உ.பி-யில் 1.27 கோடி இந்து வாக்காளர்களின் பெயர்கள் நீக்கம்'- விளக்கம் கேட்ட யோகி ஆதித்யநாத்!

வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு (SIR) பிறகு உத்தரப்பிரதேச மாநில வாக்காளர் பட்டியலில் இந்து வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாக அந்த மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். இது ... மேலும் பார்க்க

கோவை: பெண்ணிடம் தகராறு செய்த தவெக நிர்வாகி – கட்சியில் இருந்து அதிரடி நீக்கம்!

கோவை கலிக்கநாயக்கன்பாளையம் பகுதியில் மகாராஜன் என்பவர் இருசக்கர வாகன விற்பனை ஷோரூம் நடத்தி வருகிறார். இவரது மனைவி திவ்யா. சமீபத்தில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த மகாராஜன், கட்சியின் பல்வேறு நிகழ்ச்ச... மேலும் பார்க்க

இஸ்ரேல் அதிபராக தொடர நெதன்யாகுவின் ஐடியா; ஒத்துழைக்காத எதிர்க்கட்சி! இன்னும் எத்தனை நாள் கெடு?

இஸ்ரேலில் தேர்தல் முடிவுகள் வந்து கிட்டத்தட்ட இரண்டு வாரங்கள் ஆகிவிட்டன. ஆனால், அந்த நாட்டில் இன்னும் யாரும் ஆட்சி அமைக்கவில்லை.பெரும்பான்மை பெறாத இஸ்ரேல் கட்சிகள்இஸ்ரேல் நாடாளுமன்றம் நெசட்டில் பெரும்... மேலும் பார்க்க

கள்ளக்குறிச்சி எம்எல்ஏ விவகாரம்: `இதே எடப்பாடியாராக இருந்திருந்தால்...'- அதிமுக பா.வளர்மதி பேச்சு

தவெக கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் மாவட்ட ஆட்சியருக்கு குறுஞ்செய்தி அனுப்பியதாக வெடித்திருக்கும் விவகாரம், பெரும் சர்ச்சையாகி இருக்கும் நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்ட அதிமுக மகளிர் அணி சார்பில் ... மேலும் பார்க்க

'மன்மோகன் சிங்கை பிரதமர் பதவியிலிருந்து நீக்க கோரிய பிரணாப் முகர்ஜி!' - என்ன சொல்கிறார் சோனியா?

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான சோனியா காந்தி 'Belonging' என்ற பெயரில் சுயசரிதை நூலை எழுதியிருக்கிறார். அதில் அவர் அரசியல்ரீதியாக குறிப்பிட்டிருக்கும் சில சம்பவங்கள் சர்ச்சையை கிளப்பியிருக்கிறது. கு... மேலும் பார்க்க

திருப்பத்தூர் பெரிய ஏரி: சுகாதாரச் சீர்கேட்டைச் சுட்டிக்காட்டிய விகடன்; குப்பைகளை அகற்றிய நிர்வாகம்!

திருப்பத்தூர் புதிய பேருந்து நிலையத்தை ஒட்டி அமைந்துள்ளது திருப்பத்தூர் பெரிய ஏரி. மீன்பிடித் தொழில், விவசாயப் பாசனம் எனப் பல வகைகளில் மக்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும் இந்த ஏரி, குப்பைகள் கொட்டப்படும... மேலும் பார்க்க