செய்திகள் :

"ஆந்திராவின் அதிர்ச்சியூட்டும் ரகசிய முதலீட்டு வியூகம் லீக் ஆகிவிட்டது!" - ஆந்திரா அமைச்சர் கிண்டல்

post image

தமிழ்நாட்டிற்கு வர வேண்டிய பல முதலீடுகள் ஆந்திரா பக்கம் செல்கின்றன. தமிழ்நாடு எளிதாகப் பெற்றிருக்க வேண்டிய பல முதலீடுகளை ஆந்திராவிடம் கோட்டை விட்டிருக்கிறது தவெக அரசு என்கிற குற்றச்சாட்டு தொடர்ந்து முன்வைக்கப்படுகிறது.

கைடன்ஸ் தமிழ்நாடு நிறுவனம்

இந்த நிலையில், கைடன்ஸ் தமிழ்நாடு நிறுவனத்திலிருந்த 15 ஊழியர்கள் ஆந்திராவிடம் தமிழ்நாட்டின் முதலீட்டு ரகசியத் தகவல்களைக் கொடுத்திருக்கிறார்கள் என்கிற புகார் சமீபத்தில் எழும்பிப் பிரச்னை பெரிதாகி வருகிறது.

லோகேஷ் நாரா பதிவு
லோகேஷ் நாரா பதிவு

இந்த ஊழியர்கள் சில மாதங்களுக்கு முன்பு, கைடன்ஸ் தமிழ்நாடு நிறுவனத்திலிருந்து ராஜினாமா செய்துவிட்டனர் என்றும் தகவல்கள் பரவி வருகின்றன.

கைடன்ஸ் தமிழ்நாடு நிறுவனம் என்பது தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனம் ஆகும். சில மாதங்களுக்கு முன்பு, தங்களுடைய நிறுவனத்திலிருந்து பல ஊழியர்கள் ராஜினாமா செய்தார்கள் என்கிற குற்றச்சாட்டை மறுத்துள்ளது கைடன்ஸ் தமிழ்நாடு நிறுவனம்.

லோகேஷ் நாரா கேலி

இந்த நேரத்தில் ஆந்திரப் பிரதேச அமைச்சர்களில் ஒருவரான லோகேஷ் நாரா தனது எக்ஸ் பக்கத்தில், “பிரேக்கிங்: ஆந்திரப் பிரதேசத்தின் அதிர்ச்சியூட்டும் ரகசிய முதலீட்டு வியூகம் லீக் ஆகிவிட்டது!

அதன் பெயர் ‘முதலீட்டாளர்களுக்கு அன்றே பதில் அளிப்பது’. தாராளமாக இதை நீங்களும் காப்பி அடித்துக்கொள்ளலாம்” என்று கேலி செய்வது போலப் பதிவிட்டுள்ளார்.

"குறுவை போச்சு; சம்பாவும் கருகுது; விவசாயிகளுக்கு Silent Mode-இல் உள்ள CM-இன் பதில் என்ன?"- ஸ்டாலின்

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாகத் தமிழக அரசு தாக்கல் செய்த மூன்று இடைக்கால மனுக்களில் இரண்டு மனுக்களை உச்ச நீதிமன்றம் இன்று (நவ. 20) தள்ளுபடி செய்திருக்கிறது. மேலும், மூன்றாவது புதிய மனு மீதான விசாரணை... மேலும் பார்க்க

'பணிநீக்கமா, ராஜினாமாவா?' Guidance Tamilnadu சர்ச்சையில் டி.ஆர்.பி.ராஜா கேள்வி!

கைடன்ஸ் தமிழ்நாடு நிறுவனத்திலிருந்து தமிழ்நாட்டின் முதலீட்டு ரகசியங்கள் ஆந்திராவிற்குக் கசிந்துள்ளதாகக் குற்றச்சாட்டு ஒன்று தற்போது எழுந்துள்ளது. இந்த ரகசியங்களைக் கசியவிட்டது 15 கைடன்ஸ் தமிழ்நாடு நிற... மேலும் பார்க்க

`அரசியல் கட்சி லாப நிறுவனமாகும் சூழல் உருவாகும்..!' - வெளிப்படையான டெண்டர் ஏன் அவசியம்? | ஓர் அலசல்

முந்தையை டெண்டர் வழக்கம்!மக்கள் நலத் திட்டங்களைச் செயல்படுத்த அந்தப் பணிகளை அரசு டெண்டர் விட்டு டெண்டரில் குறைவான தொகையில் அந்த வேலையைச் செய்து தரச் சம்மதிக்கும் நிறுவனங்களுக்கு டெண்டர் தருவதுதான் வழக... மேலும் பார்க்க

கம்பன் திருவிழாவில் தமிழக அமைச்சர்கள்... காரைக்குடி தமிழ்த்தாய் கோயிலில் தமிழ் விழா நடத்த கோரிக்கை!

தேவகோட்டை கம்பன் கழகம் சார்பில், கவிச்சக்கரவர்த்தி கம்பனின் புகழைப் போற்றும் வகையில் நடைபெற்று வரும் கம்பன் திருவிழாவின் இரண்டாம் நாள் நிகழ்ச்சி, நவம்பர் 19ஆம் தேதி தேவகோட்டையில் சிறப்பாக நடைபெற்றது.இ... மேலும் பார்க்க

தொடங்கிய இறுதி ஊர்வலம்: வி.எஸ் பாபு உடலை சுமந்து சென்ற முதல்வர் விஜய்!

கடந்த செப்.9 ஆம் தேதியன்று மூச்சுத்திணறல் காரணமாக தவெக கொளத்தூர் எம்.எல்.ஏ வி.எஸ் பாபு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். 70 நாட்களுக்கு மேலாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெ... மேலும் பார்க்க

`15 ஊழியர்கள் ராஜினாமா? ஆந்திராவுக்கு முதலீட்டு ரகசியங்கள் கசிந்ததா?' - Guidance Tamil Nadu விளக்கம்

தவெக ஆட்சி தொடங்கியதிலிருந்து தமிழ்நாட்டிற்கு வர வேண்டிய பல முதலீடுகள் ஆந்திராவிற்குச் செல்கின்றன என்கிற குற்றச்சாட்டு பரவலாக உள்ளது. இப்போது இதற்குத் தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்தைச் (Guidance... மேலும் பார்க்க