செய்திகள் :

Jailer 2: "மோகன்லால் சாரின் காட்சிகளை சுருக்குவது தேவையற்றது!" - மோகன்லாலின் ஆடை வடிவமைப்பாளர்

post image

ரஜினிகாந்தின் 'ஜெயிலர் 2' திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. படத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமார், மோகன்லால், ஜாக்கி ஷெரஃப் உள்ளிட்ட சிலர் கேமியோ ரோலில் வருகிறார்கள்.

Jailer 2
Jailer 2

'ஜெயிலர் 2' படத்தில் மோகன்லாலின் காட்சிகள் சிலவற்றை நீக்கியிருப்பதாக மோகன்லாலின் ஆடை வடிவமைப்பாளர் ஜிஷாத் ஷாம்சுதீன் பதிவிட்டிருக்கிறார்.

அந்தப் பதிவில் அவர், "படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட காட்சிகளை வைத்து என் வேலையின் மீது எனக்கு முழு நம்பிக்கை இருந்தது. டிரெய்லரிலேயே மோகன்லால் சார் 2 வினாடிகள் மட்டுமே காட்சியளிக்கப்பட்டார் என்றாலும் நான் கவலைப்படவில்லை.

ஆனால், படம் வெளியான பிறகுதான் மோகன்லால் சாருக்காக நான் சிறப்பாக ஆடை வடிவமைத்திருந்த காட்சிகள் நீக்கப்பட்டிருக்கின்றன. அதுமட்டுமன்றி, டிரெய்லரில் வந்த அந்த ஒரு காட்சியும் படத்தில் ட்ரிம் செய்யப்பட்டுச் சுருக்கப்பட்டுவிட்டது.

சினிமாவில் என்னுடைய அனுபவத்தில் சொல்கிறேன், மோகன்லால் சார் போன்ற ஒரு மாபெரும் சூப்பர் ஸ்டாரின் காட்சிகளை இப்படி வெட்டிச் சுருக்குவது முற்றிலும் தேவையற்ற ஒன்று.

நமது சூப்பர் ஸ்டார் திரையில் இப்படிச் சுருக்கப்பட்டுவிட்டதைப் பார்க்கும்போது மனதிற்கு மிகவும் வேதனையாக இருக்கிறது. ஒருவேளை 'ஜெயிலர்' படத்தின் அடுத்த பாகம் எடுக்கப்பட்டால், அதில் நான் நிச்சயமாகப் பங்கெடுக்க மாட்டேன்.

என் வேலையை நம்பிய அனைவருக்கும் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். நான் எந்த லாபத்திற்காகவோ, கோடிகளுக்காகவோ, பிராண்டுகளுக்காகவோ அல்லது ஸ்டார்டமிற்காகவோ நிற்கவில்லை.

நான் மோகன்லால் சாருக்காகவும், அவருடைய ரசிகர்களுக்காகவும், சினிமா கலைக்காகவும் மட்டுமே நிற்கிறேன்." எனக் குறிப்பிட்டுப் பதிவிட்டிருக்கிறார்.

'பெத்லஹேம் குடும்ப யூனிட்' மூலம் டிரெண்டான பாடல் - மீண்டும் உயிர்பெற்ற 30 வருட பழைய சினிமா!

சமீபத்தில் கிரீஷ் ஏ.டி இயக்கத்தில் நிவின் பாலி, மமிதா பைஜூ நடிப்பில் வெளியாகி வசூலைக் குவித்தது 'பெத்லஹேம் குடும்ப யூனிட்' திரைப்படம். இப்படத்தில் 30 ஆண்டுகளுக்கு முன்பு கைவிடப்பட்ட 'அன்னா' என்கிற ஒரு... மேலும் பார்க்க

Dileep: "என் தரப்பு உண்மையை எடுத்துச் சொல்லக்கூட முடியாத ஒரு சூழ்நிலையில்..." - திலீப் ஓபன் டாக்

மலையாள நடிகர் திலீப், கத்தாரில் நடைபெற்ற 'திலீப் ஃபேன்ஸ் அசோசியேஷன்' அமைப்பின் சிறப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். Dileep's Neekam Filmகடந்த 10 ஆண்டுகளாகத் தான் அனுபவித்த விஷயங்கள் குறித்துப் பேசியி... மேலும் பார்க்க

பெத்லகேம் குடும்ப யூனிட்: ``ரூ300 கோடி வசூல்... அதில் பாதிகூட எங்களுக்கு கிடைக்காது" - பஹத் பாசில்

இயக்குநர் கிரிஷ் ஏடி இயக்கத்தில் நடிகர்கள் நிவின் பாலி - மமிதா பைஜூ ஆகியோரின் நடிப்பில் உருவான `பெத்லகேம் குடும்ப யூனிட்' படம், கடந்த ஆகஸ்ட் 21 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. நடிகர் பஹத் பாசில், ... மேலும் பார்க்க

பெத்லகேம் குடும்ப யூனிட்: "புதுமையானக் கதையை ரசிகர்கள் எப்போதும் கொண்டாடுவார்கள்.!"- பகத் பாசில்

'பிரேமலு' பட இயக்குநர் கிரிஷ் ஏ.டி இயக்கத்தில் வெளியானப் படம் 'பெத்லகேம் குடும்ப யூனிட்'.நிவின் பாலி, மமிதா பைஜூ நடித்த இந்தப் படம் நல்ல வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து தமிழிலும் டப் செய்யப்பட்டு வெளிய... மேலும் பார்க்க

உண்ணாவிரதம் இருந்து தொல்லை கொடுத்த சினிமா இயக்குநர்; வழக்கு தொடர்ந்த நடிகை மஞ்சு வாரியர்!

திரைப்பட இயக்குநர் சனல்குமார் சசிதரன் இயக்கிய 'கயற்றம்' சினிமாவில் நடிகை மஞ்சு வாரியர் கதாநாயகியாக நடித்திருந்தார். அப்படத்தின் படப்பிடிப்பிற்குப் பிறகு, தன்னை சனல்குமார் பின்தொடர்ந்து தொல்லை செய்வதாக... மேலும் பார்க்க

"அங்கு எல்லாமே கார்ப்பரேட் பாணியில் நடக்கிறது, ஆனால் மலையாள..!"- பாலிவுட் குறித்து பிரித்விராஜ்

சமீபத்தில் மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் பிரித்விராஜ் கலந்துகொண்டிருக்கிறார். அப்போது அவரிடம் பாலிவுட் திரையுலகம் மலையாள திரையுலகத்திலிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்கள் என்னென்ன? என... மேலும் பார்க்க