செய்திகள் :

"டெல்லியைப் பார்த்தீர்களா.... மோடியின் கேம் ஓவர்!" - சென்னையில் ராகுல் காந்தி ஆவேசம்

post image

இன்று சென்னை வந்திருந்த மக்களவை எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்தி காங்கிரஸ் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 'மாணவர்களின் குரல்' நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தார்.

கல்லூரி மாணவர்கள் மத்தியில் பேசியவர் 'மோடியின் கேம் ஓவர்' எனப் பாஜகவைக் கடுமையாக விமர்சித்திருந்தார்.

மாணவர்களுடன் ராகுல்
மாணவர்களுடன் ராகுல்

ராகுல் பேசியதாவது, “ஒவ்வொரு முறை தமிழகத்துக்கு வரும் போதும் உங்களிடமிருந்து புதிதாக ஒன்றைக் கற்றுச் செல்கிறேன். விஷயங்களைக் கற்றுக்கொள்வதற்கான ஆர்வமும், கேள்வி கேட்கும் ஞானமும்தான் மாணவர்களின் பலம். கேள்வி கேட்காமல் ஒரு நல்ல எதிர்காலத்தை உருவாக்க முடியாது.

மோடி அரசு தமிழ் கலாசாரத்தின் மீதும் வரலாற்றின் மீதும் பெரிய தாக்குதலை நடத்தி வருகிறது. மோடியும் அமித் ஷாவும் புதிய கல்விக் கொள்கையின் வழியாக மொழியை உங்கள் மீது திணிக்க நினைக்கின்றனர்.

தமிழ்நாட்டின் 70 சதவிகித மாநிலப் பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்கள் நியமிக்கப்படவில்லை. ஆளுநர் மூலம் மோடியும் அமித் ஷாவும் ஆர்.எஸ்.எஸ். ஆட்களை பல்கலைக்கழகங்களுக்குள் நுழைக்க நினைக்கின்றனர்.

மோடி, ஜனநாயகத்தின் மீது நேரடித் தாக்குதல் நடத்துகிறார். மக்களின் குரலை ஒடுக்குகிறார். டெல்லியில் இன்று என்ன நடக்கிறது என்பதைப் பார்த்திருப்பீர்கள். பாஜக தங்களின் குண்டர்களைக் களமிறக்கி மாணவர்களைத் தாக்குகிறது.

Ban Neet பதாகையுடன் ராகுல்
Ban Neet பதாகையுடன் ராகுல்

15 ஆண்டுகளாக நடந்துவரும் டிராமா முடிந்துவிட்டது. அவருடைய கேம் ஓவர் என்பது மோடிக்கு இன்னும் புரியவில்லை” என்றார்.

நிகழ்வில் நீட் அனிதாவின் அண்ணன் மணிரத்னமும் கலந்துகொண்டு ராகுலுடன் உரையாடினார். அப்போது பேசிய ராகுல் காந்தி, ''நீட் தேர்வை ரத்து செய்ய 100% உறுதுணையாக நிற்பேன்'' எனக் கூறினார். மேலும், மணிரத்னம் நடத்தி வரும் Ban Neet கையெழுத்து இயக்கத்துக்கு ஆதரவு தெரிவித்து கையெழுத்தும் இட்டார்.

இடைத்தேர்தல்: எடப்பாடிக்கு எதிராக மீண்டும் போர்க்கொடி... எஸ்.பி.வேலுமணி அணியின் மெகா திட்டம்

தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தல் முடிவுகள் அ.தி.மு.கவுக்குள் மீண்டும் ஒரு கலகத்தை உண்டாக்கியிருக்கிறது. கடந்த மே மாதத்தில், பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக உருவான சி.வி.சண்முகம், வேலும... மேலும் பார்க்க

Delhi Protest: அபிஜித் தீப்கேவின் பாட்டி காலமாகிவிட்டாரா? டெல்லி காவல்துறை சொல்வது என்ன?

இந்தியத் தேர்தல் ஆணையத்தின் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்பதை வலியுறுத்தி காக்ரோச் ஜனதா கட்சி மற்றும் மாணவர் அமைப்புகள் இன்று டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த அழைப்ப... மேலும் பார்க்க

தேர்தல் ஆணையம் Vs காங்கிரஸ்: 'ஜனநாயகக் காவலா? அரசியல் லாபத்திற்கா?' - ஓர் அலசல்

SIR விவகாரப் போராட்டம்வாக்காளர் சிறப்பு தீவிரத் திருத்தம் (SIR) விவகாரத்தில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக நாடு தழுவிய போராட்டங்கள் வலுத்து வருகின்றன. ஒருபுறம் நீட் தேர்வு விவகாரத்தி... மேலும் பார்க்க

டெல்லி: "எங்க கூட்டிட்டு போறாங்கன்னு தெரியல" - போலீஸ் ஜீப்பில் இருந்தபடி வீடியோ வெளியிட்ட CPM MP

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக டெல்லி ஜந்தர் மந்தரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஎம்) தலைவர்கள் போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்ட எம்.பி ஜான் பிரிட்டாஸ் , கேரள முன்ன... மேலும் பார்க்க

'வறட்சி, நிதி பற்றாக்குறை' - மாணவர்களுக்கு சம்பளப் பணத்தில் மதிய உணவளிக்கும் மகாராஷ்டிரா ஆசிரியர்கள்

மகாராஷ்டிராவில் இந்த ஆண்டு 75 சதவீதத்திற்கும் அதிகமான பகுதிகளை மாநில அரசு வறட்சி பகுதியாக அறிவித்து இருக்கிறது. வறட்சி பாதித்த பகுதிகளை மத்தியக் குழு ஆய்வு செய்து வருகிறது. கிராமங்களில் மாணவர்கள் மதிய... மேலும் பார்க்க

"கடந்த திமுக ஆட்சியில் ஸ்டாலின் பாஜகவை எதிர்த்து பேசியிருக்கிறாரா?" - அமைச்சர் நிர்மல்குமார்

மதுரையில் அமைச்சர் நிர்மல்குமார் செய்தியாளர்களைச் சந்தித்து பேசும் போது, "கடந்த 5 வருடங்களில் ஸ்டாலினும், உதயநிதியும் ஒரு நாளாவது பாஜகவையோ இல்லை மோடியை எதிர்த்தோ பேசியிருக்கிறார்களா? அவர்கள் எப்போது ப... மேலும் பார்க்க