செய்திகள் :

திருப்பூர்: மதநல்லிணக்கத்தைப் போற்றும் `தர்கா - கார்த்திகை தீப' வழிபாடு!

post image

திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான பிரச்னை எழுந்துள்ள நிலையில், மதநல்லிணக்கத்தைப் போற்றும் வகையில், திருப்பூர் அருகே உள்ள ஒரு தர்காவில் கார்த்திகை தீபம் ஏற்றி வழிபாடு நடைபெற்று வருவது ஆச்சர்யத்தை அளித்துள்ளது. திருப்பூர் மாவட்டம், அவிநாசி அருகே கானூர் ஊராட்சி உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள தக்னி சுன்னத் ஜமாத் மஸ்ஜித் முஹம்மத் ஷா வலி தர்கா மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்த தர்கா தமிழ்நாடு வஃக்பு வாரியத்தின்கீழ் செயல்பட்டு வருகிறது. இங்கு ஆண்டுதோறும் சந்தனக்கூடு உருஷ் விழா மிகவும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த சந்தனக்கூடு உருஷ் விழாவில் சென்னை, கர்நாடக மாநிலம் மைசூர், கோவை, திருப்பூர், ஈரோடு, சத்தியமங்கலம் மேட்டுப்பாளையம் ஆகிய பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கானோர் வருகை தந்து தொழுகையில் ஈடுபடுவது வழக்கம். அதுமட்டுமன்றி கானூர் சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்த மக்கள் மதபேதமின்றி இந்த தர்காவுக்குச் சென்று வழிபடுவது வழக்கம். இந்நிலையில், இந்த தர்காவில் மதநல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில், கார்த்திகை தீபம் ஏற்றி வழிபட்ட நெகிழ்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது.

கார்த்திகை தீபம்

இது குறித்து தர்கா நிர்வாகிகள் கூறுகையில், "தொழில் விருத்தி, திருமணம், குழந்தை பாக்கியம் என எந்தவொரு வேண்டுதல் வைத்தாலும் நிறைவேறுவதால் இந்த தர்காவிற்கு மத பேதமின்றி அனைத்து தரப்பு மக்களும் இங்கு வந்து வழிபடுகின்றனர். மேலும், கார்த்திகை தீபத்தின்போது இப்பகுதியைச் சேர்ந்த மக்கள் இங்கு வந்து கார்த்திகை தீபம் ஏற்றுவது ஆண்டுதோறும் வழக்கம். மத நல்லிணக்கத்துக்கு உதாரணமாக இந்த தர்கா விளங்குகிறது. ஆண்டுதோறும் நடைபெறும் சந்தனக்கூடு உரூஸ் விழாவில் அனைத்து தரப்பு மக்களும் வருகை தந்து வழிபட்டு செல்கின்றனர். கார்த்திகை தீப திருநாளை ஒட்டி புதன்கிழமை மாலை விளக்கேற்றப்பட்டது. தொடர்ந்து வியாழக்கிழமையும், வெள்ளிக்கிழமையும் தீபம் ஏற்றப்படும்" என்றனர். தர்காவில் ஏற்றப்பட்ட கார்த்திகை தீபத்தை கிராம மக்கள் ஏராளமானோர் வழிபாடு நடத்திச் சென்றனர்.

திருவண்ணாமலை: அதிகாலை ஏற்றிய பரணி தீபம்; மாலை மலை உச்சியில் மகாதீபம்!

திருக்கார்த்திகை தீபம் என்றாலே திருவண்ணாமலைதான் நம் நினைவுக்கு வரும். நினைத்தாலே முக்தி தரும் இந்த அற்புதமான தலத்தில் ஏற்றப்படும் பரணி தீபம் மற்றும் மகாதீபம் ஆகியவற்றைக் காண லட்சக்கணக்கில் பக்தர்கள் த... மேலும் பார்க்க

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஆண்டாள் கோயிலில் கைசிக ஏகாதசி சிறப்பு வைபவம்; தமிழக, கேரள பக்தர்கள் தரிசனம்

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் 108 வைணவ திவ்ய தேசங்களில் மிகவும் சிறப்புப் பெற்ற திருத்தலமாகும். இது பழமையானதும், ஆழ்வார்களுள் பெரியாழ்வார் மற்றும் ஆண்டாள் அவதரித்த திருத்தலமும் ஆகும். தமிழக அ... மேலும் பார்க்க

திருப்பரங்குன்றம்: `மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றலாம்' - உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

திருப்பரங்குன்றம் மலை உச்சியிலுள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதிக்க வேண்டும் என்று பல்வேறு அமைப்புகள் தரப்பில் நீண்டகாலமாக வலியுறுத்தி வந்த நிலையில், அது குறித்தான வழக்கில் 'மலை உச்சியில் க... மேலும் பார்க்க

திருவண்ணாமலை மகா தீபம்: `தளர்வான கற்பாறைகளால் ஆபத்து' - பக்தர்கள் மலை ஏறத் தடை!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், புகழ்பெற்ற திருக்கார்த்திகை தீபத்திருவிழா நவம்பர் 24-ம் தேதி, கொடியேற்றத்துடன் தொடங்கி வெகுவிமரிசையாக நடைபெற்று வருகிறது. தீபத்திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, டிசம்ப... மேலும் பார்க்க

சபரிமலை: மகரவிளக்கு பூஜையை ஒட்டி எரியும் ஆழி குண்டம்; இருமுடி அவிழ்க்கும் பக்தர்கள் | Photo Album

சபரிமலை ஐயப்ப சுவாமி கோயிலில் மண்டல மகரவிளக்கு பூஜைகளை ஒட்டி கொழுந்துவிட்டு எரியும் ஆழி குண்டம். இருமுடி அவிழ்க்கும் பக்தர்கள்.சபரிமலை ஐயப்பன் கோயில்சபரிமலை ஆழி குண்டம்சன்னிதானத்தில் நமஸ்காரம் செய்யும... மேலும் பார்க்க

திருவண்ணாமலையில் ராசி தீப வழிபாடு; நீண்ட ஆயுள்; நீங்காத ஆரோக்கியம் செல்வம் தரும்; ஏன் தெரியுமா?

திருவண்ணாமலையில் ராசி தீப வழிபாடு! நீண்ட ஆயுள்; நீங்காத ஆரோக்கியம் செல்வம் தரும்! ஏன் தெரியுமா! தீப நாளில் திருவண்ணாமலையில் உங்களால் விளக்கேற்றி வழிபட முடியவில்லை என்று வருந்துபவர்களுக்கான வாய்ப்பு இத... மேலும் பார்க்க