செய்திகள் :

"கரூர் மாவட்டத்தில், 3,103.41 ஏக்கர் பரப்பளவில் சீமை கருவேல மரங்கள்!" - ஓய்வு பெற்ற நீதிபதி தகவல்

post image

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் இருக்கும் சிவாயம் ஊராட்சியில் உள்ள பெருமாள் குளத்தில் சீமை கருவேல மரங்களை அகற்றும் பணிகளை, ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி செல்வம் நேற்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது, செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

"சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின் அடிப்படையில், தமிழ்நாட்டில் சீமை கருவேல மரங்களை முற்றிலுமாக அகற்றுவதை கண்காணிக்கவும், ஆய்வு செய்யவும் சிறப்பு மேற்பார்வைக் குழு மற்றும் மாவட்ட அளவிலான கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதன்படி, கரூர் மாவட்டத்தில் மாவட்ட கனிமவள நிதியை பயன்படுத்தி, சுற்றுச்சூழல் மற்றும் நீர்நிலைகளை பாதுகாக்கும் வகையில், சீமை கருவேல மரங்களை இயந்திரங்கள் மூலம் அகற்றும் பணி நடக்கிறது. கரூர் மாவட்டத்தில், 3,103.41 ஏக்கர் பரப்பளவில் சீமை கருவேல மரங்கள் உள்ளன.

karuvela maram

இதுவரை, 547.21 ஏக்கரில் மரங்கள் அகற்றப்பட்டுள்ளன. 2,556.20 ஏக்கரில் உள்ள மரங்களை அகற்றும் பணி நடக்கிறது. நீர்வளத்துறை மூலம் அமராவதி, காவிரி, அரியாறு, நொய்யல் கீழ் பவானி, நங்காஞ்சியாறு, குடகனாறு உள்ளிட்ட ஆறுகளின் வடிநில பகுதிகளில் உள்ள ஏரி, கால்வாய், ஆறு மற்றும் மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி ஒன்றிய நீர்நிலைகளில் உள்ள மரங்களை அகற்றும் பணி நடக்கிறது. அந்த வகையில், தற்போது மருதுார் காவிரி ஆற்று பகுதி, சிவாயம் - பெருமாள்கோவில்பட்டி குளம், நல்லுார்- ஆட்டம்பட்டி குளம், கூடலுார் ஞானமுத்து உடையான் குளம், பண்ணப்பட்டி குளம், ரெங்கநாதபுரம் குளம், வீரராக்கியம் குளம், ஆண்டாங்கோவில் கிழக்கில் உள்ள அமராவதி ஆற்றுப் பகுதி மற்றும் அரவக்குறிச்சியில் உள்ள நங்காஞ்சியாறு உள்ளிட்ட பகுதிகளில் சீமை கருவேல மரங்களை அகற்றும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது" என்றார்.

ஈரோட்டில் நடைபெற்ற பனை கண்காட்சி... ஆர்வமுடன் கண்டு ரசித்த மக்கள்! Photo Album

ஈரோட்டில் பனைமரம் பொருட்கள் கண்காட்சிஈரோட்டில் பனைமரம் பொருட்கள் கண்காட்சிஈரோட்டில் பனைமரம் பொருட்கள் கண்காட்சிஈரோட்டில் பனைமரம் பொருட்கள் கண்காட்சிஈரோட்டில் பனைமரம் பொருட்கள் கண்காட்சிஈரோட்டில் பனைமர... மேலும் பார்க்க

மகாராஷ்டிரா: 60 ஆண்டுகளில் இல்லாத வறட்சி; 5 ஹெக்டேர் ஆரஞ்ச் மரங்களை வெட்டிய விவசாயிகள்!

மகாராஷ்டிராவில் இந்த ஆண்டு போதிய அளவு பருவமழை பெய்யவில்லை. இதனால் மாநிலத்தின் 75 சதவிகித பகுதிகளை அரசு வறட்சி பகுதியாக அறிவித்து இருக்கிறது. உடனடியாக விவசாயிகளுக்கு உதவ நிதியுதவி செய்ய வேண்டும் என்று ... மேலும் பார்க்க

பசுமை சந்தை...

விவசாய விளைபொருள்கள், கால்நடைகள், மீன்கள், பண்ணை உபகரணங்கள் போன்றவற்றை இங்கே நீங்கள் சந்தைப்படுத்தலாம். இயற்கை இடுபொருள்களான உரம், பூச்சிவிரட்டி தொடர்பான தகவல்கள் மற்றும் நிலம் விற்பது, வாங்குவது தொடர... மேலும் பார்க்க

புதர் மண்டிய வாய்க்கால்கள் தூய்மை; மழைநீருக்கு பாதை அமைக்கும் 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள்|Photos

மழைநீருக்கு பாதை அமைக்கும் 100 நாள் பணியாளர்கள்மழைநீருக்கு பாதை அமைக்கும் 100 நாள் பணியாளர்கள்மழைநீருக்கு பாதை அமைக்கும் 100 நாள் பணியாளர்கள்100 நாள் பணியாளர்கள்மழைநீருக்கு பாதை அமைக்கும் 100 நாள் பணி... மேலும் பார்க்க

பெரம்பலூரில் கடும் வறட்சி; 1000 ஏக்கர் மஞ்சள் பாதிப்பு; இழப்பீடு கேட்டு விவசாயிகள் கோரிக்கை

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம் அனுக்கூர், குடிகாடு, தொண்டப்பாடி, நெய்குப்பை, அன்னமங்கலம், எசனை, வி.ஆர்.எஸ்.எஸ்.புரம், வேப்பந்தட்டை வடக்கு, வேப்பந்தட்டை தெற்கு, பூலாம்பாடி உள்ளிட்ட 10-க்கும் ... மேலும் பார்க்க