`உங்க தம்பி கமல்சார்கூட இருக்காரே பரவால்லயா'ன்னு ஆனந்த் கேட்டார் - தவெகவில் சேர்...
திருமணத்துக்குப் பிறகு விந்தணுக்கள் வரவில்லையா? - காமத்துக்கு மரியாதை 269
திருமணத்துக்கு முன்னர் சுய இன்பம் செய்திருப்பார்கள். அப்போது விந்தணுக்கள் வெளியேறி இருக்கும். ஆனால், திருமணமான பிறகு, மனைவியுடன் உறவுக்கு முயலும்போது விந்தணுக்கள் வராது. இதற்கான காரணங்கள் என்னென்ன, தீர்வுகள் இருக்கின்றனவா..? சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த செக்ஸாலஜிஸ்ட் காமராஜ்.
உடனடியாக பாலியல் மருத்துவரை சந்திக்க வேண்டுமா?

''இப்படி திடீரென திருமணத்துக்குப் பிறகு விந்தணுக்கள் வரவில்லை என்றால், சம்பந்தப்பட்ட ஆணுக்கு விறைப்புத்தன்மையில் ஆரம்பித்து ஆர்கசம் வரைக்கும் எல்லாவற்றிலும் குழப்பம் ஏற்பட்டு விடும். இந்தப் பிரச்னையை உடனடியாக ஒரு பாலியல் மருத்துவரை சந்தித்து சரி செய்ய வேண்டும். இல்லாவிட்டால், பெரும் சிக்கலாகி விடும். ஒன்று விறைப்புத்தன்மையிலேயே சிக்கல் வரலாம். அல்லது விறைப்புத்தன்மை வந்தாலும், விந்தணுக்கள் வெளியேறாது.
விருப்பமில்லாத திருமணங்களில்...

விருப்பமில்லாத திருமணங்களில், மனம் தொடர்பான பிரச்னை காரணமாக விந்தணுக்கள் வெளியேறாமல் இருக்கலாம். இவர்களிடம் பேசி புரிய வைத்து பிரச்னையை சரி செய்துவிடலாம்.
சில மருந்துகள் விந்தணுக்களை வெளியேற்றுவதில் சிக்கலை ஏற்படுத்தும். அதைப்பற்றி தெரிந்துகொண்டு, அதைப் பரிந்துரைத்த மருத்துவருடன் பேசி மருந்துகளை மாற்றுவோம் அல்லது டோசேஜை குறைப்போம்.
மருந்துகள் மூலம் விந்தணுக்களை வெளியேற்றலாம்!

சிலருக்கு மருந்துகள் கொடுப்பதன் மூலம், விந்தணுக்களை வெளியேற்ற வைக்க முடியும்.
சில நேரம், பாலியல் படங்களைப் பார்த்துக்கொண்டு சுய இன்பம் செய்யலாம் அல்லது செக்ஸ் செய்யலாம். இப்படி செய்யும் போது சிலருக்கு விந்தணுக்கள் வெளியேறி விடும்.
குதித்துவிட்டு பிறகு உறவுகொள்ளலாம்!

இன்னும் சிலர், செக்ஸுக்கு முன்னர் ஜாகிங் செய்வதுபோல சிறிது நேரம் குதித்துவிட்டு, மார்பு லேசாக படபடக்க ஆரம்பிக்கையில் உறவு கொள்ளலாம். இப்படி செய்தாலும், விந்தணுக்கள் வந்துவிடும்.
செக்ஸ் பிரச்னைகளுக்கு இன்றைக்கு தீர்வுகள் இருக்கின்றன!
இதிலும் குணமடையாதவர்கள், இதற்கென இருக்கிற வைப்ரேட்டர் மூலம் ஆணுறுப்பைத் தூண்டி விந்து வெளியேற்றலாம். இதிலும் சரியாகவில்லை என்றால், எலக்ட்ரோ எஜாகுலேட்டர் மூலம் விந்தணுக்களை எடுத்து, மனைவியை கருத்தரிக்க வைக்கலாம்.
செக்ஸ் தொடர்பான கிட்டத்தட்ட எல்லா பிரச்னைகளுக்கும், இன்றைக்கு தீர்வுகள் இருக்கின்றன. அவற்றைப் பயன்படுத்தி, நிம்மதியாக உங்கள் செக்ஸ் வாழ்க்கையை அனுபவியுங்கள் என்கிறார் டாக்டர் காமராஜ்.













