"வருண் சக்கரவர்த்தியை இந்தப் போட்டியில் பயன்படுத்தாதீங்க, ஏன்னா..!" - கம்பீருக்க...
உலகிலேயே மிகப்பெரிய கரப்பான் பூச்சி இதுதான்; இறக்கையின் அகலம் மட்டும் இவ்வளவா?
கரப்பான் பூச்சி என்றாலே பலருக்கு பயம் ஏற்படும். நம் வீடுகளில் சாதாரணமாகக் காணப்படும் கரப்பான் பூச்சிகள் சிறிய அளவில் இருப்பதே நமக்கு பயமாக இருக்கும்.
ஆனால் உள்ளங்கையையே மறைக்கும் அளவுக்கு ஒரு கரப்பான் பூச்சி இருந்தால் எப்படி இருக்கும்? அப்படி ஒரு ராட்சத கரப்பான் பூச்சி இனம் தென் அமெரிக்க காடுகளில் வசிக்கிறது. 'மெகலோபிளாட்டா லாங்கிபென்னிஸ்' என்று அழைக்கப்படும் இந்த இனம் தான் உலகின் மிகப்பெரிய கரப்பான் பூச்சி என்ற சாதனையை படைத்திருக்கிறது.

கின்னஸ் உலக சாதனை புத்தகத்தின்படி, உலகின் மிகப்பெரிய சிறகுகள் உள்ள கரப்பான் பூச்சி என்று 'மெகலோபிளாட்டா லாங்கிபென்னிஸ்' பெயர் பெற்றுள்ளது. பெரு, ஈக்வடார் மற்றும் பனாமா போன்ற வெப்பமண்டல மழைக்காடுகளில் இவை காணப்படுகின்றன.
இந்த கரப்பான் பூச்சியின் மாதிரி, சுமார் 9.7 செ.மீ (3.8 இன்ச்) நீளமும், 4.5 செ.மீ (1.75 இன்ச்) அகலமும் கொண்டுள்ளது. இதன் சிறகுகள் விரிந்த நிலையில் சுமார் 20 செ.மீ (8 இன்ச்) வரை இருக்குமாம்.
சாதாரணமாக நம் வீடுகளில் பார்க்கும் கரப்பான் பூச்சிகள் வெறும் 0.6 முதல் 7.6 செ.மீ வரை மட்டுமே வளரக்கூடியவை. அவற்றுடன் ஒப்பிடும்போது இது பெரிய அளவுதான்.
இந்த ராட்சத கரப்பான் பூச்சிகள் பொதுவாக இரவு நேரங்களில் சுறுசுறுப்பாக இயங்கக்கூடியவை என்றும் பகல் நேரங்களில் இவை காடுகளில் உள்ள மரங்கள் மற்றும் இலைகளுக்கு அடியில் ஓய்வெடுக்கின்றன என்றும் கூறப்பட்டுள்ளது.
சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், இந்த இனத்தைச் சேர்ந்த சில பூச்சிகள், தங்கள் வயிற்றுப்பகுதியைத் தேய்ப்பதன் மூலம் ஒருவித சத்தத்தை எழுப்புகின்றன. இந்தச் சத்தம் எதிரிகளிடமிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ளப் பயன்படுகிறது என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

















