செய்திகள் :

டிரைவராக கணவர், கண்டக்டராக மனைவி, பயணிகளாக குழந்தைகள்; வறுமையில் போராடும் கேரளக் குடும்பம்

post image

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் கடக்கல்லைச் சேர்ந்தவர் மனு. இவர் கடந்த 23 ஆண்டுகளாக ஓட்டுநராகப் பணியாற்றி வருகிறார். பத்து ஆண்டுகளுக்கு முன்பு பாலக்காட்டில் டாரஸ் லாரி ஓட்டுநராக இருந்தபோது, தீபிகா என்ற பெண்ணைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இரண்டு குழந்தைகள் பிறந்த பின்னரும், தீபிகாவின் குடும்பத்தினர் இன்றளவும் இவர்களுடன் பிணக்கத்திலேயே உள்ளனர். தற்போது அல் அர்ஜுன் என்ற தனியார் பேருந்து நிறுவனத்தில் ஓட்டுநராக உள்ளார் மனு. மனுவின் தாயார் கோமளகுமாரி நான்கு ஆண்டுகளுக்கு முன்பு காலமானார். உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள இவரது தந்தை பாலச்சந்திரன் பிள்ளை ஆயூரில் வசித்து வருகிறார்.

இதற்கிடையில், மனு கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டார். குடும்பச் செலவுக்கே வழியின்றி மிகுந்த சிரமத்திற்கு ஆளான நிலையில், கணவருக்குத் துணையாக ஓராண்டுக்கு முன்பு தீபிகாவும் அதே 'அல் அர்ஜுன்' பேருந்தில் கண்டக்டராகப் பணியில் சேர்ந்தார். மனுவின் வீட்டில் நோய்வாய்ப்பட்ட தந்தையால் இவர்களுக்கு உதவ முடியாத நிலை.

தீபிகாவின் பெற்றோரும் இவர்களைக் கண்டுகொள்வதில்லை. மனுவும், தீபிகாவும் பேருந்தில் வேலைக்குச் சென்றுவிடுவதால் விடுமுறை நாட்களில் குழந்தைகளைக் கவனிக்க ஆள் இல்லாத நிலை. எனவே, பள்ளி விடுமுறை நாள்களில் குழந்தைகளையும் தங்களுடன் பேருந்தில் அழைத்துச் செல்கின்றனர் இந்தத் தம்பதியினர்.

மாதிரி படம்
பேருந்து நிலையம்

இதுகுறித்து தீபிகா கூறுகையில், "என் காதல் திருமணத்திற்குப் பிறகு என் வீட்டார் எங்களுடன் பேசுவதில்லை. மனுவின் அம்மாவும் இறந்துவிட்டார். அப்பாவும் உடல்நலக் குறைவால் ஆயூரில் இருக்கிறார். இதற்கிடையில் மனுவுக்குக் கல்லீரல் நோய் பாதிப்பு ஏற்பட்டதால், குடும்பச் செலவுக்கே மிகவும் கஷ்டப்பட வேண்டிய சூழல் உருவானது.

கணவருக்குத் தோள் கொடுக்கவும், குடும்பத்தைக் காப்பாற்றவும் வேறு வழியின்றி ஓராண்டுக்கு முன்பு நானும் இதே பேருந்தில் கண்டக்டராகப் பணியில் சேர்ந்தேன். விடுமுறை நாள்களில் பிள்ளைகளைப் பார்த்துக்கொள்ள யாரும் இல்லாததால், குழந்தைகளை எங்களுடனேயே பேருந்தில் அழைத்துச் செல்கிறோம்.

வீட்டிலிருந்து கிளம்பும்போதே மூன்றாம் வகுப்பு படிக்கும் விநாயக்கும், இரண்டாம் வகுப்பு படிக்கும் வைஷ்ணவியும் தங்களின் பாடப் புத்தகங்களையும் மறக்காமல் எடுத்துக்கொண்டு எங்களுடன் வந்துவிடுவார்கள்.

பேருந்து ஓடிக்கொண்டிருக்கும்போது கூட்டம் குறையும் நேரங்களில் இருக்கையில் அமர்ந்து படிப்பதும், பேருந்து நிலையங்களில் வண்டி நிறுத்தப்படும்போது வீட்டுப்பாடங்களை எழுதுவதுமாக அவர்களின் விடுமுறை நாட்கள் கழிகின்றன.

பேருந்தில் பயணிக்கும் மனு, தீபிகா மற்றும் குழந்தைகள்
பேருந்தில் பயணிக்கும் மனு, தீபிகா மற்றும் குழந்தைகள்

மகன் விநாயக்கிற்கு ஆஸ்துமா பாதிப்பும் இருப்பதால், எங்கள் கண்முன்னே இருப்பதுதான் எங்களுக்குப் பாதுகாப்பு. கணவர் மனு, மகன் விநாயக் ஆகிய இருவரின் மருத்துவச் சிகிச்சைக்காகவும் மாதந்தோறும் பெரிய தொகை செலவாகிறது.

கடக்கல்லில் இருக்கும் இவர்களின் பூர்வீக வீட்டின் ஒரு பகுதி, கடந்த மழையின்போது மரம் விழுந்து சேதமடைந்தது. இதனால், தற்போது வாடகை வீட்டில் வசித்து வருகிறோம். அரசின் 'லைஃப்' வீட்டுவசதித் திட்டத்தில் விண்ணப்பித்துவிட்டு, காத்திருக்கிறோம்" என்றார்.

``கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ.வை கைது செய்ய வேண்டிய அவசியமில்லை.!" - கார்த்தி சிதம்பரம்

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே கட்டிக்குளம் அரசு உயர்நிலைப் பள்ளியில் எம்.பி. தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.53.50 லட்சத்தில் கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்டப்பட்டது. இதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது.... மேலும் பார்க்க

உத்தரகாண்ட் தேர்தல்: "5.2 லட்சம் பெண்களுக்குத் தலா ரூ.20 ஆயிரம்" - பாஜக அரசு அறிவிப்பு

பீகார் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு பெண்களுக்கு மாநில அரசு 10 ஆயிரம் நிதியுதவி திட்டத்தை அறிவித்தது. இதே போன்று ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா மாநிலங்களில் பெண்களுக்கு மாத அடிப்படையில் அதி... மேலும் பார்க்க

திருப்பரங்குன்றம்: "இவை தீபத் திருவிழா விவகாரத்தையும் தாண்டியவை" - தவெக அரசைச் சாடும் தேஜஸ்வி சூர்யா

திருப்பரங்குன்றம் மலை மேல் உள்ள தூணில் தீபம் ஏற்றப்படாதது குறித்து பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் தேஜஸ்வி சூர்யா தனது எக்ஸ் பக்கத்தில் கண்டனங்களைத் தெரிவித்துள்ளார்.தேஜஸ்வி சூர்யா தனது பதிவில், “கார்த்திக... மேலும் பார்க்க

திருவண்ணாமலை: "என் புகைப்படத்தை ஏந்திச் சென்ற பக்தரின் காலில் விழுந்து வணங்குகிறேன்" - அண்ணாமலை

நேற்று கார்த்திகை தீபத்தை முன்னிட்டு திருவண்ணாமலையில் கிரிவலம் சென்ற பக்தர் ஒருவர் ‘வீ தி லீடர்ஸ்’ அமைப்பின் நிறுவனர் அண்ணாமலையின் புகைப்படத்தை கையில் ஏந்திச் சென்றார்.இது குறித்து அண்ணாமலை தனது எக்ஸ்... மேலும் பார்க்க

"Ukraine நலனைப் பலி கொடுத்து போர்நிறுத்தம் கூடாது" - ரஷ்யாவுக்கு எதிரான நடவடிக்கை குறித்து ஜெலன்ஸ்கி

ரஷ்யா - உக்ரைன் போர் நேற்றே முடிந்திருக்க வேண்டும் என்றும், இந்தப் போர்நிறுத்தம் குறித்தும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி சமீபத்தில் கொடுத்துள்ள பேட்டியில் பேசியிருப்பதாவது..."தற்போதைய பேச்சுவார்த்தைக் குழ... மேலும் பார்க்க