"தமிழ்நாட்டில் ஒரு கோடி வாக்காளர்களின் உரிமை பறிபோகும் நிலை" - மக்களவையில் திரும...
'தி காட்பாதர்' முதல் 'பாட்ஷா' வரை! - இந்தாண்டு சென்னை திரைப்பட விழாவில் திரையிடப்பட உள்ள படங்கள்
சென்னை சர்வதேச திரைப்பட விழா நாளை முதல் டிசம்பர் 18-ம் தேதி வரை நடைபெறவிருக்கிறது.
இந்திய மொழி திரைப்படங்கள் உட்பட பல்வேறு மொழி திரைப்படங்களும் இந்தத் திரைப்பட விழாவில் திரையிடப்படவுள்ளன.
அத்தோடு இந்தாண்டு சில கல்ட் கிளாசிக் உலக சினிமாக்களும் திரையிடப்படவுள்ளன.

1962-ம் ஆண்டு வெளியான 'லாரன்ஸ் ஆஃப் அரேபியா', 1972-ல் வெளியான 'தி காட்ஃபாதர்', மம்மூட்டியின் 'ஒரு வடக்கன் வீரகதா', ஜி. அரவிந்தனனின் 'வாஸ்துஹாரா', அடூர் கோபாலகிருஷ்ணனின் 'விதேயன்', கே.ஜி ஜார்ஜின் 'எவனிக்கா' போன்ற கிளாசிக் திரைப்படங்கள் இதில் திரையிடப்பட உள்ளன.
நடிகர் ரஜினிகாந்த் சினிமாவில் 50 ஆண்டுகள் நிறைவு செய்திருப்பதைக் கொண்டாடும் விதமாக அவருடைய 'பாட்ஷா' படமும் திரையிடப்பட இருக்கிறது.
அடுத்தாண்டுக்கான ஆஸ்கர் விருதுக்கு நாமினேட் செய்யப்பட்டிருக்கும் 'யங் மதர்ஸ் (Young Mothers)', 'தி திங்ஸ் யூ கில் (The Things You Kill)', 'எ போயட் (A Poet)', '100 லிட்டர்ஸ் ஆஃப் கோல்ட் (100 Liters of Gold)', 'இட் வாஸ் ஜஸ்ட் அன் ஆக்ஸிடென்ட் (It Was Just an Accident)', 'பானாப்டிகான் (Panopticon)', 'சவுண்ட் ஆஃப் ஃபாலிங் (Sound of Falling)', 'தி லவ் தட் ரிமெய்ன்ஸ் (The Love That Remains)', 'ஆல் தட்ஸ் லெஃப்ட் ஆஃப் யூ (All That's Left of You)', 'ஒப்ராஸ் தி டவர் ஆஃப் ஸ்ட்ரெங்த் (Obraz The Tower of Strength)', 'சென்டிமென்டல் வேல்யூ (Sentimental Value)', 'மாகெல்லன் (Magellan)', 'சிராட் (Sirät)', 'ஈகிள்ஸ் ஆஃப் தி ரிபப்ளிக் (Eagles of the Republic)' ஆகிய படங்களும் கான் திரைப்பட விழாவில் 'பால்ம் டி ஓர்' விருது வென்ற ஈரானிய சினிமா இயக்குநர் ஜாஃபர் பனாஹியின் 'இட் வாஸ் ஜஸ்ட் அன் ஆக்ஸிடென்ட் (It Was Just an Accident)' உள்ளிட்ட பல படங்கள் இங்கு திரையிடப்பட இருக்கின்றன.

தமிழிலிருந்து இந்தாண்டு பல திரைப்படங்கள் திரையிடத் தேர்வு செய்யப்பட்டிருக்கின்றன. '3BHK', 'பறந்து போ', 'அலங்கு', 'காதல் என்பது பொதுவுடைமை', 'மெட்ராஸ் மேட்னி', 'மருதம்', 'டூரிஸ்ட் ஃபேமிலி', 'பைசன்', திரு. மாணிக்கம்' உள்ளிட்ட பல திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளன.
இதில் எந்தப் படத்தைக் காண நீங்கள் ஆவலுடன் காத்திருக்கிறீர்கள்?



















