``கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ.வை கைது செய்ய வேண்டிய அவசியமில்லை.!" - கார்த்தி சிதம்...
35% மேல் நஷ்டம் தந்த இன்டர்நேஷனல் ஃபண்டுகள்! நீங்களும் இவற்றில் முதலீடு செய்திருக்கிறீர்களா?
கடந்த ஓராண்டு காலமாக நல்ல ஏற்றத்தில் இருந்தன இன்டர்நேஷனல் மியூச்சுவல் ஃபண்டுகள். ஆனால், கடந்த ஒரு மாத காலமாக அமெரிக்கப் பங்குச் சந்தை இறக்கம் அடைந்ததைத் தொடர்ந்து, இன்டர்நேஷனல் மியூச்சுவல் ஃபண்டுகளில் சில 35% மேல் நஷ்டம் தந்துள்ளன.

நிப்பான் இந்தியா தைவான் ஈக்விட்டி ஃபண்ட் நிறுவனம் 38% வரை விலை இறக்கம் கண்டு நஷ்டத்தைத் தந்துள்ளது. என்வீடியா நிறுவனர் தைவானைச் சேர்ந்தவர் என்பதால், தைவானில் செமி கன்டக்டர் உள்பட பல நிறுவனங்கள் அதிவேக வளர்ச்சி கண்டு வந்தன. ஆனால், என்வீடியா நிறுவனம் சர்ச்சையில் சிக்கியதால்,தைவான் பங்குச் சந்தை குறிப்பிடத்தகுந்த அளவு இறக்கம் கண்டுள்ளது. இதனால்தான் இந்த ஃபண்டுகளின் விலையும் குறைந்து நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
அடுத்து, ஹெச்.எஸ்.பி.சி நிறுவனத்தின் பிரேசில் ஃபண்ட் 30% வரை இறக்கம் கண்டுள்ளது. ஆக்சிஸ் கிரேட்டர் சைனா ஈக்விட்டி ஃபண்ட் ஆஃப் ஃபண்ட் திட்டம் 19% இறக்கம் கண்டுள்ளது. மிரே அசெட் ஹேங்க் செங் டெக் இ.டி.எஃப் ஃபண்ட் ஆஃப் ஃபண்ட் திட்டம் 6% நஷ்டத்தையும், மோதிலால் ஆஸ்வால் நாஸ்டாக் 100 ஃபண்ட் ஆஃப் ஃபண்ட் திட்டம் 4% கடந்த ஒரு மாத காலத்தில் தந்துள்ளது.
இன்டர்நேஷனல் ஃபண்டுகளின் மதிப்பீடு மிக அதிகமாக உள்ளது. இதற்கு மேல் இதில் முதலீடு செய்தால், எந்த நேரத்திலும் சந்தை சரிந்து முதலீட்டாளர்களுக்கு நஷ்டம் வர வாய்ப்பு இருக்கிறது என்பதால், இந்த ஃபண்டுகளில் புதிதாக முதலீடு செய்ய ஆறு மாதங்களுக்கு முன்பே தடை விதித்தது செபி. இந்தத் தடை வந்தபிறகும் அமெரிக்க மற்றும் தைவான் சந்தை மேலே செல்வதைப் பார்த்து, பல முதலீட்டாளர்கள் நல்ல வாய்ப்பு போச்சே என்று வருத்தப்பட்டனர்.
ஆனால், செபியின் இந்த எச்சரிக்கைக்குப் பிறகு இன்டர்நேஷனல் ஃபண்டுகளில் செய்திருந்த முதலீட்டைக் குறைத்துக்கொண்டவர்கள் அல்லது முதலீட்டை முற்றிலுமாக விற்றுவிட்டு வெளியே வந்தவர்கள் தப்பித்தார்கள். அப்படிச் செய்யாத முதலீட்டாளர்கள் இப்போது 35% வரை நஷ்டம் கண்டிருக்கிறார்கள்.

அமெரிக்கப் பங்குச் சந்தையில் இப்போது முதலீடு செய்வதற்கான வாய்ப்பு உருவாகி இருக்கும் நிலையில், டாலர் மூலம் முதலீடு செய்யும் கிஃப்ட் சிட்டி ஃபண்டுகள் மூலம் முதலீடு செய்யலாம். இதன் மூலம் அமெரிக்கப் பங்குச் சந்தையில் முதலீடு செய்ய தடை எதுவும் இல்லை. அமெரிக்க டாலரில் முதலீடு செய்து அமெரிக்க டாலராகவே முதலீட்டைத் திரும்பப் பெறுவதுதான் கிஃப்ட் சிட்டி ஃபண்ட் திட்டங்களின் தனிச் சிறப்பாகும்.
பொதுவாக, ஒரு முதலீட்டாளர் இன்டர்நேஷனல் ஃபண்டுகளில் முதலீடு செய்ய வேண்டும் எனில், முதலீட்டுப் பரவலாக்கம் என்கிற நோக்கத்தில்தான் முதலீடு செய்ய வேண்டும். ஒரு முதலீட்டாளர் ஒரு லட்சம் ரூபாயை இந்தியப் பங்குச் சந்தையில் முதலீடு செய்யப் போகிறார் எனில், அதில் 10% - 20% மட்டுமே இன்டர்நேஷனல் ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம். அதிகமான முதலீட்டை இன்டர்நேஷனல் ஃபண்டுகளில் செய்தால், மிக அதிகமான நஷ்டத்தை அடைய வேண்டி இருக்கும்.
இந்த இன்டர்நேஷனல் ஃபண்டுகள் உங்களிடம் இருக்கிறதா என்பதை அவசியம் பாருங்கள்!
மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய வேண்டுமா?

மியூச்சுவல் ஃபண்டில் SIP மற்றும் Lump sum முதலீட்டை ஆரம்பிக்க நினைப்பவர்கள் லாபம் நிறுவனத்தின் பின்வரும் தொலைபேசி எண்களை அழைக்கலாம்!
ஏ.ஆர்.குமார் - 89259 44568
சபரிநாதன் - 89259 44569
தங்கலட்சுமி - 95007 77894
வெளிநாடு மற்றும் இந்தியாவில் வசிப்பவர்கள் தங்கள் முதலீட்டைச் சரியானபடி அமைத்துக்கொள்ள ஆலோசனை பெற, பின்வரும் லிங்கினைக் கிளிக் செய்து, தங்கள் பெயரைப் பதிவு செய்துகொள்ளுங்கள்...
வெளிநாட்டில் வசிப்போருக்கு: https://calendly.com/calendar-labham/schedule-call-with-labham-nri
இந்தியாவில் வசிப்போருக்கு: https://calendly.com/calendar-labham/schedule-call-with-labham-vikatan-com
Labham Youtube Channel: www.youtube.com/@labham_money
Labham Website: https://labham.money/tamil
முதலீட்டாளர்களின் கவனத்துக்கு:
மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை. இதில் முதலீடு செய்யும்முன் திட்டம் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் கவனமாகப் படித்துப் பார்த்து, சுயமாக முடிவெடுக்க வேண்டுகிறோம்!
Vikatan Wealth Pvt Ltd - ARN - 310095


















